காபி புட்டிங் செய்வது எப்படி..? | Coffee Pudding Recipe in Tamil
ஹாய் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் காபி புட்டிங் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக நாம் அனைவருக்கும் காபி புட்டிங் தெரிந்திருக்கும். ஆனால் அதனை எவ்வாறு செய்வது என்று தெரிந்திருக்காது. அதனால் இந்த பதிவில் காபி புட்டிங் எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக காணலாம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Coffee Pudding Recipe in Tamil :
முதலில் இந்த காபி புட்டிங் செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- காபித்தூள் – 6 டீஸ்பூன்
- சோளமாவு – 6 டீஸ்பூன்
- பால் – 1 லிட்டர்
- சர்க்கரை – 200 கிராம்
- வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- சாக்லேட் சாஸ் – 4 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்துவைத்திருந்த 6 டீஸ்பூன் காபித்தூளில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதேபோல் நாம் எடுத்துவைத்திருந்த 6 டீஸ்பூன் சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 லிட்டர் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். பால் நன்கு கொதித்த பிறகு அதில் 200 கிராம் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.
ஸ்டேப் – 4
சர்க்கரை நன்கு கரைந்த பிறகு அதில் நாம் தண்ணீர் ஊற்றி கலந்து வைத்திருக்கும் காபித்தூளை ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள். இவையெல்லாம் நன்கு கொதித்த பிறகு அதில் நாம் தண்ணீர் ஊற்றி கலந்து வைத்திருக்கும் சோளமாவை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். சோளமாவு தண்ணீரை ஊற்றிய பிறகு நன்கு திரண்டு வரும். அப்பொழுது 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.
ஸ்டேப் – 5
சேர்த்த பொருட்கள் எல்லாம் நன்கு திரண்டு வந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி சூடு ஆறியவுடன் இதனை 2 மணி நேரத்திற்கு பிரிட்ஜில் வைக்கவும்.
ஸ்டேப் – 6
பின்னர் அதை எடுத்துப் பார்த்தால் அது சரியான பதத்தில் இருக்கும். இப்பொழுது அதனை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதன் மீது நாம் எடுத்துவைத்திருந்த 4 டேபிள் ஸ்பூன் சாக்லேட் சாஸை ஊற்றி சிறிய சிறிய துண்டுகளை நறுக்கி அனைவருக்கும் பறிமாறலாம்.
இப்பொழுது நமது காபி புட்டிங் ரெடி வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த காபி புட்டிங்கை செய்து சுவைத்து பாருங்கள்.
இதையும் படியுங்கள் => தேங்காய் பால் புட்டிங் செய்வது எப்படி..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |