கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் செய்முறை

Advertisement

Christmas Plum Cake Recipe in Tamil

ஹாய் நண்பர்களே இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் வரவிருக்கிறது. பலர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கடைகளில் கேக் வாங்கி தான் ஆர்டர் செய்வார்கள். இருப்பினும் பண்டிகை நாட்களில் கேக் விலை சற்று அதிகமாகவே தான் இருக்கும். அவ்வளவு காசு கொடுத்து கேக் வாங்கி பண்டிகையை கொண்டாடினாலும் மனதிற்கு ஒரு திருப்தி கிடைக்காது. நம்மால் கூட கேக் தயார் செய்ய முடியும். அதற்கான செய்முறை விளக்கம் தெரிந்தால், கேக் செய்வதெல்லாம் ஒன்றும் கடினமான வேலை கிடையாது. ஆக இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கடையில் கேக் ஆர்டர் செய்யாமல் வீட்டிலேயே கேக் செய்து கொண்டாடுங்கள். உங்களுக்கு கேக் செய்வதற்கான செய்முறை விளக்கம் தெரியாது என்றாலும் கவலை வேண்டாம். இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.  ஆம் நண்பர்களே இன்று நாம் வீட்டிலேயே பிளம் கேக் முட்டை சேர்க்காமல் எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

 1. ஆரஞ்சு ஜூஸ் – 1/2 கப்
 2. பாதாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது – ஒரு கைப்பிடியளவு
 3. முந்திரி சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது – ஒரு கைப்பிடியளவு
 4. உலர்ந்த கருப்பு திராட்சை – ஒரு கைப்பிடியளவு
 5. உலர்ந்த பச்சை திராட்சை – ஒரு கைப்பிடியளவு
 6. Green Tutti Frutti Cherries – ஒரு கைப்பிடியளவு
 7. ஜெர்ரி – ஒரு கைப்பிடியளவு
 8. Orange tutti frutti – ஒரு கைப்பிடியளவு
 9. Red color tutti frutti – ஒரு கைப்பிடியளவு
 10. Muskmelon seeds – சிறிதளவு
 11. சர்க்கரை – 2/3 கப்
 12. தண்ணீர் – 2/3 கப்
 13. பால் – 1/4 கப்
 14. ஆயில் – 1/4 கப்
 15. வெண்ணிலா எசன்ஸ் – 1/2 ஸ்பூன்
 16. மைதா – ஒரு கப்
 17. மில்க் பவுடர் – 3 ஸ்பூன்
 18. பட்டை ஒன்று, ஏலக்காய் 2, கிராம்பு 2 – இடித்து பவுடர் செய்துகொள்ளவும்
 19. பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்
 20. பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன்
 21. சால்ட் – ஒரு சிட்டிகை

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

பிளம் கேக் செய்முறை – Christmas Plum Cake Recipe in Tamil:

ஸ்டேப்: 1

ஒரு பவுலில் 1/2 கப் ஆரஞ்சு ஜூஸை எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டப்: 2

அவற்றில் பாதாம், முந்திரி, உலர்ந்த கருப்பு திராட்சை, உலர்ந்த பச்சை திராட்சை, ஜெர்ரி, Green Color Tutti Frutti, Orange Color Tutti Frutti, Red Color Tutti Frutti, Muskmelon Seeds ஆகிய அனைத்தையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

ஸ்டேப்: 3

அடுத்ததாக நாம் சுகர் கேரமல் தயார் செய்ய போகிறோம். அதற்கு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 2/3 கப் சர்க்கரை சேர்க்கவும். இப்பொழுது அடுப்பை High Flame-யில் வைத்துக்கொண்டு கரண்டியை பயன்படுத்தி சர்க்கரையை கிளறிவிடவும்.

சர்க்கரை நன்கு கரைந்து பிரவுன் நிறத்திற்கு வந்ததும் அடுப்பை Low Flame-யில் வைத்து 2/3 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிவிடவும். பிறகு ஒரு நிமிடம் சர்க்கரை பாகை கொதிக்கவைத்து அடுப்பை அணைத்துவிடவும்.

ஸ்டேப்: 4

பின் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து மேல் படத்தில் காட்டியுள்ளது போல் செட் செய்து அடுப்பை 10 நிமிடம் Low Flame-யில் On செய்து வைக்கவும். அதற்குள் நாம் கேக் மாவு தயார் செய்திடலாம்.

ஸ்டேப்: 5

ஒரு அகலமான பவுலை எடுத்துக்கொள்ளவும், அதில் பால், ஆயில், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

பிறகு அதில் ஒரு கப் மைதா மாவு, மூன்று ஸ்பூன் பால் பவுடர் மற்றும் பட்டை, ஏலக்காய், கிராம் ஆகியவற்றை இடித்து பவுடர் செய்த அதனையும் இந்த கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

ஸ்டேப்: 6

பிறகு அதனுடன் சுகர் கேரமலையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
இனி வீட்டிலே செய்யலாம் ரெட் வெல்வெட் கேக்..!

ஸ்டேப்: 7

கேரமல் சேர்த்த பிறகு ஆரஞ்சு ஜூஸில் ஊறவைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் அப்படியே மாவில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

ஸ்டேப்: 8

பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

ஸ்டேப்: 9

பிறகு ஒரு கேக் டின்னை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் பட்டர் பேப்பரை அடி பக்கம் மற்றும் ஓரங்களில் செட் செய்து கேக் டின் முழுவது கொஞ்சம் பட்டரை அப்ளை செய்யுங்கள். பிறகு கலந்து வைத்துள்ள மாவை கேக் டின்னில் சேர்த்து நன்றாக செட் செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதன் மேல் கொஞ்சம் நட்ஸை தூவிவிடலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் Fruit Jelly Cake

ஸ்டேப்: 10

அடுப்பில் ஹீட் செய்து தயாராக இருக்கும்  பாத்திரத்தில் இந்த கேக் டின்னை வைத்து 45 – நிமிடம் முதல் 50 நிமிடம் வரை அடுப்பை Low Flame-யில் வைத்து கேக்கை வேகவைக்க வேண்டும். 50 நிமிடம் கழித்து கேக்கை திறந்து ஒரு டூத் ஸ்டிக் குச்சியை பயன்படுத்தி கேக் வெந்துவிட்டதா என்று சோதிக்கவும். ஒருவேளை வேகவில்லை என்றால் மீண்டும் 10 நிமிடம் வேகவைக்கவும்.

பிறகு அடுப்பில் இருந்து கேக்கை எடுத்து வேறு பிளேட்டிற்கு மாற்றி நன்றாக ஆறவைத்து, சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து விடவும். பிறகு அதனை ருசிக்கலாம். அவ்வளவு தான் பிளம் கேக் தயார் செய்யும் முறை. ஒரு முறை வீட்டில் ட்ரை செய்யுங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement