சப்பாத்தியில் இப்படி சுவையான நூடுல்ஸ் செய்து பாருங்கள்..!

Chapati Noodles Recipe in Tamil

சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி? – Chapati Noodles Recipe in Tamil..!

Chapati Noodles Recipe in Tamil – பொதுவாக நூடுல்ஸ் அப்படினாலே சிறிய குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இருமலும் நூடுல்ஸ் அதிகம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. ஆகவே நூடுல்ஸை ஆரோக்கியமா முறையில் குழந்தைகளை செய்து கொடுத்தால் க குழந்தையின் உடல்நலமும் பாதிக்கப்படும். நூடுல்ஸில் எப்படி ஆரோக்கியமாக செய்ய முடியும் என்று யோசிப்பீர்கள். நிச்சயம் ஆரோக்கியமான நூடுல்ஸ் செய்ய முடியும். அதுவும் சப்பாத்தியை பயன்படுத்தி. சரி வாங்க சப்பாத்தியில் எப்படி நூடுல்ஸ் செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

 • சப்பாத்தி – 5
 • குடை மிளகாய் – 1/2
 • முட்டை கோஸ் – அரை கப்
 • எண்ணெய் – 2 ஸ்பூன்
 • வெங்காயம் – 1
 • பச்சைமிளகாய் – 2
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன்
 • உப்பு – ஒரு ஸ்பூன்
 • மிளகு தூள் – அரை ஸ்பூன்
 • சோயா சாஸ் – ஒரு ஸ்பூன்
 • டொமேட்டோ சாஸ் – ஒரு ஸ்பூன்

சப்பாத்தி நூடுல்ஸ் செய்முறை – Chappathi Noodles Eppadi Seivadhu:

ஸ்டேப்: 1

 • முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்
 • பிறகு குடை மிளகாயை நீளமாக வெட்டி வைத்து கொள்ளுங்கள்.
 • அதன் பிறகு ஒரு கேரட்டை பொடியாக துருவிக் கொள்ள வேண்டும்.
 • பின்னர் ஐந்து சப்பாத்தியை நீளமான துண்டுகளாக மெல்லிய வடிவில் வெட்டி வைக்க வேண்டும்.
 • இறுதியாக வெங்காயம் மற்றும் இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கிக் வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

 • பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
 • எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

ஸ்டேப்: 3

 • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வெட்டி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
 • பின்னர் நறுக்கி வைத்துள்ள முட்டை கோசை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

ஸ்டேப்: 4

 • பின்னர் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
 • அதன்பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் சோயா சாஸ் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து விட வேண்டும்.

ஸ்டேப்: 5

 • பிறகு நீளத் துண்டுகளாக வெட்டி வைத்துள்ள சப்பாத்தியை சேர்த்து கலந்து விட வேண்டும்.
 • பின்னர் இறுதியாக அரை ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவு தான் சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் தயாராகிவிட்டது.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்