சிக்கன் புலாவ் (chicken pulao) சுவையான சமையல் செய்முறை..!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சிக்கன் புலாவ் செய்வது எப்படி என்று இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.
சிக்கன் புலாவ் (chicken pulao) செய்ய தேவையான பொருட்கள்:
- சிக்கன் – 1/2 கிலோ
- பூண்டு – ஒரு கையளவு
- வெங்காயம் – 200 கிராம்
- பச்சை மிளகாய் – 6
- இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
- தயிர் – 1 கப்
- புதினா, கொத்தமல்லி – 1/2 கப்
- பட்டை – 2
- இலவங்கம் – 2
- ஏலக்காய் – 2
- மராட்டி மொக்கு – 2
- பாஸ்பதி அரிசி – அரை கிலோ
- தேங்காய் – 1 கப்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி அளவு
சைனீஸ் ஸ்பெஷல் டிராகன் சிக்கன் செய்வது எப்படி? |
சுவையான சிக்கன் புலாவ் செய்முறை விளக்கம்:
சிக்கன் புலாவ் செய்முறை (chicken pulao) ஸ்டேப்: 1
இந்த சிக்கன் புலாவ் செய்வதற்கு முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொண்டு சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
சிக்கன் புலாவ் செய்முறை ஸ்டேப்: 2
பிறகு அடுப்பில் குக்கரை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம், ஏலக்காய், மராட்டி மொக்கு, புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.
பின்பு அதனுடன் வெங்காயம் மற்றும் பூண்டு, ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
சிக்கன் புலாவ் செய்முறை ஸ்டேப்: 3
நன்கு வதங்கியவுடன், சிக்கன் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
சிக்கன் சிறிது நேரம் வெந்தவுடன் அவற்றில் தயிர் சேர்க்க வேண்டும்.
தயிர் சேர்த்த பிறகு அவற்றில் அரிசியை சேர்த்து நன்றாக கிளறியவுடன், இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
சிக்கன் புலாவ் செய்முறை ஸ்டேப்: 4
பின்பு ஒரு கப் தேங்காய் பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்பு மீதியுள்ள கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்த்து குக்கரை முடி மூன்று விசில் வந்ததும், 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான chicken pulao ரெசிபி தயார்.
சுடசுட அனைவருக்கும் பரிமாறவும்.
சிம்பிளான செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி ? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!! |