வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஹோட்டல் சுவையில் எக் நூடுல்ஸ் செய்வது எப்படி..?

Updated On: February 16, 2023 11:56 AM
Follow Us:
egg noodles recipe indian style
---Advertisement---
Advertisement

எக் நூடுல்ஸ் செய்வது எப்படி..? | Egg Noodles Recipe in Tamil..!

இக்காலத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்த உணவு என்றால் அது ஃபாஸ்ட் ஃபுட் தான். அதிலும் நூடுல்ஸ் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் எக் நூடுல்ஸ் என்றால் நம் வீட்டு குழந்தைகள் கேட்டு விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். நீங்கள் நூடுல்ஸ்ல பல ரெசிபி செய்து இருப்பீங்க..! ஆனா எக் நூடுல்ஸ் செய்திருக்கிறீர்களா..? ஆமாங்க வீட்டிலே சுவையான எக் நூடுல்ஸ் செய்து அசத்தலாம். அதுவும் ஹோட்டல் சுவையில்…! வாருங்கள் எக் நூடுல்ஸ் செய்வது எப்படி.? என்று இப்பதிவில் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

எக் நூடுல்ஸ் செய்வது எப்படி..?

எக் நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

  1. நூடுல்ஸ்- 1 பாக்கெட்
  2. முட்டை- 4
  3. பீன்ஸ்- 3
  4. கேரட்- 1
  5. குடை மிளகாய்- 1
  6. பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு- 1 ஸ்பூன்
  7. பச்சை மிளகாய்- 1
  8. பெரிய வெங்காயம்- 1
  9. தக்காளி சாஸ்- 2 ஸ்பூன் 
  10. சோயா சாஸ்- 1 டீஸ்பூன் 
  11. சர்க்கரை- சிறிதளவு 
  12. ஸ்ப்ரிங் ஆனியன்- தேவையான அளவு 
  13. வெள்ளை மிளகுத்தூள் – சிறிதளவு
  14. எண்ணெய்- தேவைக்கேற்ப 
  15. உப்பு- தேவையான அளவு 

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜ் நூடுல்ஸ் செய்முறை !!!

எக் நூடுல்ஸ் செய்முறை விளக்கம்:

ஸ்டேப்: 1

simple egg noodles recipe  in tamil

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்கவைக்கவும். பிறகு அதனுடன் நூடுல்ஸ் போட்டு 6 லிருந்து 7 நிமிடம் வரையில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

பிறகு அதை எடுத்து ஒரு பெரிய தட்டில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். இப்போது இரண்டு கரண்டிகளை எடுத்து நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்றாக ஒட்டாமல் பிரித்து வைத்து விடவும்.

ஸ்டேப்: 3

அதன் பின் முட்டைகளை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.  பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டைகளை போட்டு லேசாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் ⇒ மீந்து போன சப்பாத்தியில் நூடுல்ஸ் செய்யலாம் வாங்க

ஸ்டேப்: 4

recipes with egg noodles in tamil

அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கி வைத்த இஞ்சி மற்றும் பூண்டுகளை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பிறகு நறுக்கி வைத்த பச்சை மிளகாய், வெங்காயம், கேரட், குடை மிளகாய், பீன்ஸ் மற்றும் ஸ்ப்ரிங் ஆனியன் இவை அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 5

முட்டை நூடுல்ஸ் செய்வது எப்படி

2 நிமிடம் கழித்த வேகவைத்த நூடுல்ஸ், வறுத்த முட்டை, சோயா சாஸ், தக்காளி சாஸ் இவை அனைத்தையும் அடுப்பில் இருக்கும் பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

அதன் பின் சிறிதளவு வெள்ளை மிளகுத்தூள், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிண்டி விடுங்கள். அவ்வளவு தாங்க சுவையான எக் நூடுல்ஸ் ரெடி..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil

முருகருக்கு பிடித்த திருப்பாகம் செய்வது எப்படி.?

இதை சாப்பிட்ட ஒரே வாரத்தில் உடலில் உள்ள கொழுப்பு சரசரவென்று குறையும்.!