சுவையான முட்டைகோஸ் கறி சமையல்..! Cabbage curry in tamil..!
வணக்கம் நண்பர்களே இன்று நாம் முட்டைகோஸை வைத்து வித்தியாசமான மற்றும் சுவையான முட்டைகோஸ் கறி எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறிவோம். இந்த முட்டைகோஸ் கறி ரெசிபியை (cabbage curry recipe) இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சரி வாங்க முட்டைகோஸ் கறி செய்யவது எப்படி (cabbage curry recipe in tamil) என்று இப்பொழுது நாம் தெரிந்துகொள்ளலாம்.
அய்யர் வீட்டு பருப்பு பொடி செய்முறை விளக்கம்..! |
முட்டைகோஸ் கறி (cabbage curry recipe in tamil) செய்ய தேவையான பொருட்கள்:
- முட்டைகோஸ் – 250 கிராம் (பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்)
- பெரிய வெங்காயம் – இரண்டு (பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும்)
- தக்காளி – இரண்டு (பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும்)
- பச்சை மிளகாய் – 2, பூண்டு – 4 பற்கள், இஞ்சி – ஒரு இஞ் அளவிற்கு (இவை மூன்றாயும் ஒன்றாக சேர்த்து நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும்)
- எண்ணெய் – தேவையான அளவு
- பச்சை மிளகாய் – 2 பொடிதாக நறுக்கியது
- உப்பு – தேவையான அளவு
- முட்டை – 4
- மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
- ஏலக்காய் – 3
- கிராம்பு – 3
- லவங்கப்பட்டை – 2
- பிரியாணி இலை – 1
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
- சீரகம் தூள் – 1 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1 டீஸ்பூன்
- கஸ்தூரி மேத்தி – சிறிதளவு
ரோட்டுக்கடை சிக்கன் ரைஸ் செய்வது எப்படி? |
முட்டைகோஸ் கறி சமையல் செய்முறை / Easy cabbage curry recipe in tamil: 1
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் பொடிதாக நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸினை சேர்க்கவும், பின் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள். பிறகு சிறிதளவு தண்ணீர் தெளித்து விட்டு 3/4 பதத்திற்கு தண்ணீர் வற்றும் வரை முட்டைகோஸை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் வேகவைத்த இந்த முட்டைகோஸை நன்கு ஆறவிட வேண்டும்.
முட்டைகோஸ் கறி சமையல் செய்முறை / Easy cabbage curry recipe in tamil: 2
பின்பு ஒரு பவுலில் நான்கு முட்டையை உடைத்து ஊற்றிக்கொள்ளுங்கள், அதனுடன் 1/2 டீஸ்பூன் மிளகு தூள், பொடிதாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
முட்டைகோஸ் கறி சமையல் செய்முறை / Easy cabbage curry recipe in tamil: 3
இவ்வாறு கலந்த முட்டை கலவையை வேகவைத்து ஆறவைத்துள்ள முட்டைகோசுடன் சேர்த்து நன்கு நுரை வரும் அளவிற்கு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் இந்த கலவையை ஒரு பெரிய டிபன் பாக்சில் ஊற்றி நன்றாக சமன்படுத்துங்கள், பின் டிபன் பாக்ஸை மூடி கொள்ளுங்கள்.
முட்டைகோஸ் கறி சமையல் செய்முறை / Easy cabbage curry recipe in tamil: 4
இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள், பின் அவற்றில் ஒரு ஸ்டாண்ட் வைத்து, அதன் மீது டிபன் பாக்ஸை வைக்க வேண்டும்.
பின் குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
முட்டைகோஸ் கறி சமையல் செய்முறை / Easy cabbage curry recipe in tamil: 5
இவ்வாறு வேகவைத்த கலவையை டிபன் பாக்சில் இருந்து தனியாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள முட்டையினை எண்ணெயில் சேர்த்து 3 இருந்து 4 நிமிடங்கள் பொரிதெடுக்கவும்.
முட்டைகோஸ் கறி சமையல் செய்முறை / Easy cabbage curry recipe in tamil: 6
பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும் மூன்று ஏலக்காய், மூன்று கிராம்பு, ஒரு பிரியாணி இலை மற்றும் லவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து 30 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு இடித்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாவை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
முட்டைகோஸ் கறி சமையல் செய்முறை / Easy cabbage curry recipe in tamil: 7
பின் அரைத்து வைத்துள்ள வெங்காயம் பேஸ்ட்டினை இவற்றில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள், பின் தக்காளி பேஸ்ட்டினை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடாயை மூடி 5 நிமிடங்கள் நன்கு வேகவைத்துக் கொள்ளுங்கள்.
முட்டைகோஸ் கறி சமையல் செய்முறை / Easy cabbage curry recipe in tamil: 8
வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு சுருள வதங்கியதும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் மிளகாய் தூள், மல்லித்தூள் 2 டீஸ்பூன், சீரகம் தூள் 1 டீஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடங்கள் இந்த மசாலாக்களை நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
பிறகு இந்த கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதாவது ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க விடுங்கள். பின் கரம் மசாலா 1 டீஸ்பூன் மற்றும் சிறிதளவு கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள்.
முட்டைகோஸ் கறி சமையல் செய்முறை / Easy cabbage curry recipe in tamil: 9
பிறகு பொரித்து வைத்துள்ள முட்டை துண்டுகளை நிதானமாக கிளறிவிடுங்கள். இறுதியாக பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி 10 நிமிடங்கள் கிரேவியை கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான முட்டைகோஸ் கறி தயார்.
இந்த முட்டைகோஸ் கறி ரெசிபி (cabbage curry recipe) செய்வதற்கு கொஞ்சம் வேலை அதிகம் என்றாலும், சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் நிச்சயம் ஒருமுறை உங்கள் வீட்டில் ட்ரைசெய்து பாருங்கள் நன்றி..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |