கொண்டைக்கடலை பிரியாணி செய்வது எப்படி..? | Chana Biryani Recipe in Tamil
கொண்டைக்கடலையில் புரதசத்து, நார்சத்து, மாவுச்சத்து போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய பல சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த கொண்டைக்கடலையை வைத்து நீங்கள் பிரியாணி செய்திருக்கிறீர்களா? வாருங்கள் வீடே மணக்கும் அளவிற்கு அருமையான கொண்டைக்கடலை பிரியாணி செய்வது எப்படி? என்று இப்பதிவில் பார்ப்போம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கொண்டைக்கடலை பிரியாணி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
- அரிசி – 1 டம்ளர்
- கொண்டைக்கடலை- 1/2 டம்ளர்
- எண்ணெய் – 50 மில்லி
- வெங்காயம் – 3
- தக்காளி – 3
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
- மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
- சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் (காரத்திற்கு ஏற்றவாறு)
- தயிர் – 2 ஸ்பூன்
- நெய் – 1 ஸ்பூன்
- கொத்தமல்லி, புதினா – தேவையான அளவு
வீட்டிலேயே பிரியாணி மசாலா செய்யலாம் அதற்கு தேவையான பொருட்கள்..!
பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
- பட்டை – 1
- பிரிஞ்சு இலை – 1
- ஏலக்காய் – 2
- கிராம்பு – 3
- சோம்பு – 1 ஸ்பூன்
- கசகசா – 1/2 ஸ்பூன்
- அன்னாசி பூ – 3
இவை அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
Chana Biryani Recipe in Tamil
ஸ்டேப்- 1
முதலில் அரிசி மற்றும் கொண்டைக்கடலையை தனித்தனியாக நன்றாக கழுவி விட்டு 20 நிமிடம் ஊறவைத்து எடுத்துகொள்ளுங்கள். பிறகு ஊறவைத்த கொண்டைக்கடலையை கழுவி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் அரைத்து வைத்த பிரியாணி மசாலாவை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதில் வெங்காயம் சேர்த்து அது பொன் நிறமாக வரும் வரை வதக்கி கொள்ளவும்.
ஸ்டேப்- 3
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஸ்டேப்- 4
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் போன்றவற்றை போட்டு நன்றாக கலந்து விடவும். பிறகு அதனுடன் தயிர், கொத்தமல்லி, புதினா இவற்றை சேர்த்து கொள்ளவும். அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
ஸ்டேப்- 5
பிறகு ஊறவைத்த கொண்டைக்கடலையை போட்டு மசாலாவுடன் நன்றாக கலந்து விடவும். 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடிவைத்து கொதிக்க விட வேண்டும். அடுப்பில் உள்ள பொருட்கள் கொதித்ததும் அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து கிளறிவிடவும்.
ஸ்டேப்- 6
பிறகு மூடிவைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து அடுப்பை சிம்மில் வைத்து தம் கட்டி 10 நிமிடம் கழித்து இறக்கினால் போதும் அருமையான கொண்டைக்கடலை பிரியாணி ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |