சுவையான முட்டை மஞ்சூரியன் எப்படி செய்வது? Egg Manchurian Recipe..!

முட்டை மஞ்சூரியன்  செய்முறை

சுவையான முட்டை மஞ்சூரியன் எப்படி செய்வது?

Egg Manchurian Recipe:- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி என்று இப்போது நாம் இந்த பகுதியில் தெரிந்து கொள்வோம் வாங்க..!

முட்டை மஞ்சூரியன் செய்ய (egg manchurian recipe) தேவையான பொருட்கள்:-

  1. மிளகு தூள் – தேவையான அளவு,
  2. உப்பு – தேவையான அளவு,
  3. மைதா – கால் கப்
  4. சோள மாவு – கால் கப் + 1 ஸ்பூன்
  5. மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
  6. எண்ணெய் – தேவையான அளவு
  7. பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 ஸ்பூன்
  8. பொடியாக நறுக்கிய பூண்டு – 1 ஸ்பூன்
  9. வெங்காயம் – 1
  10. குடைமிளகாய் – 1
  11. சில்லி சாஸ் – 2 ஸ்பூன்
  12. Tomato ketchup2 ஸ்பூன்,
  13. சோயா சாஸ் – 1 ஸ்பூன்,
  14. வெங்காயத்தாள் – சிறிதளவு.
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ..!

முட்டை மஞ்சூரியன் செய்முறை விளக்கம்..!

முட்டை மஞ்சூரியன்  செய்முறை (Egg Manchurian Recipe) ஸ்டேப்: 1

egg manchurian in tamil: ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

பின்னர் சிறிது எண்ணெய் தடவிய அகன்ற கிண்ணத்தில் அடித்து வைத்த முட்டையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

முட்டை மஞ்சூரியன்  செய்முறை (Egg Manchurian Recipe) ஸ்டேப்: 2

வேக வைத்த முட்டையை பாத்திரத்தில் இருந்து தனியாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு பவுலில் கால் கப் மைதா மாவு, கால் கப் சோளமாவு மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளவும்.

முட்டை மஞ்சூரியன்  செய்முறை (Egg Manchurian Recipe) ஸ்டேப்: 3

பின்பு அதில் முட்டை துண்டுகளை போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

இப்போது முட்டை மஞ்சூரியன் செய்வதற்கு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும்.

முட்டை மஞ்சூரியன்  செய்முறை (egg manchurian recipe in tamil) ஸ்டேப்: 4

பின்பு பொடிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதக்கியதும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக இரண்டு நிமிடங்கள் வரை வதக்க வேண்டும்.

பின்பு இதனுடன் சில்லி சாஸ், tomato ketchup, சோயா சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.

முட்டை மஞ்சூரியன்  செய்முறை ஸ்டேப் (Egg Manchurian Recipe): 5

இந்த கலவையுடன் சிறிதளவு சோள மாவை கரைத்து ஊற்றி திக்கான பதம் வந்தவுடன் பொரித்து வைத்துள்ள முட்டையை போட்டு உடையாமல் கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

இப்பொழுது சுவையான முட்டை மஞ்சூரியன் (egg manchurian in tamil) தயார் அன்புடன் அனைவருக்கும் பரிமாறவும்.

செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை..!

 

இதுபோன்று சுவைசுவையான சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்பு