Egg and Brinjal Recipe in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே.! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது முட்டையையும், கத்திரிக்காயையும் வைத்து மிக அருமையான மற்றும் மிகவும் எளிமையான காலை உணவு செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். கத்திரிக்காயில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளதால் அதனை நீங்கள் உங்களின் குழந்தைகளுக்கு சமைத்து கொடுப்பீர்கள். ஆனால் அவர்கள் கத்திரிக்காயை அதிகமாக விரும்பி சாப்பிடமாட்டார்கள். அதனால் இந்த பதிவில் கூறியுள்ளது போல் நீங்கள் ஒருமுறை செய்து கொடுத்துப்பாருங்கள். பின்னர் அவர்களே திரும்ப திரும்ப செய்துதருமாறு விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
New Breakfast Recipe in Tamil:
முதலில் இந்த காலைஉணவு செய்ய தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- முட்டை – 2
- கத்தரிக்காய் – 2
- மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய்தூள் – 3/4 டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
- கேரட் – 1
- வெங்காயம் – 1
- கொத்தமல்லியிலை – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – 3/4 டீஸ்பூன்
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 2 கத்திரிக்காயை நன்கு தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்துவிட்டு. பின்னர் அதனை சிறிய சிறிய வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பிறகு நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைத்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
அடுத்து ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்துவைத்துள்ள 2 முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/4 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் 1/4 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பின்னர் இதனுடன் 1 கேரட், 1 வெங்காயம் மற்றும் தேவையான அளவு கொத்தமல்லியிலை ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கி சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி பின்னர் அதில் நாம் முன்னரே தயார் செய்து வைத்திருந்த கத்திரிக்காய்களை சேர்த்து முன்னும் பின்னும் பிரட்டி நன்கு வேகவைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 6
கத்தரிக்காய் நன்கு வெந்தவுடன் அதன் மேல் நாம் தயார் செய்து வைத்திருந்த முட்டையை ஊற்றி முன்னும் பின்னும் பிரட்டி வேகவைத்துக் கொள்ளுங்கள்.
இதனை நீங்கள் அப்படியேயும் பரிமாறலாம் அப்படியில்லையென்றால் சப்பாத்தின் நடுவில் வைத்து ரோல் செய்தும் உங்கள் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
இதனை ஒருமுறை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்துப்பாருங்கள் பின்னர் அவர்களே திரும்ப திரும்ப செய்துதருமாறு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
முட்டை இருக்கா அப்போ இந்த மாதிரி 65 செஞ்சி சாப்பிட்டு பாருங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |