செட்டிநாடு ஸ்பெஷல் காரா சட்னி வெறும் 2 நிமிடத்தில் ருசியாக செய்யலாம் வாங்க..!

Advertisement

செட்டிநாடு கார சட்னி

இட்லி, தோசை என்றாலே அனைவருக்கும் கார சட்னி தான் நியாபகம் வரும். ஏன் கார சட்னி இருந்தால் தான் சிலருக்கு இட்லி மற்றும் தோசையை சாப்பிடவே தோன்றும். அத்தகைய கார சட்னியில் நிறைய வகைகளும் உள்ளது. அதிலும் சிலருக்கு ஸ்பெஷல் சட்னி தான் பிடிக்கும் என்றும் கூறுவார்கள். அப்படி நாம் ஸ்பெஷல் சட்னி என்றவுடன் செட்டிநாடு கார சட்னி தான் நியாபகம் வரும். ஆனால் சிலருக்கு இந்த சட்னி செய்ய தெரியாமல் இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் சுவையான செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Chettinad Kara Chutney Recipe:

சொல்லும் போதே நாக்கில் சுவை தரக்கூடிய செட்டிநாடு கார சட்னி எப்படி 2 நிமிடத்தில் செய்து அசத்தலாம் என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  • காய்ந்த மிளகாய்- 15 
  • பூண்டு- 20
  • இஞ்சி- 25 கிராம்
  • பெரிய வெங்காயம்- 2
  • தக்காளி- 3
  • கடுகு- 1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு- 1/4 ஸ்பூன்
  • கருவேப்பிலை- தேவையான அளவு 
  • எண்ணெய்- தேவையான அளவு 
  • உப்பு- தேவையான அளவு 
  • கொத்தமல்லி- தேவையான அளவு 
செட்டிநாடு ஸ்டைலில் பச்சைமிளகாய் சட்னி செய்து பாருங்கள்.. 2 தோசை கூட சாப்பிடுவீங்க..

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி.?

செட்டிநாடு கார சட்னி

ஸ்டேப்- 1

முதலில் எடுத்துவைத்துள்ள பெரிய வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை தண்ணீரில் அலசி நறுக்கி வைத்துக்கொண்டு. பின்பு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இவற்றை அலசி வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து எண்ணெயினை காய விடுங்கள்.

ஸ்டேப்- 3

எண்ணெய் காய்ந்த பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி மற்றும் காய்ந்த மிளகாயினை சேர்த்து ஒரு 10 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பில் உள்ள பொருளுடன் கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு தேவையான அளவு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 5

5 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடாயில் இருக்கும் பொருளை ஆற விடுங்கள். சிறிது நேரம் கழித்த ஆறிய பொருட்களை மிக்சி ஜாரில் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 6

கடைசியாக அடுப்பை பற்ற வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து பொன் நிறமாக வரும் வரை கிண்டி விடுங்கள்.

பின்பு அரைத்து வைத்துள்ள சட்னியை அதில் சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு கார சட்னி தயார்.

தேங்காய், தக்காளி சேர்க்காத மதுரை நீர் சட்னி செஞ்சி பாருங்க 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement