க்ரிஸ்பி கார்ன் செய்வது எப்படி..! Crispy Corn Recipe..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு, குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய க்ரிஸ்பி கார்ன்(Crispy Corn At Home) வீட்டிலிருந்தே எப்படி செய்யலாம்னு இன்று நாம் பார்க்கலாம்.
க்ரிஸ்பி கார்ன் | Crispy Corn Recipe
தேவையான பொருட்கள்:
- சோளம் – 2 கப்
- தண்ணீர் – (சோளத்தை வேக வைக்கும் அளவிற்கு)
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- சோளமாவு – 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- மிளகு தூள் – சிறிதளவு
- சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – தேவையான அளவு
- வெங்காயம் – சிறிதளவு நறுக்கியது
- கொத்தமல்லி – சிறிதளவு
க்ரிஸ்பி கார்ன் செய்முறை
Steps 1:
முதலில் கடாயில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு சோளத்தை தண்ணீரில் கொட்டி 2 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
நன்றாக கொதித்த பிறகு வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளவும். 5 நிமிடம் தண்ணீர் உரியும் வரை வைத்திருக்க வேண்டும்.
Steps 2:
சோளத்தில் தண்ணீர் நன்றாக உரிந்த பிறகு தனியாக ஒரு பவுலில் கொட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதனுடன் அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். அடுத்து 4 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சோளமாவை எடுத்து கொள்ளவும். அதில் பாதியாக 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு மட்டும் இப்போது சோளமாவை சேர்க்கவும்.
Steps 3:
இப்பொது தேவையான அளவிற்கு உப்புவை சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து மிளகு தூள் சிறிதளவு சேர்க்கவும்.
தண்ணீர் இல்லாமல் இருந்தால் மாவு ஒட்டாமல் இருக்கும். இதை நன்றாக கலந்து விட்ட பிறகு மீதமுள்ள 2 டேபிள் ஸ்பூன் சோளமாவை இப்போது சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.
நன்றாக உதிரி தன்மை வரும் அளவிற்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
10 நாள் ஆனாலும் கெடாத மொறு மொறு சிப்ஸ்..! Evening Snacks..! Rice Flour Recipes..! |
Steps 4:
சோளம் நன்றாக ஈரப்பதம் இல்லாமல் காய்ந்த நிலையில் இருந்தால் தான் எண்ணெயில் நன்றாக பொரிந்து வரும்.
அதேபோல் எண்ணையும் நன்றாக ஹீட் நிலையில் இருக்க வேண்டும்.
எண்ணெய் நன்றாக ஹீட் ஆனதும் கலந்து வைத்த சோளத்தை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.
Steps 5:
அடுத்து எல்லாவற்றையும் பொரித்து தனியாக பவுலில் எடுத்து வைக்கவும். சோளம் எடுத்து வைத்த இந்த பவுலில் சீரக தூள் 1/2 டீஸ்பூன் சேர்க்கவும்.
அடுத்து 1 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்கவும். பிறகு சாட் மசாலா 1/2 டீஸ்பூன் சேர்த்து கொள்ளவும். சாட் மசாலா சேர்த்தால் இன்னும் புளிப்பு தன்மையும், சுவையாகவும் இருக்கும்.
சாட் மசாலா இல்லாதவர்கள் இதை சேர்க்காமல் கூட இந்த ரெசிபியை செய்யலாம். இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்துக்கொள்ளவும்.
Steps 6:
இறுதியாக எலுமிச்சை சாறு தேவையான அளவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். அடுத்து வெங்காயம், கொத்தமல்லி சிறிதளவு நறுக்கி வைத்து கொள்ளவும்.
இப்பொது மசாலா கலந்த சோளத்தை தனியாக தட்டில் வைத்து நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சிறிதளவு தூவிக்கொள்ள வேண்டும்.
அவ்ளோதாங்க இந்த க்ரிஸ்பி கார்ன் ரெடியாகிட்டு. இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க ரொம்பவே சுவையாக இருக்கும்.
நன்றி வணக்கம்..!
மாலை நேர திண்பண்டம் அவல் போண்டா செய்வது எப்படி ? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |