கோதுமை மில்க் கேக் செய்வது எப்படி.? | Godhumai Milk Cake Recipe in Tamil..!
வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நண்பர்களே… இன்று நாம் அனைவருக்கும் பிடித்து விரும்பி சாப்பிட கூடிய ஒரு ஸ்வீட் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். உங்கள் வீட்டில் ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் போதும் அனைவருக்கும் பிடித்த கோதுமை மில்க் கேக் சுவையாக நீங்களும் செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க நண்பர்களே கோதுமை மில்க் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்…
கோதுமை மில்க் கேக் செய்ய தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – 1 கப்
- தயிர் – கால் கப்
- நெய் – தேவையான அளவு
- பால் – 3 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
- சர்க்கரை – முக்கால் கப்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – கால் கப்
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவல் லட்டு செய்வது எப்படி..?
கோதுமை மில்க் கேக் செய்முறை:
Step: 1
ஒரு கிண்ணத்தில் கால் கப் தயிர் சேர்த்து அதனுடன் 2 ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். பின், இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
Step: 2
இரண்டையும் நன்றாக கலந்த பிறகு 1 கப் கோதுமை மாவை சேர்த்து அதனுடன் 3 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போன்று பிசைந்து கொள்ள வேண்டும்.
Step: 3
பிணைந்து வைத்த மாவு அனைத்தையும் ஒன்றாக வைத்து சப்பாத்தி கட்டையில் நன்கு தேய்த்து கொள்ளவும். பின்னர் அதை சிறிய சிறிய துண்டுகளாக கட்டமாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
Step: 4
பின் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறிய துண்டுகளாக கட் பண்ணி வைத்ததை போட்டு பொறித்து எடுத்து கொள்ள வேண்டும். நன்கு பொன்னிறமாக வறுபடும் வரை பொறிக்க வேண்டும்.
Step: 5
பின்னர் ஒரு கடாயில் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து கொள்ளவேண்டும். அதனுடன் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொள்ளவேண்டும். பின் அதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு ஜீரா போன்று வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் பொழுது சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.
Step: 6
பின்னர் நீங்கள் பொறித்து வைத்துள்ள கோதுமை கேக் -யை இந்த ஜீராவில் போடவேண்டும். சர்க்கரை பாகு நன்கு இதனுடன் சேரும் வரை மூடி வைக்க வேண்டும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய கோதுமை மில்க் கேக் தயார்…
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |