சுவையான சமையல் – முட்டை போண்டா சமையல் செய்முறை விளக்கம்..!

சமையல் செய்முறை விளக்கம்

அசைவ சமையல் செய்முறை (Egg Recipes In Tamil)..!

முட்டை போண்டா செய்முறை விளக்கம்

இன்று சமையல் குறிப்பு பகுதியில் சுவையான சமையல் செய்முறை விளக்கம் அதாவது முட்டை போண்டா செய்வது எப்படி (egg recipes in tamil) என்று தான் இந்த பகுதியில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

சரி வாங்க சுவையான சமையல் செய்முறை விளக்கம் பற்றி தெரிந்து கொள்வோம்.

சைனீஸ் ஸ்பெஷல் டிராகன் சிக்கன் செய்வது எப்படி?

முட்டை போண்டா (Egg recipes in tamil) செய்ய தேவையான பொருட்கள்:

 1. முட்டை – 4
 2. எண்ணெய் – தேவையான அளவு
 3. பொடிதாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று.
 4. பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் – இரண்டு
 5. உப்பு – தேவையான அளவு.
 6. மிளகு தூள் – சிறிதளவு
 7. பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடியளவு.
 8. கடலை மாவு – 3/4 கப் 
 9. அரிசி மாவு – இரண்டு மேசைக்கரண்டி.
 10. மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி.
 11. ஓமம் – 1/4 தேக்கரண்டி.
 12. தண்ணீர் – தேவையான அளவு.
சிக்கன் பரோட்டா செய்முறை..!

முட்டை போண்டா செய்முறை விளக்கம்:

முட்டை போண்டா சமையல் செய்முறை விளக்கம் ஸ்டேப் :1

முதலில் முட்டையை நன்றாக வேகவைத்து, பின்பு அவற்றில் இருக்கும் ஓடை நீக்கிவிட்டு முட்டையை சரி பாதியாக நறுக்கி அவற்றில் இருக்கும் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவினை தனித்தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

முட்டை போண்டா சமையல் செய்முறை விளக்கம் ஸ்டேப் :2

முட்டைக்குள் வைப்பதற்கு பூரணம் தயார் செய்ய வேண்டும், அதற்கு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்தும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

முட்டை போண்டா சமையல் செய்முறை விளக்கம் ஸ்டேப் :3 

வெங்காயம், பச்சை மிளகாய் நன்றாக வதங்கியதும் அவற்றில் தேவையான அளவு உப்பு, சிறிதளவு மிளகு தூள் மற்றும் அவித்து தனியாக வைத்துள்ள முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். கலவை நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

முட்டை போண்டா சமையல் செய்முறை விளக்கம் ஸ்டேப் :4

இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள கலவையை முட்டையின் வெள்ளை கருவில் வைத்து முட்டையை மூட வேண்டும். இவ்வாறு செய்து முட்டையை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

முட்டை போண்டா சமையல் செய்முறை விளக்கம் ஸ்டேப் :5

இப்பொழுது முட்டை போண்டா செய்வதற்கு மாவு தயார் செய்ய வேண்டும் அதற்கு ஒரு கிண்ணத்தில் 3/4 கப் கடலை மாவு, அரிசி மாவு இரண்டு மேசைக்கரண்டி, சிறுதளவு மிளகு தூள், சிறிதளவு ஓமம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

முட்டை போண்டா சமையல் செய்முறை ஸ்டேப் :6

இப்பொழுது அடுப்பில் ஒரு கடையை வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக சூடேறியதும், முட்டையை கலந்து வைத்துள்ள மாவில் நனைத்து பொரித்து எடுத்தால், சுவையான முட்டை போண்டா (egg recipes in tamil) தயார்.

அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.

டேஷ்டான பால் கொழுக்கட்டை செய்யும் முறை..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!