ஓண‌ம் ஸ்பெஷல்!!! சிக்கன் தம் பிரியாணி செய்முறை..!

Chicken Dum Biryani in Tamil

சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி? – Chicken Dum Biryani in Tamil

ஹாய் பிரண்ட்ஸ்.. கேரளாவில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு விழா தான் ஓணம் பட்டிகை. அன்றைய நாளில் உங்கள் வீட்டில் புதுசாக சிக்கன் தம் பிரியாணி செய்ய போறிங்களா.. அப்படினா இந்த செய்முறையை விளக்கத்தை ஒருமுறை படித்திவிட்டு செய்யுங்கள்.. சிக்கன் தம் பிரியாணி அருமையான சுவையில் இருக்கும். உங்கள் வீடே மணக்கும். அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க ஓண‌ம் ஸ்பெஷல்!!! சிக்கன் தம் பிரியாணி செய்முறைவிளக்கத்தை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

 1. சிக்கன் – ஒரு கிலோ
 2. பாஸ்மதி அரிசி – ஒரு கிலோ
 3. வெங்காயம் – 4
 4. தக்காளி – 4
 5. புதினா – அரைக்கட்டு
 6. கொத்தமல்லித் தழை – அரைக்கட்டு
 7. இஞ்சி, பூண்டு விழுது – 4 தேக்கரண்டி
 8. தனி மிளகாய் தூள் – ஒன்றரை தேக்கரண்டி
 9. பிரியாணி மசாலா தூள் – ஒன்றரை தேக்கரண்டி
 10. பச்சை மிளகாய் – 5 (அ) 6
 11. எலுமிச்சை – ஒன்று
 12. எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
 13. கேசரி பவுடர் – சிறிது
 14. பட்டை, கிராம்பு, ஏலக்காய, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ – தாளிக்க

சிக்கன் தம் பிரியாணி செய்முறை – Chicken Dum Biryani in Tamil:

ஸ்டேப்: 1

முதலில் பாஸ்மதி அரிசியை களைந்து ஊற வைக்கவும்.

ஸ்டேப்: 2

அதன்பிறகு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 3

வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் சிறிது புதினா சேர்த்து வதக்கவும.

ஸ்டேப்: 4

பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, சிக்கனை சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 5

அதனுடன் மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 6

நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது, ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து, கேசரி பவுடரை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.

ஸ்டேப்: 7

நன்றாக கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து கிளறிவிட்டு மூடிவிடவும்.

ஸ்டேப்: 8

5 நிமிடங்கள் கழித்து தண்ணீர் வற்றியதும், மெதுவாக கிளறிவிட்டு புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும்.

ஸ்டேப்: 9

மீண்டும் மெதுவாக கிளறி விட்டு அடுப்பின் தணலை குறைத்து வைத்து மூடி, அதன் மீது அடுப்பு கரி தணலை பரவலாகப் போட்டு கனமான பொருளை வைத்து 10 நிமிடங்களுக்கு தம்மில் வைக்கவும்.

10 நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவும். அவ்ளளவு தான் சுவையான சிக்கன் தம் பிரியாணி தயார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்
SHARE