Dhakni Style Biryani in Tamil Recipe
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தக்னி ஸ்டைல் பிரியாணி செய்வது எப்படி.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். பொதுவாக, பிரியாணியில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான பிரியாணிகள் ஸ்பெஷல் ஆக இருக்கும். ஆம்பூர் பிரியாணி
ஐதராபாத்தி பிரியாணி, லக்னவி பிரியாணி, பட்காளி பிரியாணி, தலப்பாக்கட்டு மற்றும் மேமோனி பிரியாணி போன்ற பல்வேறு வகையான பிரியாணி உள்ளது.
அவற்றில் ஒன்று தான். Dhakni Style Biryani. இந்த பிரியாணி பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது மிகவும் சுவையாக இருக்கும். எனவே, நீங்கள் வீட்டில் எப்போதும்போல் பிரியாணி செய்யாமல், இந்த Dhakni Style Biryani -ஐ ட்ரை செய்து பாருங்கள். ஓகே வாருங்கள் Dhakni Style Biryani எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..?
Dhakni ஸ்டைல் பிரியாணி செய்வது எப்படி.?
தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 400 மில்லி
- மட்டன் – 1 கிலோ
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – 700 கிராம்
- நறுக்கிய தக்காளி – 600 கிராம்
- பூண்டு பேஸ்ட் – 50 கிராம்
- இஞ்சி பேஸ்ட் – 70 கிராம்
- பச்சை மிளகாய் – 8
- கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் – 1 கைப்பிடி
- தயிர் – 1 கப்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- உப்பு – 2 ஸ்பூன்
- எலுமிச்சை பழம் – 1
- ஏலக்காய், கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை – சிறிதளவு
செய்முறை:
- முதலில் அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைத்து, வேகைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- இப்போது, அடுப்பில் ஒரு பெரிய ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும், அதில் ஏலக்காய், கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை போடவும்.
- அதன் பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, 10 முதல் 15 நிமிடங்கள் வரை, பொன்னிறமாக வரும்வரை வதக்க வேண்டும்.
- அடுத்து, பூண்டு பேஸ்டினை சேர்த்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலந்து நன்கு வதக்க வேண்டும்.
- இப்போது, இஞ்சி பேஸ்டினை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- அடுத்ததாக, சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து, மூன்று நிமிடம் வரை வதக்க வேண்டும்.
- மட்டன் நன்றாக வதங்கிய பிறகு, ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
- அடுத்து, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
- அதன் பிறகு, நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாயினை சேர்க்க வேண்டும். (பச்சை மிளகாயை கீற கூடாது). இந்நிலையில் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
- அடுத்து, 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து, வெந்ததும் திறக்க வேண்டும்.
- இந்நிலையில், எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டு நிமிடங்கள் விட வேண்டும். அதன் பிறகு, புதினா மற்றும் கொத்தமல்லி போடவும்.
- அடுத்து, வேகவைத்து வைத்துள்ள அரிசியை அதன் மேல் சேர்த்து, குங்குமப்பூ நிறம், புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி 7 நிமிடங்களுக்கு Dum வைத்து இறக்கினால் சுவையான Dhakni Style Biryani ரெடி.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |