பிஸ்கட் கேக் செய்வது எப்படி? | Biscuit Cake Recipe in Tamil

Advertisement

பிஸ்கட் கேக் செய்வது எப்படி இன் தமிழ் – Biscuit Cake in Tamil

கேக் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ஆகும். பொதுவாக இந்த கேக்கினை கிருஸ்துமஸ் பண்டிகை அன்று தயார் செய்து அசத்துங்கள். அந்த வகையில் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு ஏளிதான வகையில் சுவையான பிஸ்கட் கேக் செய்யும் முறை பற்றிப் பதிவில் பார்ப்போம் வாங்க.

பிஸ்கட் கேக் எப்படி செய்வது – தேவையான பொருட்கள்:

  1. ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் – நான்கு பாக்கெட் 
  2. ENO – ஒன்று பாக்கெட் 
  3. சர்க்கரை – இரண்டு ஸ்பூன் 
  4. பால் – 1/2 கப் 

பிஸ்கட் கேக் செய்முறை – Biscuit Cake Recipe in Tamil :

ஸ்டேப்: 1

முதலில் கேக் டின்னை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் நெய் அல்லது வெண்ணெயை தடவி பட்டர் சீட் செட் செய்து கேக் செய்ய தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பின் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் நான்கு பாக்கெட் ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் மற்றும் இரண்டு ஸ்பூன் சர்க்கரை இரண்டையும் சேர்த்து பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

பின் அரைத்த பிஸ்கட் பவுடரை ஒரு சுத்தமான பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள்.

இப்பொழுது 1/2 கப் பாலினை பிஸ்கட் பவுடரில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்துவிட வேண்டும். இந்த கலவையானது ரொம்பவும் கெட்டியான பாதத்திலும் இருக்க கூடாது, அதேபோல் ரொம்ப தண்ணியாகவும் இருக்கக்கூடாது. ஆகவே நடுத்தரமாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

இறுதியக ஒரு பாக்கெட் ENO சேர்த்து கலந்துவிட வேண்டும். அவ்வுளவுதான் கேக் செய்ய கேக் மாவு தயார். இந்த கலவையை கேக் டின்னில் சேர்த்து செட் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 5

பின்பு அடுப்பில் பிரஷர் குக்கர் வைத்து அவற்றில் சிறிதளவு கல் உப்பை கொட்டிவிட வேண்டும், பின் அதன் மேல் ஒரு சிறிய பாத்திரம் அல்லது சிறிய ஷ்டான்ட் வைத்து, அதன் மேல் இந்த கேக் டின்னை வைக்க வேண்டும்.

ஸ்டேப்: 6

பின்பு பிரஷர் குக்கரை மூடி, குறைந்தது 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் வரை அடுப்பை மிதமான சூட்டில் நன்றாக வேகவைக்க வேண்டும்.

பிறகு 45 நிமிடங்கள் கழித்து கேக்கை அடுப்பில் இருந்து இறக்கி, கேக் டின்னை மெதுவாக எடுக்க வேண்டும்.

ஸ்டேப்: 7

பின் கேக் டின்னின் ஓரங்களை கத்தியை பயன்படுத்தி கீறிவிடுங்கள், பிறகு ஒரு சுத்தமான பிளேட்டில் கேக்கினை மாற்றிக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் சுவையான பிஸ்கட் கேக் தயார் இந்த கிருஸ்துமஸ்க்கு செய்து அசத்துங்கள் மிகவும் சாப்டாகவும், டேஸ்ட்டியாகவும் இருக்கும்.

குறிப்பு:

ஹாப்பி ஹாப்பி பிஸ்கெட்டுக்கு பதில் தங்களுக்கு பிடித்த பிஸ்கட்டுகளும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பேக்கரி ஸ்டைல் ஹனி கேக் செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement