பால் பேடா, சுழியம் செய்யலாம் வாங்க..!

diwali recipes

இந்த தீபாவளிக்கு பால் பேடா செய்யலாம் வாங்க..!

பால் பேடா: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த, பால் பேடாவை செய்து, அசத்த வேண்டாமா? சரிவாங்க பால் பேடா கடையில் வாங்காம வீட்டில் எப்படி செய்வது என்று இவற்றில் நாம் காண்போம்.

தேவையான பொருட்கள்:

 1. பால் – 1 லிட்டர்,
 2. பௌடர் செய்த சர்க்கரை – 1 கப்,
 3. வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
 4. ஏலக்காய் தூள் – சிறிதளவு,
 5. பிஸ்தா சீவல் – சிறிதளவு.
  (பேடா அச்சுகள் – பலவகை அளவுகளிலும் வடிவங்களிலும் கடைகளில் கிடைக்கும்… வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது சுத்தமான பாட்டில் மூடிகளை பேடா செய்யப் பயன்படுத்தலாம்).

பால் பேடா செய்முறை:

 • பால் பேடா செய்வதற்கு முதலில் வாய் அகன்ற மிகவும் பெரிதான பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்.
 • அவற்றை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும்.
 • அது கெட்டியாகி, சுருண்டு வரும் போது பௌடர் செய்த சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து காய்ச்சவும்.
 • பாலை மரக்கரண்டியால்தான் கிளற வேண்டும்.
 • கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
 • பால் சுண்ட காய்ந்ததும் இறக்கி வைக்க வேண்டும்.
 • பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து மரக்கரண்டியால் கிளறி கொண்டே இருக்கவும்.
 • அது கெட்டிப் பதத்துக்கு வந்து ஆறியதும் வெண்ணெய் அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டி தேய்க்க வேண்டும்.
 • அதை சிறு சிறு உருண்டைகளாகச் செய்து, அவற்றை பேடா வடிவத்துக்கு செய்யவும்.
 • மத்தியில் கட்டை விரலால் அழுத்தி பிஸ்தா சீவலை அதில் அழுத்தி 2 மணி நேரத்துக்கு பின் பரிமாறவும்.

சோமாசா மற்றும் ரசகுல்லா செய்து அசத்துவோமா..!

சுழியம்:

தீபாவளி பலகாரமா நாம எது செய்றோமோ இல்லையோ ஆனா கண்டிப்பா சுழியம் சென்ஜே ஆகணும். ஏன் என்றால் சுழியம் தீபாவளி பண்டிகைக்கு சாமிகிட்ட வச்சி படைக்கும் ஒரு முக்கியமான பலகாரமாகும்.

சரி வாங்க தோழிகளே சுழியம் எப்படி செய்யுறதுனு இவற்றில் நாம் காண்போம்.

தீபாவளி சுழியம்

தேவையான பொருட்கள்:

 • கடலைப் பருப்பு – 1/4 கிலோ
 • தேங்காய் துறுவல் – 1 கப்
 • வெல்லம் சுவைக்கேற்ப
 • மைதா மாவு தேவைக் கேற்ப
 • ஏலப்பொடி
 • உப்பு

செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை நீர் ஊற்றி பதமாக வேக வைக்கவும்.

பிறகு நீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து எடுக்கவும்.
பின்னர் அதில் தேங்காய் துறுவல், வெல்லம், ஏலப்பொடி, உப்பு முதலியவற்றை போட்டு கையால் கலக்கவும்.

அதன்பின்னர் இக்கவலவையை ஒரு வாணலியில் இட்டு சூடுபடுத்த வேண்டும்.

கலவை கெட்டியாக வரும்போது, இறக்கி சிறு சிறு உருண்டடைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் மைதாவை தண்ணீர் விட்டு கரைத்து, அதில் பிடித்து வைத்துள்ள கடலைப்பருப்புக் கலவை உருண்டைகளை பஜ்ஜி போடுவது போல் மைதா கலவையில் நனைத்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

அவ்வளவுதான் சுவையான கடலை பருப்பு சுழியம் தயார்.

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி..! தினை – தேன் லட்டு மற்றும் பாதாம் ஹல்வா

இந்த தீபாவளிக்கு பால் பர்பி மற்றும் இனிப்பு சீடை செய்யலாமா..!

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல், குறிப்பு மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE