தீபாவளி ஸ்வீட் செய்வது எப்படி? Diwali Sweets Recipes in Tamil..!

Advertisement

தீபாவளி புது பலகாரம் ஈஸியா செய்து பாருங்கள்..! Diwali Sweets and Snacks..!

தீபாவளி வேற வரப்போகுது உங்கவீட்டுல என்ன பலகாரம் செய்ய போறீங்க ப்ரண்ட்ஸ்..! இன்னைக்கி நம்ம பொதுநலம் பதிவில் காஜா ஸ்வீட் எப்படி செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இதை தொடந்து தீபாவளி பண்டிகைக்கு செய்ய கூடிய ரிப்பன் பக்கோடா, அசட்டு இனிப்பு முறுக்கு, பால் பர்பி மற்றும் இனிப்பு சீடை ஆகிய பலகாரங்கள் செய்முறை விளக்கத்தை மிக தெளிவாக பதிவு செய்துள்ளோம் எனவே தொடர்ச்சியாக இந்த பதவியை பதிவை படித்து வாருங்கள். இந்த தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம் என்ற ஒரு ஐடியா தங்களுக்கு கிடைக்கும்.

1 தீபாவளி ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா செய்முறை..!
2 தீபாவளி ஸ்பெஷல் அசட்டு இனிப்பு முறுக்கு செய்முறை விளக்கம்..!
3 தீபாவளி ஸ்பெஷல் பால் பர்பி செய்முறை விளக்கம்..!
4 தீபாவளி ஸ்பெஷல் இனிப்பு சீடைசெய்முறை விளக்கம்..!
5 தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? பகுதி 1
6 தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? பகுதி 2 
7 தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? பகுதி 3
8 தீபாவளி ஸ்பெஷல் கடலை மாவு பர்பி செய்முறை விளக்கம்..!
9 தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் பர்பி செய்வது எப்படி?

காஜா ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள்:-

  1. மைதா மாவு – இரண்டு கப்
  2. சர்க்கரை – ஒரு கப்
  3. உப்பு – தேவையான அளவு
  4. நெய் – தேவையான அளவு
  5. ஆயில் – தேவையான அளவு
  6. ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்
  7. எலுமிச்சை ஜூஸ் – 1/2 ஸ்பூன்

kaja sweet recipe in tamil

காஜா ஸ்வீட் செய்முறை:-

ஸ்டேப்: 1

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் இரண்டு கப் மைதா மாவு இரண்டு டேபிள் ஸ்பூன் நெய், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக சாப்டாக பிசைந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு கப் சர்க்கரை, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி 1/2 கம்பி பதம் வரும் அளவிற்கு சக்கரை பாகாக காச்சி கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

kaja recipe

பிறகு பிசைந்த மைதா மாவினை மேல் படத்தில் காட்டியுள்ளது போல் நைசாக தேய்த்து, பிறகு எண்ணெய் தடவி, சிறிதளவு மைதா மாவு தூவி அழுத்தி உறுத்தாமல் மாவினை லேசாக உருட்ட வேண்டும். இவ்வாறு உருட்டுவதினால் மாவினை கட்  செய்யும் பொழுது நமக்கு ஒரு லேயர் போன்று கிடைக்கும்.

ஸ்டேப்: 5

kaja recipes 1

பின் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் உருட்டிய மாவினை கிராஸாக கட்  செய்ய வேண்டும்.

பிறகு உருட்டிய மைதா மாவினை சப்பாத்தி கட்டையினை பயன்படுத்தி லேசாக தேய்த்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 6

பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயினை ஊற்றி நன்றாக சூடேற்றவும். எண்ணெய் சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து. தேய்த்து வைத்துள்ள மைதா மாவினை சேர்த்து பொரிக்க வேண்டும்.

ஸ்டேப்: 7

பொரித்த இந்த காஜா துண்டுகளை மிதமான சூட்டில் சர்க்கரை பாகில் சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

30 நிமிடம் ஊறிய பின் ஒரு சுத்தமான பிளேட்டில் வைத்து அனைவருக்கும் பரிமாறுங்கள்.

சுவையான காஜா ஸ்வீட் இந்த தீபாவளிக்கு செய்து அசத்துங்கள் நன்றி வணக்கம்..



தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? ஓலை பக்கோடா / ரிப்பன் பக்கோடா / நாடா பக்கோடா / Ribbon pakoda recipe in tamil

ribbon pakoda recipe in tamil

தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? தீபாவளி வந்துடிச்சி உங்க வீட்ல பலகாரம் சுட ஆரமிச்சிட்டீங்களா… நாங்க எங்கவீட்ல ஸ்டாட் பன்னியாசிங்க. இன்னைக்கி எங்க வீட்டுல ஓலை பக்கோடா(என்ற)ரிப்பன் பக்கோடா செய்தோம் அவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கு நாங்கள் பதிவு செய்துள்ளோம். அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

அதை தொடர்ந்து ரிப்பன் பக்கோடா, அசட்டு இனிப்பு முறுக்கு, கடலை மாவு பர்பி, பால் பர்பி போன்றவற்றின் செய்முறை விளக்கங்களையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

Diwali Sweets and Snacks..!

ரிப்பன் பகோடா செய்ய தேவையான பொருட்கள்:-

  1. கடலை மாவு – 2 கப்
  2. பச்சரிசி மாவு – 1 கப்
  3. பொட்டுக்கடலை மாவு – 1 டீஸ்பூன்
  4. மிளகாய் தூள் – தேவையான அளவு
  5. பெருங்காய தூள் – 1/2 தேக்கரண்டி
  6. வெண்ணெய் – 1 மேஜை கரண்டி
  7. உப்பு – தேவையான அளவு
  8. எண்ணெய் – தேவையான அளவு

ரிப்பன் பக்கோடா செய்முறை ஸ்டேப் (Ribbon pakoda recipe in tamil): 1

ரிப்பன் பக்கோடா செய்வதற்கு ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் இரண்டு கப் கடலை மாவு, ஒரு கப் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு 1 டீஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், பெருங்காய தூள் 1/2 தேக்கரண்டி, வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி, உப்பு தேவையான அளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

ரிப்பன் பக்கோடா செய்முறை ஸ்டேப் (Ribbon pakoda recipe in tamil): 2

மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

ரிப்பன் பகோடா செய்முறை ஸ்டேப் (Ribbon pakoda recipe in tamil): 3

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், ஓலை பகோடா அச்சியை பயன்படுத்தி, எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக பிழிந்து பொன்னிறமா பொரித்து எடுக்க வேண்டும்.

அவ்வளவு தாங்க இந்த ரிப்பன் பக்கோடா செய்முறை. இந்த தீபாவளிக்கு உங்க வீட்டில் செய்து அசத்துங்கள் மிகவும் சுவையாக மற்றும் மொறு மொறுப்பாக இருக்கும்.



தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? – Diwali Sweets Recipes in Tamil

sweet murukkuதீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? – தீபாவளி வேற வரப்போகுது எல்லார் வீட்டிலும் புது ட்ரெஸ் எடுப்பீங்க ஆனா பலகாரம் மட்டும் எப்போதும் செய்கின்ற பலகாரத்தைத் தான் செய்விங்க. இந்த தீபாவளி புது ட்ரெஸ் மாதிரி புது பலகாரம் (diwali recipes in tamil) செய்து அசத்துவோமா.

சரிவாங்க இந்த தீபாவளிக்கு (diwali recipes in tamil) புது பலகாரம் என்ன செய்வது என்று இவற்றில் நாம் காண்போம்.

இந்த ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும். எளிதில் செய்து முடித்து விடலாம். சரி வாங்க இதன் செய்முறை விளக்கங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? அசட்டு இனிப்பு முறுக்கு செய்முறை:-

தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? / பச்சரிசி பலகாரம் – தேவையானவை:

  1. பச்சரிசி மாவு – 2 கப்
  2. சர்க்கரை – அரை கப்
  3. தேங்காய்ப் பால் – ஒரு கப்
  4. உப்பு – ஒரு சிட்டிகை
  5. நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  6. உளுத்தமாவு – 1/4 கப்
  7. எண்ணெய் – தேவையான அளவு

தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? அசட்டு இனிப்பு முறுக்கு செய்முறை:-

பச்சரிசி பலகாரம்:- பச்சரிசி மாவு, உளுத்தமாவு இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும்.

சர்க்கரையைப் பொடி செய்து அதனுடன் சேர்க்கவும்.

உப்பு, நெய் சேர்த்து தேங்காய்ப் பாலை சிறிது சிறிதாக விட்டு பிசையவும்.

முறுக்கு அச்சியில் பிழிந்து மிதமான தீயில் வைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இது உப்பு, இனிப்பு என புது சுவையில் இருக்கும்.



தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? – Deepavali Sweets

கடலை மாவு பர்பி:-

தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? (diwali recipes in tamil) இந்த முறை தீபாவளிக்கு உங்கள் வீட்டில் கடலை மாவு பர்பியை செய்து அசத்தலாமா.

தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி?

 

Diwali Sweets and Snacks

தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? பலகாரம் செய்ய தேவையான பொருட்கள்:

  1. சக்கரை – 3/4 கப்
  2. ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
  3. நெய் – 1/2 கப்
  4. கடலை மாவு – ஒரு கப் (100 கிராம்)
  5. பொடிதாக நறுக்கிய பாதாம் – சிறிதளவு
  6. குங்குமப்பூ – சிறிதளவு

சுவையான ட்ரை ஃப்ரூட் ஹல்வா செய்முறை..!

செய்முறை விளக்கம்:

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி கடலை மாவு பர்பி செய்முறை ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 3/4 கப் சர்க்கரை மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சி கொள்ளவும்.

பின்பு அடுப்பில் இருந்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி கடலை மாவு பர்பி செய்முறை ஸ்டேப்: 2

பின்பு மற்றொரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து 1/2 கப் நெய் சேர்த்து கொள்ளவும், நெய் உருகியதும் அவற்றில் ஒரு கப் கடலை மாவை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

அதாவது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை நன்றாக கிளறிவிடுங்கள்.

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி கடலை மாவு பர்பி செய்முறை ஸ்டேப்: 3

பின்பு காய்ச்சி வைத்துள்ள சக்கரை பாகினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிவிடுங்கள். இரண்டு நிமிடங்கள் வரை இவ்வாறு கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள்.

பின் நெய் தடவிய பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி அதன் மீது பொடிதாக நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் குங்குமப்பூ தூவி குறைந்தது இரண்டு மணி நேரம் வரை நன்கு ஆறவிடுங்கள்.

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி கடலை மாவு பர்பி செய்முறை ஸ்டேப்: 4

ஒரு மணிநேரம் கழித்த பின்பு பாத்திரத்தில் இருந்து அந்த கலவையை தனியாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக கட் செய்தால் சுவையான கடலை மாவு பர்பி தயார். இந்த தீபாவளிக்கு இதை செய்து அசத்துங்கள்.



தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? – Diwali Sweets Recipes in Tamil

பால் பர்பி

இந்த தீபாவளிக்கு பால் பர்பி மற்றும் இனிப்பு சீடை செய்யலாமா..!

பால் பர்பி:

தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? பலகாரம் செய்ய தேவையான பொருட்கள்:

  1. பால் பௌடர் – இரண்டு கப் (250 கிராம்)
  2. சர்க்கரை – ஒரு கப் (150 கிராம்) பொடிசெய்தது
  3. பால் – அரை கப்
  4. நெய் – அரை கப்
  5. முந்திரி, பிஸ்தா மற்றும் குங்குமப்பூ – தேவையான அளவு
  6. ஏலக்காய் பௌடர் – ஒரு ஸ்பூன்

தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? பால் பர்பி செய்முறை:-

palagaram seivathu eppadi step: 1

பால் பர்பி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அவற்றை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருக்கி கொள்ளவும்.

பின்பு அவற்றில் அரை கப் பாலை ஊற்றி நன்றாக கலந்து விடவும்.

பிறகு அவற்றில் இரண்டு கப் பால் பௌடரை சேர்க்க வேண்டும்.

palagaram seivathu eppadi step: 2

அதன் பிறகு அவற்றை கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

பின்னர் பௌடர் செய்து வைத்திருக்கும் சர்க்கரையை அவற்றில் சேர்க்க வேண்டும்.

சர்க்கரையை அவற்றில் சேர்க்கும் போது அந்த கலவையில் சர்க்கரை பாகு உருகி தண்ணீர் போல் நீர்த்து போகும். எனவே தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

palagaram seivathu eppadi step: 3

குறிப்பாக அடுப்பை மிதமான சூட்டில் தான் வைத்திருக்க வேண்டும்.

கலவை கெட்டியாகும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

இப்போது ஏலக்காய் பௌடரை சேர்க்க வேண்டும்.

கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

பிறகு ஒரு சதுரமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அவற்றில் நெய் தடவி பின்பு அந்த கலவையை அந்த பாத்திரத்தில் கொட்டி தோசை கரண்டியை பயன்படுத்தி அந்த கலவையை சமன்படுத்தவும்.

palagaram seivathu eppadi step: 4

பின்பு அவற்றில் மீது முந்திரி, பிஸ்தா மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை தூவி அவற்றையும் தோசை கரண்டியால் சமன்படுத்தவும்.

பிறகு அந்த பால் பர்பியை அந்த பத்திரத்திலேயே இரண்டு மணி நேரம் வரை வைத்திருக்கவும்.

இரண்டு மணி நேரம் கழித்து அந்த பால் பர்பியை அந்த பாத்திரத்தில் இருந்து தனியாக எடுத்து உங்களுக்கு தேவையான அளவுக்கு பீஸ் போட்டு எடுத்தால் சுவையான பால் பர்பி தயார்.

தீபாவளி பலகாரமாக (diwali recipes in tamil) இந்த முறை பால் பர்பி செய்து அசத்துங்க.

தீபாவளி ஸ்பெஷல் பலகாரம் செய்வது எப்படி?

 



இனிப்பு சீடை (diwali recipes in tamil)..!

இனிப்பு சீடை

தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? – பச்சரிசி மாவில் என்ன செய்யலாம், பச்சரிசி மாவு சுவையான இனிப்பு சீடை செய்யலாம். மிகவும் ருசியாக இருக்கும். சிறியவர்கள், பெரியவர்கள் என்று அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க பச்சரிசி மாவில் செய்யக்கூடிய இனிப்பு சீடை செய்யலாம் வாங்க..!

தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? பலகாரம் செய்ய தேவையான பொருட்கள்:

  1. பச்சரிசி மாவு – 250 கிராம்
  2. வறுத்த உளுந்தமாவு – 1 ஸ்பூன்
  3. வெல்லம் – 150 கிராம்
  4. தேங்காய் துருவல் – ஒரு ஸ்பூன்
  5. எள்ளு – ஒரு ஸ்பூன்
  6. ஏலக்காய் தூள் – ஒரு ஸ்பூன்

பச்சரிசி பலகாரம் செய்முறை:-

இனிப்பு சீடை தயாரிப்பது எப்படி ஸ்டேப்: 1

பச்சரிசி பலகாரம்:- இனிப்பு சீடை செய்வதற்கு முதலில் பச்சரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

பின்பு தண்ணீரை சுத்தமாக வடித்து சுத்தமான துணியில் உலர்த்த வேண்டும்.

தண்ணீர் உலர்ந்த பிறகு அரை ஈரப்பதத்தில் மிக்ஸியில் பச்சரிசியை அரைக்க வேண்டும்.

இனிப்பு சீடை தயாரிப்பது எப்படி ஸ்டேப்: 2

பிறகு சல்லடையில் பச்சரிசி மாவை சலிக்க வேண்டும்.

வெல்லத்தை பொடியாக நன்கு பொடித்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு அந்த பச்சரிசி மாவில் இந்த வெல்லத்தை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

இனிப்பு சீடை தயாரிப்பது எப்படி ஸ்டேப்: 3

பிறகு ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அவற்றில் அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவுடன்,உளுந்தமாவு, தேங்காய் துருவல். எள்ளு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இப்போது அந்த மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.

இனிப்பு சீடை தயாரிப்பது எப்படி ஸ்டேப்: 4

பின்பு அடுப்பில் வாணலியை வைத்து அவற்றில் எண்ணெயை ஊற்ற வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொண்டு, சீடை உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான இனிப்பு சீடை (diwali recipes in tamil) தயார்.

தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement