Cauliflower Pickle Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் சமையல் பதிவில் தினமும் சுவையான சமையல் குறிப்புகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய சமையல் பதிவில் அனைவருக்கும் பிடித்த காலிபிளவரை வைத்து எப்படி ஊறுகாய் செய்வது என்பதை பார்க்கப்போகிறோம். பொதுவாக ஊறுகாய் என்றாலே அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊரும். என்னதான் வகை வகையான கூட்டு வைத்து சாப்பிட்டலும் சிறிதளவு ஊறுகாய் வைத்து சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல் இருக்கும். ஊறுகாயில் பல வகைகள் உள்ளது. அந்த வகைகளில், இன்று நாம் அனைவருக்கும் பிடித்த காலிஃபிளவர் ஊறுகாய் செய்வது எப்படி என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Make Cauliflower Pickle in Tamil:
காலிஃபிளவர் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:
- காலிஃபிளவர்- 1
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- கடுகு- 2 ஸ்பூன்
- நல்லெண்ணெய்- 4 ஸ்பூன்
- பூண்டு- 15 பற்கள்
- மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள்- 4 ஸ்பூன்
- தூள் உப்பு- 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 பழம்
10 நிமிடத்தில் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி..!
காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை:
ஸ்டேப் -1
முதலில் காலிஃபிளவரின் அடிப்பகுதினை நீக்கி விட்டு, சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். இதனுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
ஸ்டேப் -3
இதனுடன் நறுக்கி வைத்த காலிஃபிளவரை சேர்த்து 2 நிமிடம் கொதித்த பிறகு இறக்கி வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
இப்போது, ஒரு கடாயில் 2 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் 2 ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விட்டு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
பிறகு, வறுத்த வைத்த வெந்தயம் மற்றும் கடுகினை தனித்தனியாக மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -6
இப்போது, ஒரு அகலமான கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் உரித்த பூண்டு பற்களை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பிறகு, இதனுடன் உப்பு, மிளகாய் தூள், பொடியாக அரைத்த வெந்தய தூள் மற்றும் கடுகு தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெய்யில் நன்றாக கலந்து விடுங்கள்.
1 நிமிடத்தில் கொத்தமல்லி ஊறுகாய் இந்த ரகசியம் யாருக்கு தெரியும்..!
ஸ்டேப் -7
இவை அனைத்தும் எண்ணெயில் நன்றாக கலந்த பிறகு, அடுப்பை குறைவான தீயில் வைத்து சுத்தம் செய்து வைத்துள்ள காலிபிளவரை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
ஸ்டேப் -8
இப்போது அடுப்பை ஆஃப் செய்து விட்டு எலுமிச்சை சாற்றினை சேர்த்து 3 மணிநேரம் வரி ஊறவைத்து எடுத்தால் சுவையான காலிஃபிளவர் ஊறுகாய் தயார்.! இதனை பிரிட்ஜில் வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |