இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் தமிழில்..! Different chutney recipes in tamil..!

சட்னி வகைகள்

இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் தமிழில்..! Different chutney recipes in tamil

இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் / chutney recipes tamil:-

chutney recipes tamil:- இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வைங்க. அட ஆமாங்க இந்த பகுதியில் இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகளை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

Chutney recipes tamil / சட்னி வகைகள்
newதக்காளி சட்னி செய்வது எப்படி?
newவித்தியாசமான மிளகு கார சட்னி செய்யலாம் வாங்க..!
newஉளுந்து சட்னி செய்வது எப்படி?
newநிலக்கடலை சட்னி வைப்பது எப்படி?
newகொத்தமல்லி சட்னி செய்முறை

சட்னி வகைகள் – chutney recipes tamil – மிளகாய் சட்னி செய்வது எப்படி? 

மிளகாய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

 1. நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
 2. கடுகு – 1 டீஸ்பூன் 
 3. கடலை பருப்பு – 1 டீஸ்பூன் 
 4. உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன் 
 5. மிளகாய் – 5
 6. சிறிய வெங்காயம் – 30 (நறுக்கியது)
 7. உப்பு – தேவையான அளவு 
 8. பெருங்காயத்தூள் – சிறிதளவு 
 9. கருவேப்பிலை – தேவையான அளவு 
 10. பூண்டு பல்  – 15 (நறுக்கியது)
 11. கொத்தமல்லி – சிறிதளவு 

மிளகாய் சட்னி செய்வது எப்படி செய்முறை விளக்கம் 1:

Milagai Chutney Recipe: முதலில் அடுப்பில் கடாயை போடவும். கடாய் நன்றாக ஹீட் ஆனதும் நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.

எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு கடுகு 1 டீஸ்பூன், கடலை பருப்பு 1 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 டீஸ்பூன் சேர்த்து கடலை பருப்பு பழுப்பு நிறத்திற்கு வரும்வரை நன்றாக வறுத்து கொள்ளவும்.

மிளகாய் சட்னி எப்படி வைப்பது செய்முறை விளக்கம் 2:

Milagai Chutney Recipe In Tamil: அடுத்ததாக 5 மிளகாயை சேர்த்துக்கொள்ளவும். மிளகாயுடன் நறுக்கிய 30 சிறிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

இப்போது சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொள்ளவும். உப்பு சேர்த்தபின் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்து கருவேப்பிலை தேவையான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மிளகாய் சட்னி செய்யும் முறை விளக்கம் 3:

Milagai Chutney In Tamil: கருவேப்பிலை சேர்த்தபிறகு நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு பூண்டு பல் 15 நறுக்கியதை சேர்க்கவும்.

பூண்டு மற்றும் வெங்காயம் நன்றாக வதங்க வேண்டும். அடுத்து சிறிதளவு கொத்தமல்லி சேர்க்கவும். கொத்தமல்லி சேர்த்தபின் நன்றாக வதக்கவும்.

பூண்டு வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இப்போது அடுப்பை நிறுத்தி கொள்ளலாம்.

மிளகாய் சட்னி செய்வது எப்படி செய்முறை விளக்கம் 4:

Milagai Chutney Recipe: அடுப்பை நிறுத்திய பிறகு நன்றாக ஆறவைக்க வேண்டும். ஆறவைத்ததை மிக்ஸி ஜாரில் எடுத்து மாற்றவும்.

மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.

அவ்ளோதான் இந்த மிளகாய் சட்னி ரெடிங்க. இந்த சட்னியை நம்ம தோசை, இட்லிக்கு வெச்சி சாப்பிடலாம் ரொம்பவே சுவையாக இருக்கும். கண்டிப்பா இந்த சட்னியை வீட்டுல எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க..! 

இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் (Different chutney recipes in tamil):-

tomato chutney
chutney recipes tamil

சட்னி வகைகள் – chutney recipes tamil – தக்காளி சட்னி செய்வது எப்படி?

தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

 1. வேகவைத்த தக்காளி பழம்- 3
 2. பச்சைமிளகாய் – 4
 3. வெங்காயம் – 1/2 கப்
 4. துருகிய தேங்காய் – 1/4 கப்
 5. உப்பு – தேவையான அளவு
 6. பூண்டு – இரண்டு பற்கள்
 7. எண்ணெய் – தேவையான அளவு

சுவையான தக்காளி சட்னி செய்வது எப்படி? How to make tomato chutney in tamil:

தக்காளி சட்னி செய்முறை:

How to make tomato chutney in tamil step: 1

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடேறியதும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள்.

How to make tomato chutney in tamil step: 2

பின் வேகவைத்து தோல் நீக்கி எடுத்து வைத்துள்ள தக்காளி பழத்தினை வெங்காயத்துடன் சேர்த்து, நன்றாக கொத்திவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

How to make tomato chutney in tamil step: 3

பிறகு பச்சைமிளகாயின் காரத்தை பொறுத்து, 4 அல்லது 5 பச்சைமிளகாயினை சேர்த்து நன்றாக வதக்கிவிடுங்கள்.

பின் துருகி வைத்துள்ள தேங்காயினை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிவிடுங்கள்.

