சிக்கன் நகெட்ஸ்| Chicken Nuggets Recipe in Tamil

Advertisement

சிக்கன் நகெட்ஸ் செய்வது எப்படி? | chicken Nuggets Recipe in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்ம சமையல் பதிவில் கிக்கன் நகெட்ஸ் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் கடையில் வாங்கி சாப்பிட கஷ்டப்படுவார்கள். அவர்களுக்காகவே வீட்டிலே உடலுக்கு ஆரோக்கியம் தரும் கிக்கன் நகெட்ஸ் செய்வது எப்படி என்பதை இந்த சமையல் பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  1. பிரட் – 6
  2. Food Colour – 1/4 ஸ்பூன்
  3. சிக்கன் – 250 கிராம்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3/4 ஸ்பூன்
  5. சோயா சாஸ் – 1 ஸ்பூன்
  6. மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் -1/2 ஸ்பூன்
  8. உப்பு – தேவையான அளவு
  9. ஆயில் 1/2 லிட்டர்
  10.  முட்டை -1
  11. பால் -1/2 ஸ்பூன்
  12. கான்பிளவர் மாவு – 1 ஸ்பூன் (கரைத்து வைத்துக் கொள்ளவும்)
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ

செய்முறை:

சிக்கன் நகெட்ஸ்ஸ்டேப் -1:

  • 4 பிரெட் எடுத்துக்கொள்ளவும். அதனை சுற்றி ஓரங்களை நறுக்கிக்கொள்ளவும். பின் அதனை நான்கு பாதியாக நறுக்கி குட்டி சதுரமாக வெட்டிக்கொள்ளவும்.
  • பின்  நறுக்கி வைத்த பிரெட்டை மிக்சியில் போட்டு அதில் FOOD COLOR 1/4 ஸ்பூன் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

ஸ்டேப் -2:

  • அதனை வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுக்கவும்.
  • பின் 2 பிரட் எடுத்து அதனையும் கொரகொரப்பாக அரைத்து அதில் 250 கிராம் சிக்கன் சேர்த்து அதிலே இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3/4 ஸ்பூன், சோயா சாஸ் – 1 ஸ்பூன், மிளகு தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் -1/2 ஸ்பூன், அதற்கு பிறகு கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
சுவையான சிக்கன் பரோட்டா செய்முறை

ஸ்டேப்-3:

  • அரைத்து வைத்த மசாலாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.

chicken Nuggets Recipe

  • அரைத்த மாவை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்-4:

  • 1 முட்டை உடைத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பின் அதில் மிளகு தூள் 1/2 டேபிள் ஸ்பூன், பால் 2 ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். பின் கான்பிளவர் மாவு – 1 ஸ்பூன் கரைத்து வைக்கவும்.

ஸ்டேப்-5: 

  • பிறகு கலக்கி வைத்த முட்டை, அரைத்து வைத்த பிரட், நறுக்கி வைத்த சிக்கன் நகெட்ஸ் எல்லாம் எடுத்துக்கொள்ளவும்.Homemade Baked Chicken Nuggets Recipe - Budget Bytes
  • முதலில் கான்பிளவர் மாவில் நனைத்து பின் முட்டையில் நனைத்து பிறகு அரைத்து வைத்த பிரடில் நான்கு பக்கமும் பிரட்டி எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்-6:

  • பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும். சூடான பிறகு பிரட்டி வைத்த சிக்கன் நகெட்சை எண்ணையில் போட்டு வெந்த உடன் எடுக்கவும். மிதமான சூட்டில் வைத்தால் தான் உள் இருக்கும் சிக்கன் நன்றாக வெந்து சுவையை தரும். இப்போது உங்களுக்கு பிடித்த சிக்கன் நகெட்ஸ் ரெடி.
இதுபோன்று சுவைசுவையான சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்பு 
Advertisement