சிக்கன் வறுவல் இப்படி செய்து பாருங்கள் சுவை சும்மா அள்ளும்..!

chicken varuval

சிக்கன் வறுவல் செய்முறை..!

சமையல் செய்வதில் நீங்கள் ரொம்ப அலுப்பு படுவீர்களா.. அப்படின்னா இந்த சோம்பேறி சிக்கன் வறுவலை ட்ரை செய்து பாருங்க, அப்பறம் இப்படி தான் எப்போதுமே உங்கள் வீட்டில் சிக்கன் வறுவல் செய்விங்க.. சரி வாங்க மிக எளிமையாக 15 நிமிடத்தில் சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி இப்பொழுது முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

 1. சிக்கன் – 1/2 கிலோ
 2. பெரிய வெங்காயம் – 2 (பொடிதாக நறுக்கியது)
 3. மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
 4. மல்லி தூள் – 1/2 ஸ்பூன்
 5. சீரகம் தூள் – 1/2 ஸ்பூன்
 6. மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
 7. கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
 8. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
 9. உப்பு – தேவையான அளவு
 10. எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
 11. கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு (பொடிதாக நறுக்கியது)

இதையும் கிளிக் செய்யுங்கள் 👉 வீடே மணக்க மணக்க இறால் கிரேவி செய்வது எப்படி?

சிக்கன் வறுவல் செய்முறை:-

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் சுத்தம் செய்த 1/2 கிலோ சிக்கனை போடவும்.

பின் அவற்றில் மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அதாவது வெங்காயம், மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சீரகம் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது இரண்டு ஸ்பூன், கொத்தமல்லி இல்லை ஒரு கையளவு மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து பிசையவும்.

பின் அந்த பாத்திரத்தை அப்படியே அடுப்பில் வைத்து சிக்கனை வேகவைக்க வேண்டும். அதாவது வதக்கிவிட வேண்டும்.

வதக்கிய பின் இரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சிக்கனை மூடி வேக வைக்க வேண்டும் குறிப்பாக தண்ணீர் விட கூடாது தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்கவும்.

இவ்வாறு மூடி வேகவிடவும் போது அந்த சிக்கனில் தண்ணீர் விடும் அந்த தண்ணீரிலேயே சிக்கன் நன்றாக வெந்து விடும். ஆகவே தண்ணீர் ஊற்றே வேண்டும்.

ஒரு 10 முதல் 15 நிமிடம் அடுப்பை மிதமான சூட்டில் வேகவைக்கவும் அவ்வளவு தான் சுவையான மற்றும் அருமையான சிக்கன் வறுவல் தயார். ஒருமுறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..!

இதையும் கிளிக் செய்யுங்கள் 👉 சிக்கன் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க செம டேஸ்ட்டா இருக்கும்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்