How to make tomato chutney in tamil step: 4

பின் அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைத்து மிக்சியில் நன்றாக மைபோல் அரைதேடுக்கவும்.

How to make tomato chutney in tamil step: 5

பின்பு கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்து அனைவருக்கும் பரிமாறவும். 

சட்னி வகைகள் – இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் (Different chutney recipes in tamil):-

chutney recipes tamil – உளுந்து சட்னி செய்வது எப்படி?

chutney recipes tamil
chutney recipes tamil

உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்:-

 1. உளுத்தம்பருப்பு – அரை டம்பளர்
 2. தேங்காய் துருவல் – சிறிதளவு
 3. காய்ந்த மிளகாய் – 2
 4. புளி – சிறிதளவு
 5. உப்பு – தேவையான அளவு

 சட்னி வகைகள் – உளுந்து சட்னி அரைப்பது எப்படி / உளுந்து சட்னி செய்வது எப்படி

சட்னி வகைகள் – உளுந்து சட்னி செய்முறை:

உளுந்து சட்னி அரைப்பது எப்படி? ஸ்டேப்: 1

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும், அவற்றில் அரை டம்ளர் வெள்ளை உளுந்து சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

உளுந்து சட்னி அரைப்பது எப்படி? ஸ்டேப்: 2

பின் அதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு தேங்காய் துருவல், சிறிதளவு புளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

பின் அடுப்பில் இருந்து இறக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் மைபோல் அரைக்க வேண்டும்.

உளுந்து சட்னி அரைப்பது எப்படி? ஸ்டேப்: 3

பின்பு கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்து அனைவருக்கும் பரிமாறவும்.

இது இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் இந்த சட்னியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்கமாட்டார்கள்.சட்னி வகைகள் – நிலக்கடலை சட்னி அரைப்பது எப்படி / நிலக்கடலை சட்னி வைப்பது எப்படி

chutney recipes tamil
chutney recipes tamil

chutney recipes tamil – சட்னி வகைகள் – நிலக்கடலை சட்னி செய்முறை (chutney recipes in tamil):-

நிலக்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:-

 1. நிலக்கடலை – ஒரு கப்
 2. பொட்டுக்கடலை – 1/4 கப்
 3. பூண்டு பற்கள் –  இரண்டு(பொடிதாக நறுக்கியது)
 4. பச்சைமிளகாய் – 5 (தேவைக்கேற்ப)
 5. புளி – சிறிதளவு
 6. உப்பு – தேவையான அளவு

சட்னி வகைகள் – நிலக்கடலை சட்னி செய்முறை:-

நிலக்கடலை சட்னி செய்வது எப்படி? ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் சூடேறியதும் ஒரு கப் நிலக்கடலை மற்றும் 1/4 கப் பொட்டுக்கடலை இரண்டையும் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.

நிலக்கடலை சட்னி செய்வது எப்படி? ஸ்டேப்: 2

பின் இரண்டு பூண்டு பற்கள் மற்றும் 5 பச்சைமிளகாய், சிறிதளவு புளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

பின்பு அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் மைபோல் அரைத்தெடுக்கவும்.

நிலக்கடலை சட்னி செய்வது எப்படி? ஸ்டேப்: 3

பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் சிறிதளவு கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்துவிடவும்.

இந்த நிலக்கடலை சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்வதற்கு மிகவும் ருசியாக இருக்கும். அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

ஹோட்டல் தோசை போல மொறு மொறுன்னு வேண்டுமா அப்ப இதை செய்ங்க

 சட்னி வகைகள் – கொத்தமல்லி சட்னி செய்முறை (chutney recipes in tamil):-

chutney recipes tamil
chutney recipes tamil

கொத்தமல்லி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:-

 1. வெள்ளை உளுந்து – 1/2 கரண்டி
 2. பெரிய வெங்காயம் – ஒன்று (பொடிதாக நறுக்கியது)
 3. தேங்காய் துருவல் – 1/4 கப்
 4. பச்சைமிளகாய் – 3
 5. பூண்டு பற்கள் – 2
 6. புளி – சிறிதளவு
 7. கொத்தமல்லி – ஒருக்கட்டு
 8. உப்பு – தேவையான அளவு
 9. எண்ணெய் – தேவையான அளவு

chutney recipes tamil – சட்னி வகைகள் – கொத்தமல்லி சட்னி செய்முறை:-

கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி? ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும், 1/2 கரண்டி உளுத்தப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

பின்பு அதனுடன் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி? ஸ்டேப்: 2

பிறகு 1/4 கப் துருகிய தேங்காயினை சேர்த்து வதக்க வேண்டும், பிறகு இரண்டு பூண்டு பற்கள், மூன்று பச்சைமிளகாய், சிறிதளவு புளி, ஒரு கட்டு கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

வதக்கிய பின்பு நன்கு ஆறவைத்து பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் மைபோல் அரைத்து கொள்ளவும்.

கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி? ஸ்டேப்: 3

பின்பு கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்து அனைவருக்கும் பரிமாறவும்.

இது இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

கறிவேப்பிலை சட்னி இப்படி செய்து பாருங்க..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil