Egg 65 Recipe in Tamil
அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் முட்டை வைத்து 65 செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள போகிறோம். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி 65 செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நாம் முட்டையை அவித்து, பொறித்து மற்றும் குழம்பு செய்து சாப்பிட்டிருப்போம்.
முட்டையில் எந்த வகையான உணவு செய்து கொடுத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுபோல முட்டையில் 65 செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா..? அந்த வகையில் இந்த பதிவின் மூலம் முட்டை 65 செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சிக்கன் 65 யை மிஞ்சிடும்.! சோயா 65 |
முட்டை 65 செய்வது எப்படி..?
முட்டை 65 – தேவையான பொருட்கள்:
- முட்டை – 4
- சின்ன வெங்காயம் – 6
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- சோம்பு – 1 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- சீரகம் – அரை டீஸ்பூன்
- சோளமாவு – 2 டேபிள்ஸ்பூன்
- கறிவேப்பில்லை – 1 கொத்து
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- புட் கலர் – 1/4 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
முட்டை 65 செய்முறை:
செய்முறை -1
முதலில் முட்டையை தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைக்க வேண்டும். பின் அதன் ஓட்டை நீக்கி விட்டு ஒரே அளவில் சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
செய்முறை -2
பிறகு சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய் தூள், சோம்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு மை போல அரைத்து கொள்ள வேண்டும்.
செய்முறை -3
பின் அரைத்த இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் சிறிதளவு சோள மாவு, புட் கலர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
செய்முறை -4
பின்னர் நாம் வெட்டி வைத்துள்ள முட்டைகளை இந்த கலவையில் போட்டு அரை மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.
செய்முறை -5
பிறகு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக சூடானதும் முட்டை துண்டுகளை போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.
அவ்வளவு தான்..! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய முட்டை 65 தயார்..!
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |