வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பீட்ரூட் வேணாம் என்று சொல்கிறவர்களுக்கு இப்படி செஞ்சு கொடுங்க..

Updated On: April 19, 2024 4:53 PM
Follow Us:
Beetroot Rasam Recipe in Tamil
---Advertisement---
Advertisement

Beetroot Rasam Recipe in Tamil

காய்கறிகளில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆனால் நாம் தான் காய்கறிகளை சாப்பிடுவதில்லை. பிடித்த காய்கறியை விட பிடிக்காத காய்கறிகள் தான் அதிகம் இருக்கின்றது. அப்படி பிடிக்காத ஒரு உணவுப்பொருள் என்றால் அது பீட்ரூட் தான். ஆனால் இந்த பீட்ரூட்டில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் இந்த பீட்ரூட்டை உங்களின் குழந்தைகளுக்கு அளிக்கும் பொழுது அவர்களுக்கு அது பீட்ரூட் என்றே தெரியக்கூடாது. அப்பொழுது தான் அவர்கள் அதனை சாப்பிடுவார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் பீட்ரூட் ரசம் வைப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

பீட்ரூட் ரசம் செய்ய தேவையான பொருட்கள்:

பீட்ரூட் =1
மிளகு =அரை தேக்கரண்டி
சீரகம் =1 தேக்கரண்டி
சோம்பு =1 தேக்கரண்டி
பூண்டு =10 பள்ளு
எண்ணெய் =3 தேக்கரண்டி
புளி =எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் =அரை தேக்கரண்டி
தக்காளி =2
காய்த்த மிளகாய் =1
பச்சை மிளகாய் =2
கொத்தமல்லி இலை ,கருவேப்பிலை =சிறிதளவு

பீட்ரூட் ரசம் செய்முறை:

பீட்ரூட் டின் தோலை நீக்கி விட்டு சின்னதாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு இதனை  மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து வடிக்கட்டி கொள்ள வேண்டும்.

பிறகு சீரகம் ,மிளகு, சோம்பு, காய்ந்த மிளகாய் எல்லாம்  மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். இதனுடன் பூண்டு சேர்த்து லேசாக அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்துஅவை பொரிந்ததும் கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதுகளையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும்.

பீட்ரூட் பிடிக்காதவர்களுக்கு கூட இப்படி செய்து கொடுத்தால் வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள்

அதன் பிறகு சிறிதளவு மஞ்சள் தூள், புளி கரைசல் மற்றும் வடிக்கட்டி வைத்த பீட்ரூட் சாற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். இதனுட தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். ஒரு கொதி கொதித்து நுரை வந்தான் பிறகு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி விட வேண்டும்.

ஒருமுறை செய்து பாருங்க, மறுபடியும் மறுபடியும் செய்யும் சொல்லி கேட்பார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil

முருகருக்கு பிடித்த திருப்பாகம் செய்வது எப்படி.?

இதை சாப்பிட்ட ஒரே வாரத்தில் உடலில் உள்ள கொழுப்பு சரசரவென்று குறையும்.!