செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை..!

செட்டிநாடு மீன் வறுவல்

செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை (Chettinad Fish Fry Recipe In Tamil)..!

மீன் வறுவல் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் செட்டிநாடு மீன் வறுவல் தனித்தன்மை சுவையை கொண்டிருக்கும். இந்த செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை விளக்கம் மிக எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை படித்து வீட்டில் செய்து அசத்துங்கள்.

சரி வாங்க செட்டி நாடு மீன் வறுவல் செய்முறையை பற்றி இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!

சைனீஸ் ஸ்பெஷல் டிராகன் சிக்கன் செய்வது எப்படி?

செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை (Chettinad Fish Fry Recipe In Tamil)..!

தேவையான பொருட்கள்

 1. மீன் – 1/2 கிலோ
 2. சீரகம் – 1 தேக்கரண்டி
 3. கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
 4. மிளகு – 1 தேக்கரண்டி
 5. கிராம்பு – 10
 6. சிவப்பு மிளகாய் – 12
 7. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
 8. பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
 9. சிறிய வெங்காயம் – 10
 10. பூண்டு – 4 பற்கள்
 11. எண்ணெய் – தேவையான அளவு
 12. உப்பு – தேவையான அளவு

செட்டிநாடு மீன்  வறுவல் செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அவற்றில் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை, மிளகு ஒரு ஸ்பூன், கிராம்பு 10, சிவப்பு மிளகாய் 12 ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக வறுத்துக்கொள்ளவும்.

பின்பு அடுப்பில் இருந்து இறக்கி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 பெருங்காயம் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு மிக்சியில் தண்ணீர் ஊற்றாமல் பொடிதாக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும். செட்டிநாடு மீன் வறுவல் மசாலா தயார்.

பின்பு அதே மிக்சியில் 10 வெங்காயம் மற்றும் 4 பூண்டு பற்களை சேர்த்து பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும். இந்த போஸ்ட்டுடன் அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மீன் மசாலாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இப்பொழுது மீனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். அவற்றில் கலந்து வைத்துள்ள மசாலாவை மீனுடன் சேர்த்து பிசைந்து மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 1 மணி நேரமாவது ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்தால் நன்றாக இருக்கும்.

ஊற வைத்துள்ள மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும்.

இந்த முறையில் தயாரிக்கப்படும் மீன் வறுவலை,  சாம்பார் சாதம், குருமா, தனியாக சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

சிம்பிளான செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி ?
இதுபோன்று சுவைசுவையான சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்பு