சிக்கன் கட்லெட் செய்வது எப்படி?
கட்லட் செய்முறை: அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான சிக்கன் கட்லெட் செய்வது எப்படி என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
கட்லெட் செய்வது எப்படி – தேவையான பொருட்கள்
- சிக்கன் (எலும்பில்லாதது) – 700 கிராம்
- மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- வெங்காயம் – 4
- பச்சை மிளகாய் – 7
- கறிவேப்பிலை – 2 கொத்து
- பூண்டு – 1 மேஜைக்கரண்டி
- இஞ்சி – 1 1/2 மேஜைக்கரண்டி
- சோம்புத் தூள் – 1 1/2 தேக்கரண்டி
- நல்ல மிளகு தூள் – 1 1/2 தேக்கரண்டி
- உருளைக்கிழங்கு – 3
- முட்டை – 2
- பிரட் தூள் – 1 கப்
மாலை நேர திண்பண்டம் அவல் போண்டா செய்வது எப்படி ? |
சிக்கன் கட்லெட் செய்வது எப்படி?
சிக்கன் கட்லெட் செய்முறை விளக்கம் ஸ்டேப்: 1
கட்லெட் செய்வது எப்படி: எலும்பில்லாத சிக்கனை 1 இஞ்ச் அளவுள்ள துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்பு சிக்கனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நீர் சேர்க்காமல் வேக வைக்கவும். சிக்கனில் உள்ள நீர் வெளியேறும் வரை வேக வைக்கவும்.
பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
சிக்கன் கட்லெட் செய்முறை விளக்கம் ஸ்டேப்: 2
பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றை ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
ஒரு குக்கரில் உருளை கிழங்குடன் நீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பூண்டு மற்றும் இஞ்சியை நன்கு நசுக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் லேசாக பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கியதும் சோம்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து வதக்கவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.
சிக்கன் கட்லெட் செய்முறை விளக்கம் ஸ்டேப்: 3
பின்பு மசாலா மற்றும் வேக வைத்த சிக்கனை மிக்சியில் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும்.
மீண்டும் எண்ணெயை சூடாக்கி அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு 15 – 20 நிமிடம் வதக்கவும்.
பின்பு அதனை ஆற வைக்கவும். அவை ஆறுவதற்குள் உருளைகிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும்.
சிக்கன் கட்லெட் செய்முறை விளக்கம் ஸ்டேப்: 4
இப்போது சிக்கன் கலவையை உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
சிக்கன் கட்லெட் செய்முறை விளக்கம் ஸ்டேப்: 5
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்கு கலக்கவும். பின்பு கட்லெட்களை அதில் முக்கி எடுத்து பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுக்கவும்.
பின்பு அவற்றை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.
இப்பொழுது சுவையான சிக்கன் கட்லெட் ரெடி. இவற்றை அன்புடன் அனைவருக்கும் பரிமாறவும்.
மட்டன் கட்லெட் செய்வது எப்படி?
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான மட்டன் கட்லெட் செய்வது எப்படி என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
கட்லெட் செய்வது எப்படி? செய்ய தேவையான பொருட்கள்:
- நன்கு துண்டாக்கப்பட்ட மட்டன் – 1/4 கிலோ.
- உருளைக்கிழங்கு – 100 கிராம் (நன்கு வேகவைத்து மசித்து வைத்து கொள்ளவும்).
- இஞ்சி சிறிய துண்டு – பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
- பெரிய வெங்காயம் – 4 பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
- பூண்டு பற்கள் – 4 அல்லது 8 (பொடிதாக நறுக்கியது).
- மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்.
- மல்லி தூள் – ஒரு ஸ்பூன்.
- சீரகம் தூள் – ஒரு ஸ்பூன்.
- கரம் மசாலா – ஒரு ஸ்பூன்.
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்.
- பிரட் தூள் – தேவையான அளவு.
- எண்ணெய் – தேவையான அளவு.
- உப்பு – தேவையான அளவு.
- முட்டை – 2.
- பச்சை மிளகாய் – 2 பொடிதாக நறுக்கியது.
- சோம்பு – 1/4 டீஸ்பூன்.
கட்லெட் செய்வது எப்படி / மட்டன் கட்லெட் செய்முறை:
மட்டன் கட்லெட் செய்முறை: 1
கட்லெட் செய்வது எப்படி: முதலில் துண்டிக்கப்பட்ட கறியை நன்கு சுத்தமாக்கவும். சுத்தம் செய்த கறியை, தேவையான உப்பு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், சீராக தூள் மற்றும் மிளகாய் தூள், மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி, பின்பு ஒரு கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
மட்டன் கட்லெட் செய்முறை: 2
உருளை கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றை சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், 1/4 டீஸ்பூன் சோம்பு, பொடிதாக நறுக்கி வைத்துள்ள பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
மட்டன் கட்லெட் செய்முறை: 3
பின்பு சிறிதளவு கருவேப்பிலை மற்றும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வேகவைத்துள்ள மட்டன் ஆகியவற்றை சேர்த்து அவற்றில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை நன்றாக கிளறிவிடவும்.
பின்பு ஒரு கைப்பிடியளவு கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறிவிட்டு. அடுப்பில் இருந்து இறக்கி நன்கு ஆறவைக்கவும்.
இந்த கலவை ஆறிக்கொண்டிருக்கும் போது ஒரு பவுலில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைத்து கொள்ளவும்.
மட்டன் கட்லெட் செய்முறை: 4
இப்பொழுது மட்டன் கட்லெட் தயார் செய்யலாம் வாங்க. ஆறவைத்துள்ள கலவை நன்றாக ஆறியதும் சிறுசிறு உருண்டையாக உருட்டி, அடித்து வைத்துள்ள முட்டையில் முக்கி, பின்பு பிரெட் தூளில் நன்றாக பிரட்டி எண்ணெயில் சேர்த்து நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான மொறு மொறு மட்டன் கட்லெட் தயார் .
அன்புடன் அனைவருக்கும் பரிமாறுங்கள்..!
சுவையான மொறு மொறு மீன் கட்லெட் செய்முறை / கட்லெட் செய்வது எப்படி..!
கட்லெட் செய்வது எப்படி: அனைவருக்கும் கட்லெட் என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வகையில் சுவையான மொறு மொறு மீன் கட்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம் வாங்க.
சுவையான சமையல் முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை..! |
கட்லெட் செய்வது எப்படி? செய்ய தேவையான பொருட்கள்:
- வஞ்சரை மீன் – 1/4 கிலோ.
- பொடிதாக நறுக்கிய வெங்காயம் – இரண்டு.
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்.
- பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் – இரண்டு.
- பொடிதாக நறுக்கிய இஞ்சி – தேவையான அளவு.
- பூண்டு பொடிதாக நறுக்கியது – தேவையான அளவு.
- மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்.
- உருளைக்கிழங்கு – 1 வேகவைத்து மசித்தது.
- உப்பு – தேவையான அளவு.
- பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி – ஒரு கைப்பிடியளவு.
- முட்டை – ஒன்று.
- பிரெட் தூள் – தேவையான அளவு.
- எண்ணெய் – தேவையான அளவு.
சிக்கன் பரோட்டா செய்முறை..! |
மீன் கட்லெட் செய்முறை (Fish Cutlet Recipe In Tamil) ஸ்டேப்: 1
மீன் கட்லெட் செய்வதற்கு முதலில் வஞ்சரை மீனை வேகவைக்க வேண்டும், அதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் தேவையான அளவு தண்ணீர், சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு வாங்கி வைத்துள்ள வஞ்சரை மீனை இவற்றில் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
மீன் கட்லெட் செய்முறை (Fish Cutlet Recipe In Tamil) ஸ்டேப்: 2
மீன் நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து மீனில் உள்ள தோல் மற்றும் முள்ளினை தனியாக எடுத்துவிட்டு நன்றாக உதிர்த்து கொள்ளவும்.
உதிர்த்த மீனினை ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும், பின்பு அவற்றில் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
மீன் கட்லெட் செய்முறை (Fish Cutlet Recipe In Tamil) ஸ்டேப்: 3
பின்பு அதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் வேகவைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மீன் கட்லெட் செய்முறை (Fish Cutlet Recipe In Tamil) ஸ்டேப்: 4
பிசைந்த கலவையினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை தட்டுவது போல் தட்டி ப்ரிஜ்ஜியில் 5 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பின்பு அவற்றை ப்ரிஜியில் இருந்து எடுத்துக்கொள்ளவும்.
மீன் கட்லெட் செய்முறை (Fish Cutlet Recipe In Tamil) ஸ்டேப்: 5
இப்பொழுது இன்னொரு பவுலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைத்து கொள்ளுங்கள். பின்பு தட்டி வைத்துள்ள வடையினை, அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து, பின்பு பிரெட் துகள்களில் பிரட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான மொறு மொறு மீன் கட்லெட் தயார். சுட சுட அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.
செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!! |