ருசியான கேரட் குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி?

Advertisement

கேரட் குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி:

இப்போது மழைக்காலம் வேற துவங்கிவிட்டது. எனவே மதிய உணவுக்கு அல்லது இரவு உணவுக்கு நாக்குக்கு ருசியாக, எதாவது உணவு செய்து சாப்பிடலாம் என்று நினைப்பீர்கள், எனவே இந்த கேரட் குடைமிளகாய் சாதம் செய்து அசத்தலாம் வாங்க.

இந்த சாதம் மிகவும் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த கேரட் குடைமிகளாய் சாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாகும்.

சுவையான மொறு மொறு கட்லெட் செய்முறை..!

 

சரி வாங்க கேரட் குடைமிளகாய் சாதம் எப்படி செய்வது என்று இவற்றில் நாம் காண்போம்.

தேவையான பொருட்கள்:

  1. துருவிய கேரட்- 2 கப்
  2. நறுக்கிய குடைமிளகாய்- அரை கப்
  3. வேக வைத்த சாதம்- 2 கப்
  4. அரிந்த பச்சைமிளகாய்- 2
  5. அரிந்த மிளகாய் வத்தல்-2
  6. காய்ந்த மல்லி- 2 டீஸ்பூன்
  7. கொண்டைக்கடலை- 2 டீஸ்பூன்
  8. உளுந்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
  9. கடுகு- அரை டீஸ்பூன்
  10. மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்
  11. பெருங்காயம் – கால் டீஸ்பூன்
  12. சர்க்கரை- கால் டீஸ்பூன்
  13. உப்பு- தேவையான அளவு
  14. கொத்துமல்லித் தழை- கால் கப்
  15. எண்ணெய்- 3 அல்லது 4 டீஸ்பூன்
  16. நெய்- அரை டீஸ்பூன்
செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை..!

கேரட் குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி: 1

வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பை ஏற்றவும். எண்ணெய் காய்ந்தபின் காய்ந்த மல்லி, கொண்டைக்கடலை, மிளகாய் வத்தலை சேர்த்து வறுக்கவும்.

இறக்கி வைத்து சூடு ஆறியபின் மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி வைக்கவும்.

மீண்டும் அதே வாணலியில் எண்ணெய், நெய் விட்டு கடுகை போடவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, அரிந்த பச்சைமிளகாய், குடைமிளகாய் இட்டு சிறிது வறுக்கவும்.

கேரட் குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி: 2

அத்துடன் கேரட் துருவல், மஞ்சள்தூள் உப்பு, சர்க்கரை, பெருங்காயம் மற்றும் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்க்கவும். மிதமான சூட்டில் 2 நிமிடங்கள் விடவும்.

இத்துடன் சாதத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.

கேரட் குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி: 3

தயாரான கேரட் குடைமிளகாய் சாதத்தின் மேல் கொத்துமல்லித் தழையை தூவி பரிமாறவும்.

மிகுந்த வாசனையுடன் அருமையான சுவை நிறைந்த கேரட் குடைமிளகாய் சாதம் தயார். இந்த சாதத்துக்கு வெண்டைக்காய் தயிர்ப்பச்சடி சரியான காம்பினேஷன்.

சுவையான சமையல் முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!
Advertisement