தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? Diwali Sweets Recipes in Tamil

Advertisement

தீபாவளி பலகாரங்கள் – காஜு ஆப்பிள் செய்முறை (Thattai recipe in tamil)..!

Diwali Sweets Recipes in Tamil:- ஸ்வீட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எனவே இந்த தீபாவளி பண்டிகைக்கு அனைவருக்கும் பிடித்த காஜு ஆப்பிள் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

இதை தொடர்ந்து தீபாவளி பலகாரங்களில் செய்யக்கூடிய தட்டை முறுக்கு, போளி, சோமாசா, ரசகுல்லா போன்ற பலகாரங்களின் செய்முறை விளக்கங்களையும் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.

தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் பர்பி செய்வது எப்படி?
தட்டை முறுக்கு செய்முறை..!
தீபாவளி ஸ்பெஷல் போளி செய்முறை..!
இனிப்பு சமோசா செய்வது எப்படி
தீபாவளி ஸ்பெஷல் ரசகுல்லா செய்முறை..!
தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? பகுதி 1
தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? பகுதி 2
தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? பகுதி 3

Diwali Sweets And Snacks

தேவையான பொருட்கள்:-

  1. முந்திரி – ஒரு கப்,
  2. சர்க்கரை – அரை கப்,
  3. தண்ணீர் – கால் கப்,
  4. நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
  5. மஞ்சள் ஃபுட் கலர் – சில துளிகள்,
  6. சிவப்பு ஃபுட் கலர் – சில துளிகள்,
  7. சிறிய பெயின்ட் பிரஷ் – ஒன்று,
  8. கிராம்பு – தேவையான அளவு.

காஜு ஆப்பிள் செய்முறை:-

kaju apple

முதலில் முந்திரி பருப்புகளை மிக்சியில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து சலித்து கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு நன்றாக பாகு காய்ச்சி கொள்ளுங்கள்.

பிறகு அரைத்த முந்திரி பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கைவிடாமல் கிளறுங்கள். இவ்வாறு கைவிடாமல் கிளறுவதினால் சிலநிமிடங்களில் கலவை நன்கு சுருண்டு வரும். சிறிதளவு மாவினை கை விரலால் எடுத்து உருட்டிப்பார்த்தால் உருண்டையாக வர வேண்டும். அதுவே சரியான பதமாகும்.

எனவே சரியான பதம் வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி தட்டில் சிறிதளவு நெய் தடவி மாவினை ஊற்றி பரப்பி ஆறவிடுங்கள்.

மாவானது கை பொருந்தும் அளவிற்கு ஆறிய பிறகு கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆப்பிள் வடிவத்திற்கு தயார் செய்யுங்கள். பிறகு இந்த உருண்டைகள் மீது சிவப்பு நிற ஃபுட் கலரினை பிரஷ் செய்து சிறிது நேரம் காயவைக்கவும்.

இறுதியாக உருண்டையின் நடுவில் சிறிய பள்ளம் பறித்து கிராம்பினை தலைகீழாக சொருகினாள் சுவையான காஜு ஆப்பிள் தயார் இந்த தீபாவளிக்கு செய்து அசத்துங்கள் நன்றி வணக்கம்.



தீபாவளி பலகாரங்கள் – தட்டை முறுக்கு செய்முறை..!

thattai recipe in tamil

தட்டை முறுக்கு தீபாவளி பலகாரங்களில் ஒன்றாகும். இது மிகவும் மொறு மொறுப்பாகவும் மிகவும் சுவையாக இருக்கும். இந்த தட்டை முறுக்கு செய்வது எப்படி (thattai recipe in tamil) / எள்ளடை செய்வது எப்படி என்று இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

Deepavali Sweets

தேவையான பொருட்கள்:-

  1. பச்சரிசி மாவு – இரண்டு கப்
  2. வறுத்து அரைத்த உளுந்து மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
  3. கருவேப்பிலை – சிறிதளவு (பொடிதாக நறுக்கியது)
  4. எள் – 1/2 டீஸ்பூன்
  5. மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்
  6. பெருங்காய தூள் – இரண்டு ஸ்பூன்
  7. ஊறவைத்த கடலை பருப்பு – 2 ஸ்பூன்
  8. வெண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  9. உப்பு – தேவையான அளவு
  10. எண்ணெய் – தேவையான அளவு

தீபாவளி பலகாரங்கள் – தட்டை முறுக்கு செய்வது எப்படி..! Diwali Sweets And Snacks

தீபாவளி பலகாரங்கள் – தட்டை முறுக்கு செய்முறை ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு கப் பச்சரிசி மாவை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.

தீபாவளி பலகாரங்கள் – தட்டை முறுக்கு செய்முறை ஸ்டேப்: 2

பின் வறுத்த மாவை நன்கு ஆறவைக்க வேண்டும். மாவு நன்கு ஆறியதும் அவற்றில் வறுத்து அரைத்த உளுந்து மாவு ஒரு டேபிள் ஸ்பூன், பொடிதாக நறுக்கிய கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் தூள் இரண்டு ஸ்பூன், கருப்பு அல்லது வெள்ளை எள் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன், ஒரு மணி நேரம் ஊறவைத்த கடலை பருப்பு இரண்டு ஸ்பூன், வெண்ணெய் 1 1/2 ஸ்பூன் மற்றும் உப்பு தேவையான அளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தீபாவளி பலகாரங்கள் – தட்டை முறுக்கு செய்முறை ஸ்டேப்: 3

பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து எடுத்து கொள்ளவும். மாவை சப்பாத்தி மாவிற்கு பிசையும் பதத்திற்கு பிசைய வேண்டும்.

இவ்வாறு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.

தீபாவளி பலகாரங்கள் – தட்டை முறுக்கு செய்முறை ஸ்டேப்: 4

பிறகு ஒரு வாழையிலை அல்லது பிளாஸ்ட்டிக் கவரில் எண்ணெயை நன்கு தடவி கொள்ளவும்.

உருட்டிய உருண்டைகளை எண்ணெய் தடவிய பேப்பரில் வைத்து தட்டையாக கையினால் விரித்து விடவும். இவ்வாறே எல்லா சிறு உருண்டைகளையும் தட்டைகளாக விரித்து விடவும்.

தீபாவளி பலகாரங்கள் = தட்டை முறுக்கு செய்முறை ஸ்டேப்: 5

பின் தட்டி வைத்துள்ள தட்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

சுவையான தட்டை முறுக்கு தயார், இந்த தீபாவளிக்கு தட்டை முறுக்கை (thattai recipe in tamil) செய்து அசத்துங்கள்.



தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? – Deepavali Sweets

போளி செய்முறை

தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? வரப்போகுது தீபாவளி… இன்னமும் உங்கள் வீட்டில் பலகாரம் (diwali recipes) செய்ய ஆரமிக்கலயா..? சரி வாங்க இன்று முதல் தீபாவளி பலகாரம் செய்ய ஆரமிப்போம். முதலில் நாம என்ன செய்யப்போகிறோம் என்றால் மைதா மாவில் செய்யக்கூடிய சுவையான போளி செய்முறை விளக்கங்களை தான் தெரிந்து கொள்ளபோகிறோம். தட்டை

அதை தொடர்ந்து ரசகுல்லா எப்படி செய்யப்போகிறோம் என்று இவற்றில் நாம் காண்போம். இல்லத்தரசிகளே (diwali recipes) செய்ய தயாரா ? வாங்க செய்யலாம்.

Diwali Sweets And Snacks..!

போளி செய்ய தேவையான பொருட்கள்:

  1. மைதா மாவு – இரண்டு கப்
  2. உப்பு – தேவையான அளவு
  3. மஞ்சள் தூள் – சிறிதளவு
  4. கடலை பருப்பு – ஒரு கப்
  5. பொடித்த வெல்லம் – 1 1/2 கப்
  6. நெய் – 1/2 ஸ்பூன்
  7. தேங்காய் துருவல் – 1/2 கப்
  8. ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
  9. நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

தீபாவளி பலகாரம் செய்வது எப்படி?

மைதா மாவு பலகாரம் – போளி செய்முறை ஸ்டேப்: 1

ஒரு சுத்தமான பவுலில் இரண்டு கப் மைதா மாவு சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

அதன் பிறகு இந்த மைதா மாவுடன் நான்கு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

மைதா மாவு பலகாரம் – போளி செய்முறை ஸ்டேப்: 2

பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மைதா மாவினை பிசைய வேண்டும். அதாவது சப்பாத்தி மாவை விட தளர்வாக பிசைந்து தனியாக வைத்து கொள்ளவும். மாவானது 1/2 மணி நேரம் வரை நன்றாக ஊற வேண்டும்.

இப்பொழுது பூரணம் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மைதா மாவு பலகாரம் – போளி செய்முறை ஸ்டேப்: 3

ஒரு கப் கடலை பருப்பினை நன்றாக அலசி இரண்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.  கடலை பருப்பு வெந்தவுடன் அவற்றில் இருக்கும் நீரினை வடித்து ஆறவைத்து பருப்பினை மிக்சியில் சேர்த்து மைபோல் அரைத்து கொள்ளவும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 1/2 கப் பொடித்த வெல்லம் மற்றும் 1/4 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்றாக கரைத்து கொள்ளவும்.

வெல்லம் நன்கு கரைந்தவுடன் அவற்றை நன்றாக வடிகட்டி கொள்ளவும்.

மைதா மாவு பலகாரம் – போளி செய்முறை ஸ்டேப்: 4

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் அரை கப் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

தேங்காய் நன்கு வதங்கியவுடன் வெல்ல பாகினை சேர்க்க வேண்டும். பின் 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூளினை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

பின்பு இதனுடன் அரைத்து வைத்துள்ள பருப்பினை சேர்த்து கட்டிகள் பிடிக்காதவாறு நன்றாக கிளறி கொள்ளவும்.

மைதா மாவு பலகாரம் – போளி செய்முறை ஸ்டேப்: 5

பூரணமானது நன்றாக ஒன்று சேர்ந்து திரண்டு வரும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிளறி கொள்ளவும். (கையை தண்ணீரில் நனைத்து பூரணத்தை தொட்டு பார்த்தால் கையில் ஒட்டாதவாறு இருக்க வேண்டும்)

இப்பொழுது பிசைந்த மைதா மாவு மற்றும் பூரணம் இரண்டையும் உருண்டைகள் பிடித்து தயாராக வைத்து கொள்ளவும்.

மைதா மாவு பலகாரம் – போளி செய்முறை ஸ்டேப்: 6

இப்பொழுது வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி, அதில் சிறிதளவு மைதா மாவை வைத்து பூரி வடிவில் தட்டி, அதன் மேல் எலுமிச்சம் பழ அளவு பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் வாழை இலையில் சிறிது நெய் தடவி மாவை வைத்து விரல்களால் சப்பாத்தி போல் தட்டி (பூர்ணம் வெளியில் வரக்கூடாது), தோசைக்கல்லில் போட்டு, அதை சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாக அதாவது சிவக்க வேகவைத்து எடுத்தால் சுவையான போளி தயார்.

இந்த தீபாவளிக்கு போளியை செய்து அசத்துங்கள் நன்றி.



தீபாவளி பலகாரம் செய்வது எப்படி..!

மைதா மாவு பலகாரம் செய்முறை..!

சோமாசா

முதலில் நாம என்ன செய்யப்போகிறோம் என்றால் இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

அதை தொடர்ந்து ரசகுல்லா எப்படி செய்யப்போகிறோம் என்று இவற்றில் நாம் காண்போம். இல்லத்தரசிகளே (diwali recipes) செய்ய தயாரா ? வாங்க செய்யலாம்.

Diwali Sweets Recipes in Tamil..!

சப்பாத்தி செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள்:

  1. மைதா – 1 கப்
  2. உப்பு – தேவையான அளவு
  3. ஒரு ஸ்பூன் – நெய்
  4. தண்ணீர் – தேவையான அளவு

பூரணம் செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள்:

  1. தேங்காய் – 1 (துருவி வைத்து கொள்ளவும்)
  2. பொட்டுக்கடலை – 1/2 கிலோ
  3. ஒரு ஸ்பூன் – கசகசா
  4. ஏலக்காய் – 4
  5. சர்க்கரை – கப்
  6. எண்ணெய் – 1 லிட்டர்

மைதா மாவு பலகாரம் செய்முறை – இனிப்பு சமோசா செய்வது எப்படி..!

palagaram seivathu eppadi – மைதா மாவு பலகாரம் செய்முறை ஸ்டேப்: 1

முதலில் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அவற்றில் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

palagaram seivathu eppadi – மைதா மாவு பலகாரம் செய்முறை ஸ்டேப்: 2

பின்பு ஒரு பாலித்தின் பையை எடுத்து கொள்ளவும். அவற்றில் இந்த மாவை வைத்து மத்தால் நன்றாக குத்திவிட்டு மாவை மூடிவைக்கவும்.

இப்பொழுது பூரணம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். முதலில் ஒரு வாணலியை எடுத்து கொள்ளவும். பின்பு அவற்றை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் தேங்காவை சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.

palagaram seivathu eppadi – மைதா மாவு பலகாரம் செய்முறை ஸ்டேப்: 3

பிறகு மிக்ஸியில் பொட்டுக்கடலையை அரைத்து கொள்ளவும். அரைத்த பொட்டுக்கடலை மாவை, ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு அந்த மிக்ஸியிலேயே சர்க்கரை, ஏலக்காய் மற்றும் கசகசாவை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

palagaram seivathu eppadi – மைதா மாவு பலகாரம் செய்முறை ஸ்டேப்: 4

அரைத்த கலவையை பொட்டுக்கடலை மாவுடன் சேர்க்கவும். பின்பு வதக்கி வைத்துள்ள தேங்காவையும் அவற்றில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்பு பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெலிதாக சப்பாத்தி கட்டையில் தேய்த்து கொள்ளவும்.

palagaram seivathu eppadi – மைதா மாவு பலகாரம் செய்முறை ஸ்டேப்: 5

சோமாசா செய்யும் அச்சியை எடுத்து கொள்ளவும். அவற்றில் இந்த சப்பாத்தியை வைத்து, தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை அவற்றில் ஒரு ஸ்பூன் வைத்து, அந்த அச்சியை அழுத்தி மூடவும்.

இதே போல் மீதமுள்ள மைதா மாவுகளை செய்யவேண்டும்.

இப்பொது ஒரு வாணலியை எடுத்து கொள்ளவும். அவற்றில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, செய்து வைத்துள்ள சோமாசாவை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறத்தில் பொறித்து எடுத்தால் சுவையான சோமாசா தயார்.

தீபாவளிக்கு (diwali recipes) சோமாசா தயார்.



தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? – Deepavali Sweets

இப்போ ரசகுல்லா செய்யலாமா..!

diwali recipes

Deepavali Sweets – தேவையான பொருட்கள்:

  1. பால் –1 லிட்டர்
  2. சர்க்கரை – 1 கப்
  3. தண்ணீர் – 4 கப்
  4. எலுமிச்சை – 2 ஸ்பூன்

ரசகுல்லா செய்முறை:-

தீபாவளி ஸ்பெஷல் பலகாரம் செய்வது எப்படி? – Diwali Sweets Recipes in Tamil

ரசகுல்லா செய்யும் முறை ஸ்டேப்: 1

ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அவற்றில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும்.

பால் நன்றாக கொதித்தவுடன், எலுமிச்சை சாறை ஊற்ற வேண்டும். பால் நன்றாக திரிந்து வரும்.

பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, ஒரு பாத்திரத்தில் வெள்ளை துணியை விரித்து அவற்றில் இந்த பாலை வடிகட்டி கொள்ளவும்.

ரசகுல்லா செய்யும் முறை ஸ்டேப்: 2

தண்ணீர் நன்றாக வடிந்த பின், அந்த பன்னீரில் இருக்கும் புளிப்பு தன்மையை நீக்குவதற்கு திரும்பவும் இரு முறை தண்ணீரை ஊற்றி அலசி தண்ணீர் இல்லாமல் நன்றாக அந்த துணியிலேயே வடிகட்டி கொள்ளவும்.

பின்பு அந்த பன்னீரை ஒரு டேபிளில் வைத்து உங்கள் கைகளால் நன்றாக மசித்து கொள்ளவும்.

ரசகுல்லா செய்யும் முறை ஸ்டேப்: 3

பிறகு அந்த பன்னீரை உங்களுக்கு தேவையான அளவுக்கு சிறு சிறு உருண்டைகளாக விரிசல் இல்லாமல் உருட்டி வைத்து கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அவற்றை அடுப்பில் வைத்து ஒரு கப் சர்க்கரைக்கு, 4 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வைக்கவும்.

ரசகுல்லா செய்யும் முறை ஸ்டேப்: 4

சர்க்கரை கரைந்த பிறகு, அவற்றுள் உருட்டி வைத்துள்ள ரசகுல்லாவை சேர்க்க வேண்டும். பின்பு அவற்றில் ஒரு மூடியை கொண்டு மூடி, சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து பார்த்தால், உருட்டி வைத்த அளவை விட பெரிதாக இருக்கும். அப்போது அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான ரசகுல்லா தயார்.

இந்த தீபாவளிக்கு (diwali recipes) இந்த மூன்று பலகாரங்களையும் செய்து அசத்திடுங்க.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement