மாலை நேர திண்பண்டம் அவல் போண்டா செய்வது எப்படி ?

அவல் போண்டா

சுவையான அவல் போண்டா (Aval Bonda) செய்யலாம் வாங்க..!

வீட்டில் சுவையான மற்றும் ஆரோக்கியமான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த அவல் போண்டா (aval bonda) எப்படி செய்வது என்பதை பற்றியும், அவல் நன்மைகள் பற்றியும் இந்த பகுதியில் நாம் காண்போம்.

அவல் போண்டா (Aval Bonda) செய்ய தேவைப்படும் பொருட்கள்:

 1. அவல் – ஒரு கப்
 2. வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
 3. கடலை மாவு – 1/2 கப்
 4. பச்சை மிளகாய் – 3
 5. மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
 6. வெங்காயம் – 2 (பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்)
 7. கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு (பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்)
 8. சாட்மசாலா – ஒரு ஸ்பூன்
 9. இஞ்சி – ஒரு துண்டு (பொடிதாக நறுக்கிவைத்துக்கொள்ளவும்)
 10. தேவையான அளவு – உப்பு
 11. எண்ணெய் – 1/2 லிட்டர்

இப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..!

அவல் போண்டா (Aval Bonda) செய்முறை:

அவல் போண்டா (aval bonda) செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அவற்றில் ஒரு கப் அவல் சேர்க்கவும்.

பின்பு அவற்றில் வேகவைத்த உருளை கிழங்கை சேர்த்து நன்றாக மசித்து விடவும்.

பின்பு நறுக்கிவைத்துள்ள இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக பிசைந்து விடவும்.

பிறகு அவற்றில் 1/2 கப் கடலைமாவு, ஒரு ஸ்பூன் சாட்மசாலா, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும்.

இறுதியாக பொடிதாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து பிசைய வேண்டும்.

அதன் பிறகு சிறு சிறு உருண்டைகளாக இந்த மாவை உருட்டி, ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

அதன் பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடேறியதும் அவற்றில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

அவ்வளவு தான் சூடான சுவையான அவல் போண்டா (aval bonda) தயார்.

இந்த அவல் போண்டா (aval bonda) மாலை நேர தின்பண்டங்களாக செய்து சாப்பிடலாம்.

அவல் நன்மைகள்:

இந்த வெள்ளை அவல் தூயமல்லி போன்ற வெள்ளை நிற அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், அதிக கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இந்த வெள்ளை அவல் நன்மைகள் பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

உங்கள் சப்பாத்தி பஞ்சி போல சாஃப்டா உப்பி வர இப்படி try பண்ணுங்க..!

வெள்ளை அவல் நன்மைகள்:

எளிதில் செரிமானமாகும்.

உடனடி எனர்ஜி தரும்.

சமைப்பதற்கு எளிதானது.

உடல்சூட்டைத் தணிக்கும்.

செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும்.

உடல் எடையைக் குறைக்கும்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

சிவப்பு அவல் நன்மைகள்:

இந்த சிவப்பு அவல் பிசினி போன்ற சிவப்பு அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஆந்தோசயனின் (Anthocyanin) என்னும் நிறமி அவலின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. இதற்குக் காரணம், பட்டை தீட்டப்படாத சிவப்பரிசியில் இது தயாரிக்கப்படுவது தான்.

இந்த சிவப்பு அவல் சாப்பிடும்போது நீண்ட நேரங்கள் வரை பசிக்காது.

உடலை உறுதியாக்கும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பசியைப் போக்கும்.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவும்.

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். ரத்தச்சோகை வராமல் காக்கும்.

மூளைச் செல்களைப் புத்துணர்ச்சியாக்கும்.

புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களைக் குடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும்.

வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.

பட்டை தீட்டப்படாத அரிசியில் தயாரிக்கப்படுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.

சுவையான சேமியா பிரியாணி செய்யலாம் வாங்க..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

SHARE