கல்யாண வீட்டு சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா செய்வது எப்படி..?

Advertisement

Green Peas And Potato Kurma in Tamil

குருமா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குருமா செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள். அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. பொதுவாக கல்யாண வீட்டு சமையல் என்றாலே அது தனி சுவைத்தான். அந்த வகையில் வீட்டில் செய்யும் குருமாவை விட கல்யாண வீட்டில் செய்யும் குருமாவிற்கே சுவை அதிகம். அப்படி என்னதான் போடுகிறார்கள் என்று தானே கேட்குறீர்கள். அப்படி கல்யாண வீட்டு குருமாவில் என்ன போட்டு சமைக்கிறார்கள் என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா செய்வது எப்படி.?

குருமா செய்ய தேவையான பொருட்கள்:

  • உருளைக்கிழங்கு- 3
  • பச்சை பட்டாணி- 100 கிராம்
  • தேங்காய் துருவல்- 1/2 கப்
  • சோம்பு-1 ஸ்பூன்
  • கடலை எண்ணெய்- 2 ஸ்பூன்
  • பட்டை- 1 சிறியது
  • கருவேப்பிலை- 1 கொத்து 
  • வெங்காயம்- 1 பெரியது
  • இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
  • மல்லி தூள்- 1/2 ஸ்பூன்
  • கரம் மசாலா- 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்

கறி இல்லை காய் இல்லை ரோட்டுக்கடை பரோட்டா குருமா டேஸ்ட் சும்மா அள்ளும்..!

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா செய்யும் முறை:

ஸ்டேப் -1

முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு நன்றாக கழுவி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

இப்போது, அடுப்பில் குக்கரை வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பிறகு இதில் பச்சை பட்டாணி மற்றும் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா செய்வது எப்படி

ஸ்டேப் -3

அடுத்து, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கடலை எண்ணெயை சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் பட்டை மற்றும் 1/2 ஸ்பூன் சோம்பு சேர்த்து பொன்னிறமாக பொரிய விடுங்கள்.

ஸ்டேப் -4

 கல்யாண வீட்டு பட்டாணி குருமா

பிறகு, இதில் நைசாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடுங்கள்.

ஸ்டேப் -5

இப்போது அடுப்பை குறைவாக வைத்து விட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், 1/2 ஸ்பூன் சோம்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

காய்கறிகள் இல்லாமல் சுவையான குருமா செய்யலாம்.!

ஸ்டேப் -6

 how to make green peas and potato kurma in tamil

அரைத்த தேங்காய் பேஸ்டினை, மசாலாவுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள்.

ஸ்டேப் -7

இப்போது, வேகவைத்து எடுத்து வைத்த உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து கலந்து விடுங்கள். இதனை 5 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்தால் கல்யாண வீட்டு பட்டாணி குருமா தயார்..!

 green peas and potato curry in tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement