5 நிமிடத்தில் தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? Diwali Sweets Recipes in Tamil

Advertisement

தீபாவளி ஸ்பெஷல் பலகாரம் செய்வது எப்படி? Diwali Sweets and Snacks..!

Diwali Sweets and Snacks:- வணக்கம் நண்பர்களே இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. எனவே தீபாவளியை முன்னிட்டு இந்த பதிவில் தீபாவளிக்கு என்னென்ன பலகாரம் செய்யலாம் என்று பட்டியலிட்டுள்ளோம். தீபாவளி பலகாரங்கள் (diwali recipes) இந்த முறை உங்கள் வீட்டில் கவுனி அரிசி அல்வா செய்து அசத்தலாமா? இந்த ரெசிபி மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது.

சரி வாங்க தீபாவளி ஸ்பெஷல் பலகாரம் செய்வது எப்படி? என்ற தலைப்பில் கவுனி அரிசி அல்வா எப்படி செய்வது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

1 தீபாவளி ஸ்பெஷல் மிளகு காராசேவு
2 தீபாவளி ஸ்பெஷல் சிமிலி உருண்டை செய்முறை..!
3 தீபாவளி ஸ்பெஷல் தினை – தேன் லட்டு
4 தீபாவளி ஸ்பெஷல் பாதாம் ஹல்வா செய்வது எப்படி ?
5 தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? பகுதி 1
6 தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? பகுதி 2
7 தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? பகுதி 3
தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் பர்பி செய்வது எப்படி?

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி – Diwali Sweets Recipes in Tamil..!

தீபாவளி ஸ்பேஷல் கவுனி அரிசி அல்வா..!

kavuni arisi halwa

diwali palagaram – தேவையான பொருட்கள்:-

  1. கவுனி அரிசி மாவு – 1 கப்,
  2. சர்க்கரை இல்லாத கோவா – 1/2 கப்,
  3. கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
  4. நெய் – 1/4 கப்,
  5. வெல்லம் – 1 கப்,
  6. முந்திரி, திராட்சை, பாதாம் – தேவைக்கேற்ப,
  7. பால் – 4 டேபிள்ஸ்பூன்.

கவுனி அரிசி அல்வா செய்முறை:

kavuni arisi halwa recipe in tamil step: 1

அடுப்பில் வாணலியைவைத்து கொஞ்சம் நெய்விட்டு சூடானதும் முந்திரி, திராட்சையைச் சேர்த்து வறுத்தெடுத்துத் தனியாக வைக்கவும்.

அதே வாணலியில் கவுனி அரிசி மாவு, கோதுமை மாவை வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

kavuni arisi halwa recipe in tamil step: 2

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லம், தண்ணீர் சேர்த்து வெல்லத்தைக் கரையவிடவும்.

வெல்லம் கரைந்ததும் வடிகட்டி தனியாக வைக்கவும்.

kavuni arisi halwa recipe in tamil step: 3

அடிகனமான பாத்திரத்தில் வறுத்த கவுனி அரிசி மாவு, கோதுமை மாவு, பால், வெல்லக்கரைசல், சர்க்கரை சேர்க்காத கோவாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

kavuni arisi halwa recipe in tamil last step:

இடையிடையே நெய்விட்டு கிளறவும். கலவை வாணலியில் ஒட்டாமல் வரும்வரை கிளறுங்கள், பிறகு அடுப்பில் இருந்து இறக்கி முந்திரி, திராட்சை, பாதாம் போன்றவற்றை தூவினால் சுவையான கவுனி அரிசி ஹல்வா தயார்.

இந்த தீபாவளிக்கு கவுனி அரிசி அல்வா செய்து அசத்துங்கள்.



மிளகு காராசேவு செய்முறை (Karasev recipe in tamil)..!

மிளகு காராசேவு செய்முறை:-

Diwali Sweets and Snacks:- தீபாவளி பலகாரங்கள் (diwali palagaram) இந்த முறை உங்கள் வீட்டில் மிளகு காராசேவு செய்து அசத்தலாமா? இந்த ரெசிபி மிகவும் சுவையானது அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியது. சரி வாங்க மிளகு காராசேவு செய்வது எப்படி? என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

மிளகு காராசேவு செய்ய தேவையான பொருட்கள்:-

  1. கடலை மாவு – ஒரு கப்
  2. அரிசி மாவு – 1/4 கப்
  3. வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  4. உப்பு – தேவையான அளவு
  5. பூண்டு – இரண்டு பற்கள் பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும்.
  6. மிளகு – 1/2 ஸ்பூன் கொரகொரப்பாக அரைத்தது
  7. மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகு காராசேவு செய்முறை ஸ்டேப்: 1

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும், அவற்றில் ஒரு கப் கடலை மாவு, அரிசி மாவு 1/4 கப், வெண்ணெய் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு.

பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், மிளகு தூள் 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து. நன்றாக கலந்து கொள்ளவும்.

பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவிற்கு பிசைவது போல் மாவினை நன்கு பிசைந்து கொள்ளவும்.

மிளகு காராசேவு செய்முறை ஸ்டேப்: 2

அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பிசைந்த மாவினை முறுக்கு அச்சியில் வைத்து எண்ணெய் நேராக பிழிந்து விடவும். பின் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையுள்ள மிளகு காராசேவு தயார்.

இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள் மிகவும் சிவையாக இருக்கும்.



தீபாவளி ஸ்பெஷல் பலகாரம் செய்வது எப்படி?

Diwali Sweets Recipes in Tamil..!

சிமிலி உருண்டை செய்முறை:-

தீபாவளி பலகாரங்கள் (diwali recipes) இந்த முறை உங்கள் வீட்டில் சிமிலி உருண்டை பலகாரம் செய்து அசத்தலாமா? இந்த ரெசிபி மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது.

சரி வாங்க தீபாவளி ஸ்பெஷல் பலகாரம் செய்வது எப்படி? என்ற தலைப்பில் சிமிலி உருண்டை எப்படி செய்வது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

சிமிலி உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:-

  1. எள் – 1/4 கப்
  2. ராகி மாவு – 1 கப்
  3. வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்
  4. வெல்லம் – ஒரு கப்

சிமிலி உருண்டை செய்முறை..!

தீபாவளி ஸ்பெஷல் பலகாரம் செய்வது எப்படி? ஸ்டேப்: 1

முதலில் 1/4 கப் எள்ளினை தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக அலசிக்கொள்ளவும்.

பின் அலசிய எள்ளினை ஒரு காட்டன் துணியில் போட்டு சிறிது நேரம் உலர்த்த வேண்டும்.

தீபாவளி ஸ்பெஷல் பலகாரம் செய்வது எப்படி? ஸ்டேப்: 2

அதன் பிறகு ஒரு கப் ராகி மாவினை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

இப்பொழுது பிசைந்த மாவினை இட்லி பாத்திரத்தை வைத்து 15 நிமிடங்கள் வரை நன்கு வேகவைத்து கொள்ளவும்.

தீபாவளி ஸ்பெஷல் பலகாரம் செய்வது எப்படி? ஸ்டேப்: 3

அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 1/4 கப் வேர்க்கடலையை சேர்த்து லேசாக வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

பின் அதே கடாயில் எள்ளினை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

இப்பொழுது வறுத்த வேர்க்கடலை மற்றும் எள்ளினை தனி தனியாக மிக்சியில் சேர்த்து பவுடர் போல் அரைத்து கொள்ளவும்.

தீபாவளி ஸ்பெஷல் பலகாரம் செய்வது எப்படி? ஸ்டேப்: 4

பின் ஒரு கப் வெல்லத்தையும் மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

இப்பொழுது ராகி மாவுடன் அரைத்து வைத்துள்ள வெல்லம், எள் மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றையும் சேர்த்து ஒன்றாக கலந்து, மறுபடியும் இந்த கலவையை ஒரு முறை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். சிமிலி உருண்டை செய்ய மாவு இப்பொழுது தயாராகிவிட்டது.

இந்த அரைத்த கலவையினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டினால் சிமிலி உருண்டை தயார்.

இந்த தீபாவளிக்கு சிமிலி உருண்டையினை செய்து அசத்துங்கள்.



தீபாவளி ஸ்பெஷல் பலகாரம் செய்வது எப்படி? – Deepavali sweets

தீபாவளி பலகாரங்கள் (diwali recipes) இந்த முறை உங்கள் வீட்டில் தேன் தினை மாவு லட்டு மற்றும் பாதாம் ஹல்வா ஆகிய பலகாரங்களை செய்து அசத்தலாமா. இந்த இரண்டு ரெசிபியும் மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது.

உங்கள் வீட்டில் இந்த பலகாரத்தை செய்து பாராட்டு மற்றும் புகழுரை இரண்டையும் பெற வாழ்த்துக்கள்.

சரி வாங்க சுவையான இந்த இரண்டு பலகாரங்களையும் எப்படி செய்வது என்று இவற்றில் நாம் காண்போம்.

தீபாவளி ஸ்பெஷல் பலகாரம் செய்வது எப்படி? பகுதி 1 

Diwali Sweets Recipes in Tamil..!

தினை – தேன் லட்டு:

தேவையான பொருட்கள்:

  • தினை – தலா 100 கிராம்
  • ரவை – 100 கிராம்
  • நெய் – 100 கிராம்,
  • சர்க்கரை – 200 கிராம் (பொடித்தது),
  • பாதாம் பருப்பு அல்லது முந்திரி-தேவைக்கேற்ப,
  • ஏலக்காய் தூள்- சிறிது,
  • தேன் – 100 கிராம்.

செய்முறை:

Palagaram seivathu eppadi step: 1

கடைகளில் தினை அரிசி என்று கேட்டால் கிடைக்கும்.

அவற்றை வாங்கி சுத்தம் செய்து கொண்டு, பின்பு வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை மிதமான சூட்டில் நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

Palagaram seivathu eppadi step: 2

அதே போல் ரவையையும் வறுக்க வேண்டும்.

வறுத்த தினை அரிசி மற்றும் ரவை இரண்டும் ஆறியதும், ஏலக்காய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

பின்பு சர்க்கரையையும் சேர்த்து கரைக்கவும்.

பின் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

Palagaram seivathu eppadi step: 3

பிறகு முந்திரி பருப்பை ஒன்னிரண்டாக உடைத்து, நெய் விட்டு வறுத்து சேர்த்து கொள்ளவும்.

பின் நெய்யை நன்றாக சூடு செய்து கலவையில் கொட்டி கலந்து, தேன் சேர்த்து கலந்து சிறு, சிறு உருண்டையாகப் பிடித்தால் தினை மாவு லட்டு ரெடி.

இந்த தினை மாவு லட்டுவை (diwali recipes) உங்கள் தீபாவளி பண்டிகைக்கு செய்து அனைவரிடமும் பாராட்டை பெறுங்கள்.



தீபாவளி ஸ்பெஷல் பாதாம் ஹல்வா செய்வது எப்படி? – Deepavali sweets

Diwali Sweets and Snacks

தேவையான பொருட்கள்:

  • பாதாம் – 1/2 கப்
  • சர்க்கரை – 1/2 கப்
  • பால் – 1 கப்
  • நெய் – 1/2 கப்
  • குங்குமப்பூ – சிறிது (பாலில் ஊற வைத்தது)

பாதாம் ஹல்வா செய்முறை:-

தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? step: 1

பாதாம் பருப்பை முதல் இரவே நன்கு ஊறவைத்து, அடுத்த நாள் காலையில் தோல் நீக்கி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி வாணலியில் பரப்பிக் கொள்ள வேண்டும்.

தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? step: 2

பின்னர் அதே வாணலியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைய விட வேண்டும்.

பிறகு அதில் பாதாம் பேஸ்ட் சேர்த்து, பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? step: 3

அப்படி கிளறி விடும் போது, கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் பாதி நெய் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி விடும் போது, நெய்யை அல்வா முற்றிலும் உறிஞ்சி சுருண்டு வர ஆரம்பிக்கும்.

அப்படி நெய்யானது முற்றிலும் வற்றியதும், வாணலியை இறக்கி, மீதமுள்ள நெய் சேர்த்து ஒருமுறை கிளறி குளிர வைத்தால், பாதாம் அல்வா ரெடி.

இந்த பாதாம் ஹல்வாவை (diwali recipes) உங்கள் தீபாவளி பண்டிகைக்கு செய்து அனைவரிடமும் புகழுரையை பெறுங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement