கோதுமை மாவு அரைக்கும்போது இந்த பொருட்களையும் சேர்த்து அரையுங்கள்..! சுவையாக இருக்கும்..!

Advertisement

கோதுமை மாவு அரைக்க தேவையான பொருட்கள் | Homemade Wheat Flour in Tamil

Homemade Wheat Flour in Tamil: உலகம் முழுவதும் உபயோகப்படுத்தும் தானியங்களில் முதலிடம் கோதுமைக்கே. கோதுமையில் பல வகைகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். கோதுமையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. கோதுமையில் வைட்டமின் பி சத்து அதிகம் உள்ளது, மேலும் கோதுமையில் உடல் வளர்ச்சிக்கான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளதால், கோதுமையால் செய்யப்பட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் சாப்பிடலாம்.

இருந்தாலும் கோதுமை மாவை கடைகளில் ரெடிமேடாக வாங்கி பயன்படுத்துவதற்கு பதில், வீட்டிலேயே இன்னும் சில தானியங்களை சேர்த்து கோதுமை மாவை தயார் செய்தால் இன்னும் அதிக சத்துக்கள் நமக்கு கிடைக்கும். சரி வாங்க கோதுமை மாவு அரைக்கும் (கோதுமை மாவு அரைக்கும் முறை) பொது அதனுடன் சேர்க்க வேண்டிய 7 சிறு தானியங்கள் என்னென்னன் என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறிவோம்.

இட்லி,தோசை இல்லாத காலை உணவு சட்டுன்னு ஐந்தே நிமிடத்தில்..! Breakfast Recipes…

Wheat Flour Ingredients List | கோதுமை மாவு அரைக்க தேவையான பொருட்கள:

  1. கோதுமை – 2 கிலோ
  2. சம்பா கோதுமை – 250 கிராம்
  3. கேழ்வரகு – 100 கிராம்
  4. கருப்பு கொண்டைக்கடலை – 100 கிராம்
  5. பச்சை பயர் – 100 கிராம்
  6. மக்காச்சோளம் – 100 கிராம்
  7. கடலை பருப்பு – 100 கிராம்
  8. கம்பு 100 கிராம்

 Godhumai Maavu Araipathu Eppadi:

ஸ்டேப்: 1

மேல் கூறப்பட்டுள்ள சிறு தானியங்கள் அனைத்தையும் நன்கு சுத்தம் செய்துவிட்டு ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பின் கோதுமையையும் நன்கு சுத்தம் செய்து விட்டு, தண்ணீர் ஊற்றி அலசிவிட்டு வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

பின் நன்கு வெயில் அடிக்கும் பகுதில் ஒரு சுத்தமான காட்டன் துணியை விரித்து அவற்றில் அலசி வடிகட்டி தனியாக எடுத்து வைத்துள்ள சிறு தானியங்கள் மற்றும் கோதுமையை போட்டு நன்றாக காயவைக்கவும்.

ஸ்டேப்:4

கோதுமை நன்றாக காய்ந்ததும் மிஷினில் கொடுத்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அரைத்த கோதுமை மாவு மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். உடல் வளர்ச்சியை அதிகரிக்கும், எலும்புகளை பலப்படுத்தும்.

சப்பாத்தி மிருதுவாக இருக்க என்ன செய்வது அப்போ இதை try பண்ணுங்க..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal
Advertisement