அப்பப்பா செட்டிநாடு சிக்கன் சுக்கா இப்படி செஞ்சா போதும் சுவை வேற லெவல்ல இருக்கும்..!

Advertisement

Chettinad Chicken Chukka Recipe

நீங்களும் எத்தனையோ வகையான அசைவ உணவுகள் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இவற்றில் ஏதாவது ஒன்றின் மீது உங்களுக்கு அதிகப்படியான விருப்பம் இருக்கும். அதனால் மற்ற உணவுகளை விட அதன் மிகவும் விரும்பி சுவைத்து சாப்பிடுவீர்கள். அந்த வகையில் சிலருக்கு சிக்கன் சுக்கா என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி இருக்கும் போது சாப்பாட்டிற்கு என்ற பெயர் பெற்ற செட்டிநாடு சிக்கன் சுக்கா வீடே மணமனக்க எப்படி செய்வது இன்று தெரிந்துக்கொண்டு உங்களுடைய வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

செட்டிநாடு சிக்கன் சுக்கா:

 சிக்கன் சுக்கா செய்வது எப்படி

செட்டிநாடு சிக்கன் சுக்கா செய்ய தேவையான பொருட்கள் மற்றும் மசாலா அரைக்க தேவையான பொருட்கள் என்னென்ன என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

  1. சிக்கன்- 1 கிலோ 
  2. மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி 
  3. தயிர்- 4 தேக்கரண்டி 
  4. நெய்- 4 தேக்கரண்டி 
  5. நறுக்கிய வெங்காயம்- 1 கப் 
  6. வெல்லம்- சிறிய துண்டு
  7. உப்பு- தேவையான அளவு 
  8. எண்ணெய்- தேவையான அளவு
  9. கருவேப்பிலை- 1 கைப்பிடி அளவு 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி வீட்டிலேயே சிக்கன் சவர்மா செய்யலாம்..!

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:

  • மிளகு- 1 தேக்கரண்டி 
  • சீரகம்- 1 தேக்கரண்டி 
  • மல்லி- 1 தேக்கரண்டி 
  • சோம்பு- 1 தேக்கரண்டி 
  • காஷ்மீர் மிளகாய்- 7
  • காய்ந்த மிளகாய்- 6
  • இஞ்சி- 1 துண்டு 
  • எலுமிச்சை சாறு- 2 தேக்கரண்டி 
  • பூண்டு- 5 பல் 
ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன்

சிக்கன் சுக்கா செய்வது எப்படி..?

செட்டிநாடு சிக்கன் சுக்கா

 

மசாலா பொருட்களை வறுத்தல்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வறுத்து அரைப்பதற்காக எடுத்துவைத்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தையும் நன்றாக பொன் நிறம் வரும் வரை வறுத்து சிறிது நேரம் ஆற வைத்து கொள்ளுங்கள்.

மிக்சி ஜாரில் மசாலா பொருட்களை சேர்த்தல்:

இப்போது வறுத்து ஆற வைத்துள்ள பொருட்களை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் எடுத்துவைத்துள்ள எலுமிச்சை சாறு, பூண்டு மற்றும் இஞ்சி இவை அனைத்தினையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து விடுங்கள்.

சிக்கனை மசாலா சேர்த்து ஊற வைத்தல்:

அடுத்து எடுத்துவைத்துள்ள 1 கிலோ சிக்கனை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பவுலில் சிக்கன் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா, தயிர் 4 தேக்கரண்டி, மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி அனைத்தினையும் சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.

கடாயில் சிக்கனை சேர்த்தல்:

கடைசியாக அடுப்பை பற்ற வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை பொன் நிறமாக வதக்கி கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஊறவைத்துள்ள சிக்கன், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிய துண்டு வெல்லம் அனைத்தையும் நன்றாக கரண்டியால் முன்னும் பின்னும் பிரட்டி கொள்ளுங்கள்.

சிக்கன் சுக்கா தயார்:

இப்போது அடுப்பில் இருக்கும் சிக்கன் நன்றாக பொன் நிறம் போல வெந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலையை சிக்கன் சுக்கா மீது தூவி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான சிக்கன் சுக்கா தயார். 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement