ஹோட்டல் தோசை போல மொறு மொறுன்னு வேண்டுமா அப்ப இதை செய்ங்க

hotel dosa

ஹோட்டல் தோசை வேண்டுமா? அப்போ இதை TRY பண்ணுங்க…

என்ன தான் நம்ம வீட்டுல அம்மா தோசை சுட்டு கொடுத்தாலும், ஹோட்டல் தோசைக்கு இணை எதுவும் இருக்காது. இருந்தாலும் ஹோட்டல் தோசையை நம்ம அம்மா தினமும் நமக்கு சுட்டு கொடுத்தால் எப்படி இருக்கும். இனி கவலையை விடுங்க, இதை பண்ணுங்க. ஹோட்டல் தோசைக்கு இனி ஹோட்டலுக்கு போக வேண்டாம். இதை மட்டும் try பண்ணி தினமும் ஹோட்டல் தோசை (hotel dosa) நம் வீட்டிலேயே சாப்பிடுங்கள்.

சரி வாங்க சுவையான ஹோட்டல் தோசை (hotel dosa) போல மொறு மொறுன்னு எப்படி சுடுவது என்று இப்போது நாம் காண்போம்.

தேவையான பொருட்கள்:

  1. தோசை மாவு – ஒரு கப்
  2. அரிசி மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன்
  3. சர்க்கரை – இரண்டு ஸ்பூன்

செய்முறை:

ஒரு பவுலை எடுத்து கொள்ளவும் அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும்.

அரிசிமாவை கெட்டியாக கரைத்து கொள்ள வேண்டாம், தாராளமாக தண்ணீர் ஊற்றியே கரைத்து கொள்ளலாம்.

இந்த கரைத்த அரிசி மாவு கலவையை தோசை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

(அரிசி மாவு எதற்காக சேர்க்கிறோம் என்றால் நல்ல மொறு மொறுப்பு தன்மையை தருவதற்காக இந்த அரிசி மாவை பயன்படுத்துகின்றோம்)

பின்பு இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

அவ்வளவு தான் அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து தோசை ஊற்றி அதன் மேல் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மூடியை கொண்டு மூடி இரண்டு நிமிடம் கழித்து தோசையை எடுத்தால் போதும், ஹோட்டல் கிடைக்கும் மொறு மொறுப்பான தோசை ரெடி…

மீதமுள்ள தோசை மாவுகளை இவ்வாறே ஊற்றி எடுக்கவும்.

இனி ஹோட்டல் தோசைக்கு (hotel dosa) ஹோட்டலுக்கு போகவேண்டாம் இதையே Try பண்ணுங்கள்.

தோசைமாவு வழக்கமாக கரைப்பதை விட, கொஞ்சம் தண்ணீராக கரைத்து கொண்டால் தோசை உற்றுவதற்கு மிகவும் ஈசியாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் தோசை நன்றாக மொறு மொறுவென்று இருக்கும்.

இந்த டிப்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE