கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக் செய்யலாம் வாங்க | Fruit Cake Recipe in Tamil

Advertisement

ப்ரூட் கேக் செய்வது எப்படி | Christmas Cake Recipe in Tamil

கிறிஸ்துமஸ் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது கேக் தான். இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் தினம் அன்று கிறித்தவ மதத்தினர் அனைவரும் கேக் வெட்டி அந்த நாளினை சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். கேக் வெரைட்டிகளில் பல வகையான கேக் ரெசிப்பிக்கள் உள்ளன. அதிலும் ப்ரூட் கேக் என்று சொன்னாலே அது சுவையே தனிதான். ஃபுரூட் கேக்கிற்கு பழம் வகைகளை நாம் ஒரு மாதத்திற்கு முன்பே ஊறவைத்து செய்தால் டேஸ்டியாக இருக்கும். அப்படி செய்ய முடியாதவர்கள் கிறிஸ்துமஸ் வரவிருக்கும் ஒரு வாரத்திற்கு முன்பே ஊறவைத்து செய்தால் கேக்கானது இன்னும் அசத்தலாக இருக்கும். வாங்க எப்படி ஃபுரூட் கேக் செய்யலாம் என்று பார்ப்போம்..

பிளம் கேக் செய்வது எப்படி?

ப்ரூட் கேக் செய்ய தேவையான பொருள்:

ரம் மற்றும் பிராந்தியில் ஊற வைத்த பழங்கள் – 3 கப் அளவு

கேக் கேரமல் தயாரிக்க:

  • சர்க்கரை – 1 கப்
  • தண்ணீர் – 1 கப்

கேக் தயார் செய்ய:

  • மைதா – 2 1/2 கப்
  • இன்ஸ்டன்ட் காபி தூள் – 1 டீஸ்பூன்
  • பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்
  • பட்டை தூள் – 1 டீஸ்பூன்
  • கிராம்பு தூள் – 1 டீஸ்பூன்
  • ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
  • ஜாதிக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – 1/4 டீஸ்பூன்
  • உப்பில்லாத வெண்ணெய் – 1 கப்
  • நாட்டுச்சர்க்கரை – 1 1/2 கப்
  • முட்டை – 5
  • வென்னிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன்
  • கேரமல் – 1 கப்
  • ஊற வைத்த பழங்கள் – 3 கப்
  • ரம் – 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

கேரமல் செய்வதற்கு 

ஸ்டேப்: 1 ப்ரூட் கேக் செய்ய முதலில் ஒரு வாணலியில் சர்க்கரையை சேர்த்து, அடுப்பில் வைத்து சர்க்கரையை நன்றாக கரைய வைக்கவும். முக்கியமாக இந்த நேரத்தில் கரண்டியைப் உபயோகப்படுத்தக்கூடாது.

ஸ்டேப்: 2 அடுப்பில் சர்க்கரையானது நன்றாக கரைந்து பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். முக்கியமாக சர்க்கரை அடிப் பிடிக்காமல் பார்த்து கவனமாக செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 3 அடுப்பில் நன்றாக சர்க்கரையானது கரைந்து பொன்னிறம் ஆன பிறகு, அதனை அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, பின் கரண்டியால்  கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு நிமிடம் கிளறி இறக்கி கலவையை குளிர வைக்க வேண்டும்.

கேக் ரெடி செய்வதற்கு:

ஸ்டேப்: 4 கேக் தயார் செய்ய ஓவனை முதலில் 160 டிகிரி செல்சியஸ் அளவிற்கு ஹீட் செய்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 5 பிறகு 2, 8×2 இன்ச் பேனில் சிறிது வெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 6 அடுத்து தனியாக ஒரு பவுலில் மைதா, காபி பவுடர், பேக்கிங் பவுடர், ஏலக்காய் பொடி, பட்டை தூள், கிராம்பு தூள், ஜாதிக்காய் பொடி மற்றும் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 7 பின்பு மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்த, எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு 5 நிமிடம் மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 8 அடுத்து அதில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி நன்றாக நன்கு அடிக்க வேண்டும்.

சுவையான சாக்லேட் கேக் செய்வது எப்படி?

 

ஸ்டேப்: 9 பின் வென்னிலா எசன்ஸ் மற்றும் குளிர வைத்துள்ள கேரமல் சேர்த்து நன்றாக இப்போது கிளறவும்.

ஸ்டேப்: 10 அதன் பிறகு அதில் மைதா கலவையை கட்டி சேராதவாறு சேர்த்து கிளறி விட வேண்டும்.

ஸ்டேப்: 11 இப்போது ஊற வைத்துள்ள பழங்களை சேர்த்து கிளறி, பேக்கிங் செய்யக்கூடிய பேனில் ஊற்ற வேண்டும்.

ஸ்டேப்: 12 கடைசியாக அதனை ஓவனில் 1 மணிநேரம் வைத்து, பேக் செய்ய வேண்டும். பேக் செய்த பிறகு, அதனை திறந்து ஒரு டூத்பிக் கொண்டு குத்தி பார்க்கும் போது, அதில் மாவு ஒட்டியிருந்தால், மீண்டும் பேக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 13 பிறகு அதனை ஓவனில் இருந்து வெளியே எடுத்து குளிர வைத்து, பின் பேனில் இருந்து ஒரு தனி தட்டிற்கு மாற்ற வேண்டும்.

ஸ்டேப்: 14 பின் கேக்கில் ஆங்காங்கே லேசான ஓட்டைகளைப் போட்டு, கேக்கின் மேல் ரம்மை தெளித்துவிட்டு, காற்றுப்புகாத ஒரு பாக்சில் போட்டு வைத்து, 2-3 நாட்கள் கழித்து சாப்பிட்டால் ப்ரூட் கேக் சுவையாக இருக்கும். வருகின்ற கிறிஸ்துமஸ் தினத்தன்று அனைவரும் தங்களுடைய வீட்டில் செய்து அசத்துங்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement