சுவையான சிக்கன் பரோட்டா செய்முறை..!

Advertisement

சிக்கன் பரோட்டா (Chicken Paratha) செய்முறை..!

தேவையான பொருட்கள்:

  1. எலும்பு இல்லாத சிக்கன் – 1/2 கிலோ
  2. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  3. சீரகம், மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்
  4. மல்லி தூள் – 1 ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
  7. கொத்தமல்லி இலை – 1 ஒரு கைப்பிடி
  8. வெங்காயம் – ஒன்று
  9. மிளகு தூள் – 1 ஸ்பூன்
  10. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  11. உப்பு – தேவையான அளவு
  12. மைதா – ஒரு கப்
உடலுக்கு வலுசேர்க்கும் உளுந்தங்களி செய்வது எப்படி?

சிக்கன் பரோட்டா செய்முறை ஸ்டேப்: 1

முதலில் பரோட்டாவுக்கு மாவு பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்.

ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் ஒரு கப் மைதா மாவை சேர்க்க வேண்டும். பின்பு அவற்றில் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும். அதாவது சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து பின்பு சிறிதளவு எண்ணெய் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்பு ஒரு வெள்ளை துணியால் மாவை மூடி வைக்கவும்.

சிக்கன் பரோட்டா செய்முறை ஸ்டேப்: 2

இப்பொழுது சிக்கன் பரோட்டா (Chicken Paratha) செய்வதற்கு பூரணம் எப்படி தயாரிப்பது என்று இவற்றில் நாம் காண்போம். தொடர்ந்து கவனமா படித்து வரவும்.

முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு சிக்கனை அரை வேக்காட்டில் வேக வைத்து கொள்ளவும். அதாவது ஒரு வாணலியில் சிக்கனை போட்டு அவற்றில் சிறிதளவு எண்ணெய் மற்றும் 1/2 ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

பால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..!

சிக்கன் பரோட்டா செய்முறை ஸ்டேப்: 3

சிக்கன் வெந்ததும் மிக்சியில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.

பின்பு அதே வாணலியில் சிறிதளத்து எண்ணெய் சேர்த்து நன்கு பொடிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

சிக்கன் பரோட்டா செய்முறை ஸ்டேப்: 4

வெங்காயம் நன்கு வதங்கியதும் மேல் கூறப்பட்டுள்ள மசாலாப்பொருட்களான மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சீரக தூள், ஒரு டீஸ்பூன் மல்லி தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் காரத்திற்க்காக ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

மசாலாவை பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும். பின்பு அரைத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும்.

சிக்கன் பரோட்டா செய்முறை ஸ்டேப்: 5

பின்பு பொடிதாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக வதக்கினால் சிக்கன் கீமா தயார்.

இப்போது சிக்கன் பரோட்டா (Chicken Paratha) எப்படி செய்வது என்று பார்ப்போம்.

சிக்கன் பரோட்டா செய்முறை ஸ்டேப்: 6

பிசைந்து வைத்துள்ள மைதா மாவை இப்போது எடுத்து கொள்ளவும். மைதா மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். பின்பு சப்பாத்தி கட்டையில் மைதா மாவை தேய்த்து கொள்ளவும். பின்பு சிக்கன் கீமா ஆறியதும் ஒரு ஸ்பூன் எடுத்து கொண்டு அவற்றை தேய்த்து வைத்துள்ள மைதா மாவில் வைத்து மடிக்க வேண்டும். முக்கியமாக துளைகள் இல்லாமல் நன்றாக மடித்து கொண்டு திரும்பவும் சப்பாத்தி பலகையில் வைத்து சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்.

எளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை (How To Make Ghee)..!

சிக்கன் பரோட்டா செய்முறை ஸ்டேப்: 7

இவ்வாறு மீதம் இருக்கும் மைதா மாவையும் இந்த முறையில் தேய்த்து வைத்து கொள்ளவும்.

தேய்த்து வைத்திருக்கும் மைதா மாவை தோசை கல்லில் போட்டு சப்பாத்தி போல் பிரட்டி எடுத்தால் சுவையான சிக்கன் பரோட்டா (Chicken Paratha) தயார்.

அனைவருக்கும் அன்புடன் இந்த சிக்கன் பரோட்டாவை பரிமாறவும்.

 

இதுபோன்று சுவைசுவையான சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்பு 
Advertisement