செட்டிநாடு சாம்பார் பொடி செய்வது எப்படி

Advertisement

செட்டிநாடு சாம்பார் பொடி செய்வது எப்படி.? | Chettinad Sambar Podi Recipe in Tamil 

Chettinad Sambar Powder Recipe in Tamil: வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நம் அனைவருக்கும் பிடித்த செட்டிநாடு சாம்பார் செய்ய சாம்பார் பொடி அரைப்பது எப்படி.? (Chettinad Sambar Podi Recipe in Tamil) என்பதை கொடுத்துள்ளோம். இந்த செட்டிநாடு சாம்பார் பொடியை அரைத்து சாம்பார் வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும். உங்களுக்கு சாம்பார் வைக்க தெரியவில்லை என்று யாருமே கூற மாட்டார்கள். அந்த அளவிற்கு சுவையாக இருக்கும்.

அன்றாடம் நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகளில் சாம்பாறும் ஒன்று. இப்படி நாம் தினமும் சமைக்கும் குழப்பு சுவையாக இருந்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே, நீங்களும் வீட்டில் சுவையாக சாம்பார் வைக்க வேண்டுமானால், செட்டிநாடு சாம்பார் பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். ஓகே வாருங்கள், செட்டிநாடு சாம்பார் பொடி செய்முறை விளக்கம் பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

Chettinad Style Sambar Powder in Tamil:

செட்டிநாடு சாம்பார் பொடி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

 • வர மிளகாய் – 1/2 கிலோ
 • மல்லி – 1/4 கிலோ
 • கடலை பருப்பு – 50 கிராம்
 • துவரம் பருப்பு – 50 கிராம்
 • அரிசி – 50 கிராம்
 • விரலி மஞ்சள் – 4
 • சீரகம் – 50 கிராம்
 • மிளகு – 50 கிராம்
 • சோம்பு – 2 டீஸ்பூன்
 • வெந்தயம் – 25 கிராம்
 • கட்டி பெருங்காயம் – சிறியது
 • கருவேப்பிலை – 3 கொத்து

செட்டிநாடு ஸ்டைலில் பச்சைமிளகாய் சட்னி செய்து பாருங்கள்..! 2 தோசை கூட சாப்பிடுவீங்க..!

செட்டிநாடு சாம்பார் பொடி செய்முறை விளக்கம்:

 • முதலில், அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பெருங்காயம் வதங்கும் அளவிற்கு சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை போட்டு வதக்கி எடுத்து கொள்ளுங்கள்.
 • அடுத்து, எண்ணெய் இல்லாமல், வர மிளகாயை சேர்த்து லேசாக சிவரவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, மல்லியை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
 • அடுத்ததாக, துவரம்பருப்பு, அரிசி மற்றும் கடலை பருப்பை சேர்த்து சிவரவிட்டு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
 • அதன் பிறகு, சோம்பு, சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
 • இதேபோல், வெந்தயம் சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
 • இப்போது வறுத்து வைத்த பொருட்கள் அனைத்தையும் சிறிது நேரம் ஆறவைத்து விரலி மஞ்சள் சேர்த்து அரைத்து ஒரு டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
 • அவ்வளவுதாங்க.. சுவையான செட்டிநாடு சாம்பார் பொடி தயார். இந்த பொடியினை ஒவ்வொரு முறை சாம்பார் வைக்கும்போது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement