குலாப் ஜாமுன் ரெசிபி
வணக்கம் நண்பர்களே இன்று நம் சமையல் பதிவில் தீபாவளிக்கு கடைக்கு சென்று மாவு வாங்காமல் மிகவும் சுவையாக வீட்டில் எப்படி செய்வது என்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். உங்கள் வீட்டு தீபாவளியை ஆனந்தமாக கொண்டாடுவதற்கு கட்டயாம் இனிப்பு அவசியம். ஆரோக்கியத்துடன் தீபாவளியை கொண்டாட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு குலாப் ஜாமுன் எப்படி செய்வது என்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.
விரிசல் இல்லாமல் குண்டு குண்டு குலாப் ஜாமுன் செய்யணுமா? அப்போ இந்த டிப்ஸை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..! |
குலாப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்:
- பால்-8 டேபிள் ஸ்பூன்
- பிரெட் -8 துண்டுகள்
- சர்க்கரை – 1 1/2 கப்
- எண்ணெய் -தேவையான அளவு
குலாப் ஜாமுன் மாவு செய்வது எப்படி:
உங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண பிரட் அல்லது கோதுமை பிரட் போன்ற எந்த பிரட்டாக இருந்தாலும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் பிரட்டை துண்டு துண்டாக கட் செய்துகொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு மிக்ஸி எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் பிரட்டை தூளாக எடுத்து கொள்ளவேண்டும்.
பிறகு பிரட் தூளை ஒரு கிண்ணத்தில் கொட்டி அதில் பால் சேர்த்து சப்பாத்தி மாவு பிணைவது போல பிணைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மாவை பிசையும் பொழுது கெட்டியான பதம் கிடைக்கும். அதன் பிறகு கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் கொஞ்சம் கையில் தேய்த்து கொண்டு மாவை சிறிய சிறிய உருண்டையாக செய்து வைக்கவேண்டும்.
குலாப் ஜாமுன் செய்வது எப்படி:
குலாப் ஜாமுன் செய்வதற்கு சர்க்கரை பாவை முதலில் தயாரித்து வைக்கவேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு உங்களுக்கு தேவையான அளவு பாகுவிற்கு தகுந்தது போல தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அதில் சர்க்கரையை கலந்து மிதமான சூட்டில் வைத்து கலந்து கொண்டே இருக்கவேண்டும். பாவை அதிகமாக கொதிக்கவிட கூடாது. அந்த கலவை கொஞ்சம் கெட்டியாக வந்தாலே போதும், சரியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து கொள்ளவேண்டும்.
பாவு ரெடி ஆனதும் ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். நாம் உருட்டி வைத்த உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக பொறித்து ஒரு பாத்திரத்தில் தனியாக வைக்க வேண்டும். பொறித்த உருண்டையில் எண்ணெய் அதிகமாக இருந்தால் அதை ஒரு பேப்பரில் ஒத்தி எடுக்கவேண்டும்.
பிறகு தயார் செய்து வைத்திருந்த பாவில் ஜாமுன் உருண்டைகளை சேர்த்து 2 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும். பாவில் ஊறிய பிறகு இனிப்புகள் இறங்கி குலாப் ஜாமுன் மிகவும் சுவையாக இருக்கும். இப்பொழுது இதை எல்லோருக்கும் பரிமாறி உங்களுடைய தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |