டல்கோனா காபி செய்முறை | Dalgona Coffee Recipe in Tamil
நம்மில் பலருக்கு காபி என்றாலே மிகவும் கிடைக்கும்.. காபியில் நிறைய வகைகள் இருக்கிறது.. அதாவது சுக்கு காபி, கோல்டு காபி, ராஃப்-காபி, பிளாக் காபி என்று நிறைய வகைகள் உள்ளன. அந்த வகையில் இந்த பதிவில் டல்கோனா காபி செய்வது எப்படி என்பதை பற்றி படித்து தெரிந்துகொள்வோம். இந்த வெயில் காலத்திற்கு மிகவும் நாக்கிற்கு இதமான காபி என்றுடால்கோனா காபியை சொல்லலாம். குடிப்பதற்கு மிகவும் சுவையாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய காபி வகைகளில் இந்த டால்கோனா காபியும் இடம் பெற்றுள்ளது. சரி வாங்க நம் வீட்டிலேயே மிகவும் சுவையாக மற்றும் எளிமையாக டால்கோனா காபி எப்படி செய்வது என்பது பற்றி இப்பொழுது நாம் கீழ் படித்தறியலாம்.
1 பெரிய கிளாஸ் காபி தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள்:
- காபி பவுடர் – 2 ஸ்பூன்
- சர்க்கரை – 2 ஸ்பூன்
- வெந்நீர் – 2 ஸ்பூன் (மிதமான சூட்டில்)
- பால் – 1 கப்
- ஐஸ் கட்டிகள் – 4
டல்கோனா காபி செய்முறை விளக்கம்:
ஸ்டேப்: 1
முதலில் ஒரு கப் பாலினை நன்கு காய்ச்சி ஃபிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக்க வேண்டும்.
ஸ்டேப்: 2
அதன் பிறகு ஒரு பௌல் அல்லது டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் காபி பவுடரும் அதே அளவு சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 3
இப்போது சர்க்கரையும் காபி பவுடரும் அளந்த அதே ஸ்பூனில் 2 ஸ்பூன் மட்டும் வெந்நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதை ஒரு ஸ்பூன் எடுத்து நன்கு கலந்து விட்டு, கட்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது ஸ்பூனால் அல்லது ஹேண்ட் பிளண்டரில் அடிப்பது போல, கொஞ்சம் வேகமாக நன்கு அடிக்க (ஃபீட்) ஆரம்பியுங்கள்.
ஸ்டேப்: 4
நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிக்க ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவு நேரத்தில் காபி பொடியின் பிரௌன் கலர் வெளுப்பான நிறத்தில் மாற ஆரம்பிக்கும்.
ஸ்டேப்: 5
கிட்டதட்ட காபி பொடியின் முழு நிறமும் மாறி கேரமல் நிறத்துக்கு பேஸ்ட் போல மாற ஆரம்பிக்கும். போதும்னு விட்றாதீங்க.. இன்னும் கொஞ்சம் நேரம் நல்லா பீட் பண்ண பண்ண ஐஸ்க்ரீம், பீநட் பட்டர் பதத்துக்கு கெட்டியாக ஆரம்பிச்சிடும். அவ்வளவு தான்.
ஸ்டேப்: 6
இப்போ ஒரு கிளாஸ் எடுத்து முக்கால் 4 ஐஸ் கட்டிகளை சேர்க்கவும். அதன் பிறகு ஃபிரிட்ஜியில் வைத்திருக்கும் பாலினை எடுத்து ஊத்திக்கோங்க. அதற்கு மேல் அப்படியே க்ரீமியா பீட் பண்ணி வெச்சிருக்கிற காபி க்ரீமை அது மேல் எடுத்து வைங்க. அது திக்கா இருக்கறதால அப்படியே பாலோட மிக்ஸ் ஆகாம மேலே மிதந்துகிட்டு நிக்கும் அவ்வளவு தாங்க. சுவையான டல்கோனா காபி ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |