கொங்கு நாடு ஸ்பெஷல் கறிவேப்பிலை சட்னி (karuveppilai chutney)
கறிவேப்பிலை சட்னி செய்முறை / கருவேப்பிலை சட்னி:- ஹாய் ப்ரெண்ட்ஸ், நாம் என்ன தான் சாப்பாட்டில் அதிகமான சத்துக்களை சேர்த்துக்கணும், சத்துள்ள பொருட்களை சாப்பிடணும் நினைச்சாலும் ஒரு சில உணவுப் பொருட்களை நம் கண்ணுக்கு தெரிந்தே ஒதுக்கி விடுகின்றோம்.
அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றான மிகவும் சத்து நிறைந்த, ரொம்பவே ஹெல்தியான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான சத்துக்களை கொண்டது தாங்க இந்த கறிவேப்பிலை (karuveppilai). அதை என்ன தான் சாப்பாடு , குழம்பில் சேர்த்துக்கிட்டாலும் அதை விரும்பாத ஒன்னா நினைச்சுகிட்டு தூக்கி போட்டுறோம்.
ஆனால் அதை வைத்து ரொம்ப சுவையான எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய அளவில் தாங்க கொங்கு நாட்டோட ஸ்பெஷல் ருசியோட கறிவேப்பிலை சட்னி (karuveppilai chutney) எப்படி செய்யணும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம பார்க்கப் போறோம். என்ன ப்ரெண்ட்ஸ் வாங்க நம்முடைய பதிவுக்கு போகலாம் என்ன ரெடியா…..
மாலை நேர திண்பண்டம் அவல் போண்டா செய்வது எப்படி ?
கருவேப்பிலை சட்னி (karuveppilai chutney) செய்ய தேவையான பொருட்கள் :
1. வெள்ளை உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
2. சின்ன வெங்காயம் – 7 (அ) 8
3. வர மிளகாய் (காய்ந்த மிளகாய்) – 3
4. வறுத்த நிலக் கடலை – 1 1/2 டேபிள் ஸ்பூன்
5. புளி – கொஞ்சம் (புளிப்பிற்காக)
6. துருவிய தேங்காய் – 1 கப்
7. கருவேப்பிலை (karuveppilai) – தேவையான அளவு (நன்கு சுத்தம் செய்தது)
8. சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் (அனைத்தையும் வதக்க)
இப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..!
கருவேப்பிலை சட்னி செய்முறை (karuveppilai chutney) ஸ்டேப்: 1
முதலில் ஒரு வாணலில் (கடாயில்) தேவையான எண்ணெய்யை ஊற்ற வேண்டும். பிறகு எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் நாம் வைத்துள்ள பொருட்களான அனைத்தையும் ஒவ்வொன்றாக வதக்க எடுத்துக் கொள்ளவும். முதலில் வெள்ளை உளுத்தம் பருப்பு, நன்கு வறுத்தவுடன் சின்ன வெங்காயம், வர மிளகாய், நிலக் கடலை ஆகியவற்றை நன்கு வறுக்கவும்.
கருவேப்பிலை சட்னி செய்முறை (karuveppilai chutney) ஸ்டேப்: 2
நிலக் கடலை சேர்ப்பதனால் இன்னும் சுவை ரொம்பவே அதிகப்படுத்தும். பிறகு துருவிய தேங்காய், புளி இவை அனைத்தையும் நன்கு வதக்கவும். இப்போ சுத்தம் செய்த கறிவேப்பிலையை (karuveppilai) வதக்க வேண்டும்.
குறிப்பு : கறிவேப்பிலையை (karuveppilai) ரொம்ப வதக்க வேண்டாம் . சிறிது பச்சை நிறம் போக வதக்கினாலே போதுமானது.
கருவேப்பிலை சட்னி செய்முறை (karuveppilai chutney) ஸ்டேப்: 3
இப்போது இவை அனைத்தையும் நாம் சாதரணமாக சட்னிப் போலவே மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
இவ்வளவு தாங்க இப்போ ரொம்பவே ருசியான கறிவேப்பிலை சட்னி (karuveppilai chutney) ரெடி…
இதை குழந்தைகள் கூட ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இதை சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா அனைத்திற்க்கும் சாப்பிடலாங்க.
இந்த Secret Recipe சேர்த்தால் போதும் மொறு மொறுன்னு உளுந்து வடை செய்யலாம்.!
இது தான் எங்க வீட்டோட எல்லோருக்கும் favourite -ம் கூட. அப்போ இதை நீங்களும் செய்து அசத்துங்க….
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |