வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ..!

Updated On: June 16, 2022 2:22 PM
Follow Us:
chicken 65
---Advertisement---
Advertisement

சூடான, சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65(chicken 65 recipe) செய்வது எப்படி :

ஹாய் ப்ரண்ட்ஸ், நாம் என்னதான் வீட்டில் சிக்கன் 65 பண்ணாலும், ரெஸ்டாரண்ட்டில் சாப்பிடும் பொழுது இருக்கின்ற ஒரு சுவையோ அலாதி தான் . அந்த ஸ்டைல் நாம் ட்ரை பண்ணாலும் நம்மளோட டேஸ்ட் வேற மாதிரி இருக்கும் இல்லையா.? ரெஸ்டாரண்ட் டேஸ்ட்டில் நம்மளோட சிக்கன் 65 செய்யும் முறை எப்படி. அந்த வழியை தான் நாம் இந்த  பதிவில் பார்க்க போறோம்ங்க .

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65(chicken 65 recipe) செய்யவதற்கு முன் :

சிக்கன் 65 செய்யும் முறை:-முதலில் சிக்கனை கொஞ்சம் சாப்ட் ஆக்க ரெஸ்டாரண்ட் ஸ்டைலில், அதில் 1/2 கிலோ சிக்கனுக்கு 2 டேபிள் ஸ்பூன் வினீகர் சேர்த்து அதிகளவு உப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி அரை மணி நேரத்துக்கு ஊற வைக்க வேண்டும் .

சிக்கன் பரோட்டா செய்முறை..!

அரை மணி நேரம் கழித்து சிக்கனை தொட்டு பார்க்கும் பொழுது ரொம்பவே சாப்ட் ஆக இருக்கும்.

பிறகு 3 அல்லது 4 முறை நன்கு சிக்கனை கழுவிக்கொள்ள வேண்டும் . ஏனென்றால் நாம் அதிகமான உப்பு சேர்த்து உள்ளோம் என்பதால் தான் .

தேவையான பொருள்கள்:

1.மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
2. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
3.சிக்கன் 65 மசாலா – 1 ஸ்பூன்
4.கசூரி மேத்தி – 1 டேபிள் ஸ்பூன் (சேர்த்துக் கொண்டால் ரொம்பவே நல்லா இருக்கும்)
5. இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
6.தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
7.கான் பிளவர் மாவு – 1 டேபிள் ஸ்பூன்
8. மைதா – 2 டேபிள் ஸ்பூன்

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 செய்யும் முறை (chicken 65 recipe):

முதலில் சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து சுமார் 20 நிமிடங்களுக்கு நன்கு ஊற விடுங்கள்.

சிக்கன் புலாவ் ரெசிபி மிக சுவையாக செய்யலாம் வாங்க…!

இதனை ரெடி செய்ததும், இப்போது 20 நிமிடம் ஊற வைத்த சிக்கனை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். தயார் செய்த சிக்கன் 65 யை தனியாக வைத்து விடுங்கள்.

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 செய்யும் முறை (chicken 65 recipe) – தேவையான பொருள்கள் :

1.தக்காளி சாஸ் – 3 டேபிள் ஸ்பூன்
2.தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
3.பீட்ரூட் ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்(for natural food color purpose)

மேலே கூறிய அனைத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து தனியே வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது நாம் ஏற்கனவே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் தயார் செய்து வைத்துள்ள அனைத்தையும் மீண்டும் ஒரு கடாயில் வைத்து சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது வதங்கியதும் அதனுடன் நாம் செய்து வைத்த சிக்கன் 65-யையும் சேர்த்து நன்கு வதக்குங்கள்.

அவ்ளோ தான் இப்போது சுவையான மொறு மொறுவென ரொம்பவே டேஸ்டியான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65(chicken 65 recipe) ரெசிபி ரெடி…!

தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Chicken Dum Biryani in Tamil

ஓண‌ம் ஸ்பெஷல்!!! சிக்கன் தம் பிரியாணி செய்முறை..!

Bread Spring Roll Recipe in Tamil

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil