Banana Cake Recipe in Tamil
பள்ளி விட்டு வீட்டுக்கு திரும்பி வரும் உங்களின் குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையான ஸ்னாக்ஸ் செய்து தர வேண்டும். அதிலும் அந்த ஸ்னாக்ஸ் அவர்களுக்கு பிடிக்கின்ற வகையிலும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளதா..?
அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள வாழைப்பழத்தை வைத்து மிகவும் அருமையான மற்றும் மிகவும் ருசியான ஒரு கேக் ரெசிபி எவ்வாறு செய்வது என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Banana Sweet Recipe in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- வாழைப்பழம் – 2
- வெண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை – 1 கப்
- கோதுமை மாவு – 2 கப்
- பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
- உப்பு – 1 சிட்டிகை
- பால் – 1/2 கப்
- பாதாம் – 10
- பிஸ்தா – 10
- முந்திரி – 10
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வீட்டில் வாழைப்பழம் இருக்குதா அப்போ இந்த மாதிரி ருசியான ரெசிபியை செஞ்சி பாருங்க
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள 2 வாழைப்பழத்தையும் அதனின் தோலினை நீக்கி சேர்த்து நன்கு மசித்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 6 டேபிள் ஸ்பூன் வெண்ணெய், 1 கப் சர்க்கரை மற்றும் 1 சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா அப்போ இந்த ரெசிபியை ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள்
ஸ்டேப் – 3
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் கோதுமை மாவு, 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1/2 கப் பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பிறகு அதனின் மீது நாம் எடுத்து வைத்துள்ள 10 பாதாம், 10 பிஸ்தா மற்றும் 10 முந்திரி பொடி பொடியாக நறுக்கி தூவி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள கேக் கலவை பாத்திரத்தை வைத்து மூடியை போட்டு மூடி 10 நிமிடங்கள் கழித்து எடுத்தீர்கள் என்றால் நமது தயாராகிவிடும்.
இதனை அனைவருக்கும் பரிமாறலாம். இந்த Banana Cake ரெசிபியை நீங்களும் தயார் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை செய்து கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் மீண்டும் செய்து தருமாறு கேட்டு கொண்டே இருப்பார்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்க வீட்ல பிரட் இருக்கா அப்போ இந்த ரெசிபி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |