அடுப்பு வேண்டாம், சமைக்க வேண்டாம், சத்தான ரெசிபி..!

Healthy Snacks Recipe

அடுப்பு வேண்டாம், சமைக்க வேண்டாம் இரண்டே நிமிடத்தில் மிக எளிதில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் (Healthy Snacks Recipe) எப்படி தயார் செய்வது என்று இப்போது நாம் காண்போம்.

 தேவையான பொருட்கள்:

 1. வறுத்த வேர்க்கடலை – 100 கிராம்
 2. பேரீச்சை பழம் (விதை நீக்கியது) – 100 கிராம்
 3. வெல்லம் – 50 கிராம்

செய்முறை விளக்கம்:

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும். அவற்றில் 100 – கிராம் வேர்க்கடலை, 100 – கிராம் பேரீச்சை பழம் மற்றும் 50 கிராம் வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

பின்பு அரைத்த கலவையை தண்ணீர் இல்லாத பவுலில் எடுத்து கொள்ளவும்.

பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். (இந்த கலவையுடன் முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றையும் சேர்த்து உருண்டை பிடிக்கலாம்)

அவ்வளவுதான் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையுள்ள மற்றும் ஆரோக்கியம் உள்ள ஸ்னாக்ஸ் (Healthy Snacks Recipe) தயார்.

இந்த ஸ்னாக்ஸை மிக எளிதில் இரண்டே நிமிடத்தில் தயார் செய்து, குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் (Healthy Snacks Recipe) கொடுத்தால் போதும்.

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மழை காலத்திற்கு ஏற்ற மசாலா டீ போடலாம் வாங்க..!

குழந்தைகளுக்கு பிடித்த சுவையான ஸ்னாக்ஸ் செய்வதை பற்றி பார்த்தோம் அல்லவா. அதே போல் குழந்தைகளுக்கு மழை காலத்திலும், பனிக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி மற்றும் காய்சல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு சுவையான மசாலா டீ போடுவது எப்படி என்று இப்போது நாம் காண்போம்.

தேவையான பொருட்கள்:

 1. பால் – 200 கிராம்
 2. டீத்தூள் – ஒரு ஸ்பூன்
 3. சர்க்கரை – இரண்டு ஸ்பூன்
 4. மிளகு – 5
 5. பட்டை – ஒரு சிறிய துண்டு
 6. ஏலக்காய் – 2
 7. கிராம்பு – 1
 8. இஞ்சி – துருவியது 1/2 ஸ்பூன்

மசாலா தயாரிக்கும் முறை:

மேல் கூறப்பட்டுள்ள மசாலா பொருட்களான மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் இஞ்சி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து உரலில் போட்டு இடித்து வைத்துகொள்ளவும். (ஒன்னிரண்டாக இடத்தால் போதும்)

செய்முறை:

அடுப்பில் பாலை ஊற்றி சிறிதளவு தண்ணீர் கலந்து நன்றாக காய்ச்சவும்.

பால் நன்றாக சுண்டியதும் அவற்றில் ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

பின்பு அவற்றில் இரண்டு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

பின்பு இடித்து வைத்துள்ள மசாலாவை கொதிக்கும் டீயில் சேர்த்து 4 முறை கொதிக்க வைத்து வடிகட்டினால் போதும் சுவையான மழை காலத்திற்கு ஏற்ற மசாலா டீ தயார்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE