வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ரம்ஜான் ஸ்பெஷல் சிக்கன் முர்தபா செய்யலாம் வாங்க..

Updated On: March 27, 2025 12:04 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Chicken Murtabak Recipe

நண்பர்களுக்கு வணக்கம்..! ரம்ஜான் வந்துவிட்டது. எல்லாரும் ரம்ஜான் அன்று புதிதாக என்ன டிஷ் செய்யலாம் என்று யோசித்து கொண்டிருப்பார்கள். இந்த நாளன்று பல வகையான டிஷ்கள்செய்திருப்பார்கள். இவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை எல்லாம் அழைப்பார்கள். ஆகையால் ரம்ஜான் அன்று பிரியாணி கண்டிப்பாக இருக்கும். இது இல்லாமல் என்ன டிஸ் புதிதாக செய்யலாம் என்று பலரும் யோசித்து கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கு நம்முடைய பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் சிக்கனை வைத்து ஒரு புது விதமான டிஸ்ஸை பற்றி கூறியுள்ளோம். அதனை எப்படி செய்வது என்று பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

சிக்கன் முர்தபா செய்ய தேவையான பொருட்கள்:

  1. மைதா மாவு – 2 கப் (250 கிராம்)
  2. உப்பு – தேவையான அளவு
  3. முட்டை – 1
  4. வெண்ணெய் – 2 ஸ்பூன்
  5. பால் – 1/4 கப்சிக்கன் – 200 கிராம்
  6. பெரிய வெங்காயம் – 2
  7. கேரட் – 1
  8. பச்சை மிளகாய் – 1
  9. இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
  10. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  11. மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
  12. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  14. உப்பு – தேவையான அளவு
  15. எண்ணெய் – தேவையான அளவு
  16. முட்டை – 03

சிக்கன் முர்தபா செய்வது எப்படி.?

மாவு ரெடி செய்யனும்:

Chicken Murtabak Recipe in tamil

 

முதலில் ஒரு பவுலில் மைதா மாவு 250 கிராம், உப்பு தேவையான ளவு, சுகர் 1 தேக்கரண்டி , முட்டை 1, வெண்ணெய், பால் 1/4 கப் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து கொள்ளவும். பூரி மாவு பிசைவது போல் பிசைய வேண்டும். கடைசியாக எண்ணெய் தடவி ஒரு மூடி போட்டு மூடி 30 நிமிடம் அப்படியே விடவும்.

பிறகு மாவை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி கொள்ளவும். இந்த உருண்டைகளின் மேலே எண்ணெய் தடவி 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.

சிக்கனை அரைக்க வேண்டும்:

அடுத்து சிக்கனை சிறிய சிறிதாக கட் செய்து மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

Chicken Murtabak Recipe in tamil

அடுப்பில் கடாய் வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். அதில் நறுக்கி வைத்த வெங்காயம் 2, கேரட் 1, பச்சை மிளகாய் 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு, அரைத்து வைத்த சிக்கன் சேர்த்து வதக்கவும்.

சிக்கன் எடுத்தால் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்..!

சிக்கன் stuff:

அதனுடன் மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மிளகு தூள், 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி , தேவையானஅளவு உப்பு, சேர்த்து கலந்து 5 நிமிடம் அப்படியே வேகட்டும்..

ஒரு பவுலில் 2 முட்டை உடைத்து ஊற்றவும். இதனுடன் வேக வைத்த சிக்கனை சேர்த்து கலந்து கொள்ளவும். இன்னொரு பவுலில்  ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கலந்து கொள்ளவும்.

Chicken Murtabak Recipe in tamil

பிணைந்து வைத்த மாவை பூரிக்கு தேய்ப்பது போல் நைசாக தேய்த்து கொள்ளவும். அதன் உள்பகுதியில் சிக்கன் stuff வைத்து நான்காக மடித்து கொள்ளவும். இதன் மேலே முட்டையை தடவ வேண்டும். இதனை தோசை கல்லில் சேர்த்து சிவந்த நிறம் வரைக்கும் வேக வைக்க வேண்டும். அவ்ளோ தாங்க சிக்கன் முர்தபா ரெடி.! உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிமாற வேண்டியது தாங்க.!

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now