ஆந்திர ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி செய்யலாம் வாங்க..

Advertisement

Green Chilli Chutney Andhra Style

பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாக இருப்பது டிபன் தான். அதிலும் இட்டலி இல்லையென்றால் தோசை தான். இதற்கு தினமும் தொட்டுக்கையாக இருப்பது சட்னி அல்லது சாம்பார், பொடி இவற்றை தான் மாற்றி மாற்றி செய்வார்கள். இப்படி செய்யும் போது தினமும் ஒரே மாதிரியான சட்னி செய்யாமல் வகை வகையாக செய்து சாப்பிட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் என்ன தான் சட்னி செய்வது பலரும் யோசித்து கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கு உதவும் வகையில் ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளவோ வாங்க..

தேவையான பொருட்கள்:

  • பச்சை மிளகாய் – 150 கிராம்
  • பூண்டு – 10 பல்
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • ஆப்பிள் சைடர் வினிகர் – சிறிதளவு
  • தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – சிறிதளவு

ஆந்திர ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி செய்முறை:

ஆந்திர ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி

பச்சை மிளகாய்:

முதலில் உங்களுக்கு தேவையான பச்சை மிளகாயை எடுத்து கழுவி கொள்ள வேண்டும். பின் இதனை லேசாக கீறி கொள்ள வேண்டும்.

வதக்க வேண்டும்:

அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். பச்சை மிளகாயின் நிறம் மாறும் வரை வரை வதக்க வேண்டும். பின் அதில் பூண்டு, மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.

பூண்டு சேர்ப்பது:

பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பூண்டின் பச்சை வாசனை நீங்கிய பிறகு அடுப்பை ஆப்செய்துவிட வேண்டும் .

அரைப்பது:

வதக்கிய பொருட்கள் ஆனது ஆறியதும், மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். முக்கியமாக பேஸ்ட்டாக அரைக்காமல் கொஞ்சம் கொரகொரவென்று அரைத்து கொள்ள வேண்டும்.

தாளிக்கும் முறை:

பின்பு தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு சிறிதளவு சேர்க்க வேண்டும். கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து பொறிக்க வேண்டும். இதனுடன் சட்னியை சேர்க்க வேண்டும்.

இந்த சட்னியானது ப்ரிட்ஜில் வைக்காமல் இருந்தால் 3 நாட்கள் வரைக்கும் வெளியே கெட்டு போகாமல் இருக்கும். அதுவே பிரிட்ஜில் வைத்தால் 15 நாட்கள் வரையும் கெட்டு போகாமல் இருக்கும்.

எப்போதும் போல் சட்னி செய்யாமல் கர்நாடகா ஸ்டைல் சட்னி செய்து கொடுங்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement