உங்க வீட்டில் பழங்கள் இருக்கா..? அப்போ இந்த ரெசிபியை ஒரே ஒருமுறை செய்து சுவைத்து பாருங்கள்..!

Fruit Custard Recipe in Tamil

Fruit Custard Recipe in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே தினமும் ஏதாவது ஒரு புதுவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் ஒரு வீட்டில் குழந்தைகள் இருந்தார்கள் என்றால் அவர்கள் தினமும் ஏதாவது ஒரு புதுவகையான தின்பண்டம் செய்து தருமாறு கேட்பார்கள். அப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு நாம் எப்போதும் செய்கின்ற பட்சி, வடை, போண்டா ஆகியவற்றை தான் செய்து தருவோம். ஆனால் அவையாவும் நமது குழந்தைகளின் உடல் நலத்திற்கு மிகவும் கெடுதலை விளைவிக்கும். அதனால் தான் இன்று Fruit Custard செய்வது எப்படி என்பதை பார்க்க போகின்றோம். இந்த Fruit Custard குழந்தைகளின் உடல் நலத்திற்கு மிகவும் நன்மையை அளிக்கும். மேலும் ஒரு புதிய மற்றும் ஆரோக்கியமான ஒரு ஸ்னாக்ஸ் செய்து கொடுத்த மனத்திருப்தி நமக்கு கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கஸ்டர்ட் செய்முறை:

Custard Recipe in Tamil

மிகவும் எளிமையான முறையில் Fruit Custard செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம். முதலில் இந்த Fruit Custard செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பால் – 1 1/2 கப் 
  2. சர்க்கரை – 1/2 கப் 
  3. கஸ்டர்ட் பவுடர் – 1/2 கப் 
  4. பழங்கள் – 3 கப் 
  5. பாதாம் – 10 
  6. பிஸ்தா – 10 
  7. முந்திரி – 10

கோடைகாலத்தில் அடிக்கிற வெயிலுக்கு ஏற்ற மாதிரி குளு குளுன்னு பன்னீர் ரோஸ் ஜெல்லி செய்து சுவைத்து பாருங்கள்

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 10 பாதாம், 10 பிஸ்தா மற்றும் 10 முந்திரி ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள எடுத்துவைத்துள்ள 1 1/2 கப் பாலில் இருந்து 1 கப் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள்.

கோடை காலத்தில் எத்தனையோ சர்பத் குடிச்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு சர்பத்தை குடிச்சிருக்கவே மாட்டீங்க

ஸ்டேப் – 3

பிறகு மீதமுள்ள 1/2 கப் பாலில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 கப் கஸ்டர்ட் பவுடரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நாம் அடுப்பில் கொதிக்கவைத்துள்ள பாலில் ஊற்றி நன்கு கலந்து ன்கு கொதிக்கவிடுங்கள்.

ஸ்டேப் – 4

Custard Recipe in Tamil

அடுத்து அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1/2 கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்கு குளிர வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதில் 3 கப் பழங்கள் மற்றும் நாம் முன்னரே நறுக்கி வைத்துள்ள பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவற்றை சேர்த்து அனைவருக்கும் பரிமாறலாம்.

இப்பொழுது நமது Fruit Custard தயாராகிவிட்டது வாங்க சுவைக்கலாம், நீங்களும் இந்த Fruit Custard-யை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.

உங்க வீட்ல பிரட் இருக்கா அப்போ கோடை காலத்திற்கு ஏற்ற குளுகுளு குல்ஃபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil