செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை விளக்கம்..!

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி? (Chettinad Mutton Curry In Tamil)

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது என்பது பலருக்கும் கடினமான ஒன்றாகும். காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது.

ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை எனலாம். இந்த சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி என்பதை விரிவாக இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க.

சத்து மாவு செய்முறை அதன் பயன்கள் மற்றும் சத்து மாவு ரெசிபிஸ்..!

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி (Chettinad Mutton Curry In Tamil) – தேவையான பொருட்கள்

  1. மட்டன் – 1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம் – 20
  3. தக்காளி – 2
  4. பூண்டு – 10 பல்
  5. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  6. தேங்காய் துருவியது – 3 மேசைக்கரண்டி
  7. கசகசா – 1 தேக்கரண்டி
  8. மசாலா தூள் – 2 மேசைக்கரண்டி
  9. மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி

மசாலா தூள் தயார் செய்வது

  1. தனியா – 2 மேசைக்கரண்டி
  2. வரமிளகாய் – 8
  3. சோம்பு – 1 தேக்கரண்டி
  4. சீரகம் – 1 தேக்கரண்டி
  5. பட்டை – சிறு துண்டு
  6. ஏலக்காய் – 2
  7. கிராம்பு – 2

இவற்றை எண்ணெய் ஊற்றாமல் வதக்கி, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய் விழுது தயாரிப்பதற்கு:

தேங்காய், கசகசா, ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

தாளிக்க:

  1. பட்டை – சிறிது
  2. ஏலக்காய் – 2
  3. கிராம்பு – 2
  4. பிரியாணி இலை – சிறிது
  5. கருவேப்பிலை – சிறிது
  6. சோம்பு – 1 தேக்கரண்டி
சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி ..!

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி (Chettinad Mutton Curry In Tamil) – தேவையான பொருட்கள்

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை: 1

மட்டனை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் 2 மேசைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை: 2

பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் மட்டன், மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை: 3

அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா தூள், மல்லித்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

இதனுடன் 3 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை: 4

ஒரு விசில் வந்த பிறகு, சூட்டை குறைத்து மேலும் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.

குக்கர் ஆவி அடங்கிய பின்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.

அவ்வளவுதான் செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை முடிந்தது, சுவையான மட்டன் குழம்பை அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.

சிக்கன் புலாவ் சுவையான சமையல் செய்முறை..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!