முட்டைகோஸ் இருந்தா போதும்.. ரோட்டுக்கடை காளான் நீங்களே செய்யலாம்..!

Advertisement

முட்டைகோஸ் காளான் செய்வது எப்படி? | Cabbage Kalan Recipe in Tamil

பானிபூரியை விட அதிகளவு ட்ரெண்டிங்கில் இருப்பது இப்போது காளான் தான். அந்த அளவிற்கு காளான் பிரியர்கள் அதிகமாகிவிட்டார்கள். பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம் என்று விரும்பி சாப்பிடும் அளவிற்கு காளான் உள்ளது. இந்த காளானை நாம் ரோட்டு கடையில் மட்டும்தான் வாங்கி சாப்பிட்டுருப்போம். இதனை நாமே ஈசியாக வீட்டிலே செய்யலாம். காளான் செய்வது அவ்வளவு பெரிய விஷயம் இல்லைங்க.. நினைத்த உடனே ஈஸியா செய்யலாம். வாங்க முட்டைகோஸ் வைத்து ரோட்டு கடை சுவையில் டேஸ்டியான முட்டைகோஸ் காளான் எப்படி செய்யலாம்னு தெரிஞ்சிக்கலாம்..

ரோட்டுக்கடை காளான் இனி வீட்டிலேயே செய்யலாம்

Roadside Kaalan Receipe in Tamil – தேவையான பொருள்:

  • முட்டைகோஸ் – பொடிதாக நறுக்கியது (150 கிராம்)
  • மைதா மாவு – 1 கப்
  • சோள மாவு – 1/2 கப்
  • தனி மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • புட் கலர் – தேவைப்பட்டால்
  • எண்ணெய் – பொரித்து எடுக்கும் அளவிற்கு (3 டேபிள் ஸ்பூன்)
  • வெங்காயம் – 1 நறுக்கியது
  • பச்சை மிளகாய் – நறுக்கியது 1
  • கருவேப்பிலை – 1 கொத்து
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
  • சோயா சாஸ் – 1 ஸ்பூன்
  • கரமசாலா – 1/2 ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

ஸ்டேப்: 1

Cabbage Kalan Recipe in Tamil

முதலில் முட்டைகோஸை பொடிதாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் மைதா மாவினை சேர்த்து தண்ணீர் சிறிதளவு சேர்த்து தளதளவென்று பிசைந்துகொள்ளவும்.

ஸ்டேப்: 2

Cabbage Kalan Recipe in Tamil

அடுத்து சோள மாவினை 1/2 கப் சேர்த்து பிறகு காரத்திற்காக தனி மிளகாய்த்தூள் 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

காளான் கிரேவி செய்வது எப்படி?

 

ஸ்டேப்: 3

 முட்டைகோஸ் காளான் செய்வது எப்படி

இப்பொது கடாயில் எண்ணெயை ஹீட் செய்யவும். எண்ணெய் நன்றாக ஹீட் ஆனதும் பிசைந்து வைத்ததை உருண்டையாக உருட்டி பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

ஸ்டேப்: 4

 ரோட்டு கடை முட்டைகோஸ் காளான் செய்வது எப்படி

பொரித்து எடுத்த பிறகு உதிரி உதிரியாக பிரித்து தனியாக எடுக்கவும். அடுத்து கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வெங்காயம், நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் 1, கருவேப்பிலை 1 கொத்து சேர்த்து லேசாக வதக்கிவிடவும்.

ஸ்டேப்: 5

 ரோட்டு கடை முட்டைகோஸ் காளான் செய்வது எப்படி

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

ஸ்டேப்: 6

 ரோட்டு கடை முட்டைகோஸ் காளான் செய்வது எப்படி

அடுத்து காரத்திற்காக 1 ஸ்பூன் மிளகாய்த்தூளை சேர்க்கவும். அதனுடன் மஞ்சள் தூள் கால் ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கிவிடவும்.

பானி பூரி வீட்டிலேயே செய்யலாமா ?

 

ஸ்டேப்: 7

நன்றாக வதங்கியதும் பொரித்து எடுத்த தனியாக வைத்துள்ள முட்டைகோஸை இதில் சேர்த்துகொள்ளவும்.

ஸ்டேப்: 8

 முட்டைகோஸ் காளான் செய்வது எப்படி

அடுத்ததாக தக்காளி சாஸ் 2 ஸ்பூன், 1 ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். அதனுடன் சோள மாவில் தண்ணீர் சேர்த்து அதில் சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 9

 ரோட்டு கடை முட்டைகோஸ் காளான் செய்வது எப்படி

இறக்கும் முன்பு கரமசாலாவினை சேர்த்துக்கொள்ளவும். தனியாக ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளவும். இப்போது பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதன் மேல் தூவிவிடவும். அடுத்ததாக பொடிதாக நறுக்கி வைத்துள்ள புதினா கொத்தமல்லி இலையை தூவவும். ரோட்டுக்கடை ஸ்டைலில் முட்டைகோஸ் காளான் ரெடியாகிட்டு..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement