வீட்டிலேயே கொய்யாக்காய் மிட்டாய் செய்வது எப்படி..?

Advertisement

வீட்டிலேயே கொய்யாக்காய் மிட்டாய் செய்வது எப்படி..?

வணக்கம் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்க்க இருப்பது மிகவும் புதுமையான மற்றும் மிகவும் சுவையான வீட்டிலேயே கொய்யாக்காய் மிட்டாய் செய்வது எப்படி..? என்பதை பற்றி தான். பொதுவாக நமது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மிட்டாய்களை கடையில் சென்று தானே வாங்கி கொடுத்திருப்போம். ஆனால் இனிமேல் கடைக்கு சென்று பணம் கொடுத்து வாங்கித்தரவேண்டிய அவசியம் இல்லை.

நமது வீட்டிலேயே மிகவும் சுவையான கொய்யாக்காய் மிட்டாய்களை செய்து தரலாம். அது எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

கொய்யாக்காய் மிட்டாய் செய்வது எப்படி.?

முதலில் இந்த கொய்யாக்காய் மிட்டாய் செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. கொய்யாப்பழம் – 5
  2. தண்ணீர் – 4 கப் 
  3. சர்க்கரை -1 1/4 கப் 
  4. Liquid Glucose – 3 டேபிள் ஸ்பூன் 
  5. உப்பு – 1 டீஸ்பூன் 
  6. பச்சைநிற ஃபுட் கலர் – 1 டீஸ்பூன்
  7. பிளாக் உப்பு (Black Salt) – 3/4 டீஸ்பூன்
  8. சிட்ரிக் ஆசிட் – 3/4 டீஸ்பூன்

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்திருந்த 5 கொய்யாப் பழங்களை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் நறுக்கி வைத்திருந்த கொய்யாப்பழ துண்டுகளை போட்டு அதில் 4 கப் தண்ணீரை ஊற்றி அதை நன்கு கொதிக்க விடவும்.

ஸ்டேப் – 2

அது நன்கு கொதித்து 2 கப் அளவிற்கு தண்ணீர் குறைந்தவுடன், அதனை அடுப்பிலிருந்து இறக்கி அதில் உள்ள தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் 1 1/4 கப் சர்க்கரையை போட்டு அதில் நாம் வடிக்கட்டி வைத்திருந்த தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். 

ஸ்டேப் – 4

அது நன்கு கொதித்தவுடன் அதில் 3 டேபிள் ஸ்பூன் (Liquid Glucose), 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் பச்சை நிற ஃபுட் கலர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 

ஸ்டேப் – 5

அவை நன்கு கொதித்தவுடன் அதில் 3/4 டீஸ்பூன் பிளாக் உப்பு (Black Salt) மற்றும் 3/4 டீஸ்பூன் சிட்ரிக் ஆசிட் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். அடுப்பிலிருந்து இறக்கி அதனை சிறிய சிறிய மிட்டாய் வடிவ துண்டுகளாக நறுக்கி அனைவருக்கும் பரிமாறலாம்.

இப்பொழுது நமது கொய்யாக்காய் மிட்டாய் ரெடி நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

 சுவையான சாக்லேட் கேக் செய்வது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement