உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா அப்போ இந்த மாதிரி பீட்ரூட் வத்தல் செய்து சாப்பிட்டு பாருங்கள்..!

Beetroot Vadam in Tamil

பொதுவாக உடலுக்கு அதிக சத்துக்களை அளிக்கக்கூடிய இந்த பீட்ரூட்டை குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடமாட்டார்கள். அப்படி உங்கள் குழந்தைகளும் இந்த பீட்ரூட்டை விரும்பி சாப்பிட மறுக்கிறார்கள் என்றால் பரவாயில்லை. இந்த பதிவில் கூறியுள்ள பீட்ரூட் வத்தல் ரெசிபியை அவர்களுக்கு ஒரு முறை செய்துக் கொடுத்துப் பாருங்கள். பின்னர் அவர்களே இதனை மீண்டும் மீண்டும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

இதனால் உங்களுக்கு உங்களின் குழந்தைகளுக்கு பீட்ரூட்டின் சத்துக்களை அளித்துவிட்டு மனத்திருப்தியும் கிடைக்கும். அவர்களுக்கு மிகவும் ருசியான ஒரு வத்தல் சாப்பிட்ட மகிழ்ச்சியும் கிடைக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பீட்ரூட் வத்தல் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துகொளுந்தங்கள்.

இதையும் படியுங்கள்=> வீட்டில் பீட்ரூட் ,சேமியா இருக்கா..? அப்போ இதை செய்து பாருங்கள்..!

Beetroot Vadagam Recipe in Tamil:

Beetroot Vadam in Tamil

முதலில் இந்த பீட்ரூட் வத்தல் செய்ய தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பீட்ரூட் – 2
  2. சாதம் – 2 கப் 
  3. சீரகம் – 2 டீஸ்பூன் 
  4. மிளகு – 2 டீஸ்பூன் 
  5. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  6. உப்பு – தேவையான அளவு 

செய்முறை:

ஸ்டேப் -1 

முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 2 பீட்ரூட்டின் தோல்களை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

இதனுடனே 2 கப் சாதம், 2 டீஸ்பூன் சீரகம், 2 டீஸ்பூன் மிளகு, 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வடகம் பிழிந்து கூழ் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

ஸ்டேப் – 3

Beetroot vathal

பின்னர் நன்கு வெயில்படும் இடத்தில் ஈரத்துணியை விரித்து அதில் வடகம் பிழியும் அச்சினை கொண்டு நாம் அரைத்துவைத்துள்ள கூழ் அனைத்தையும் பிழிந்துக் கொள்ளுங்கள்.

பிறகு நாம் பிழிந்த வடகம் நன்கு காய்ந்த பிறகு அதனை அந்த துணியில் இருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து குழந்தைகளுக்கு கொடுங்கள் அவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த பீட்ரூட் வத்தல் ரெசிபியை நீங்களும் உங்களின் குழந்தைகளுக்கு செய்துகொடுத்து பாருங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்-> Samayal kurippu tamil